தைராய்டை சரிசெய்யும் ஆரோக்கிய உணவுகள் (Foods for Thyroid)
தைராய்டு நோயை உணவின் (Foods for Thyroid) மூலமே குணப்படுத்த முடியும். எல்லாவிதமான
ஒருவர் சாப்பிடும் ஊட்டச்சத்தான உணவு , சரியான உடற்பயிற்சி, அதிகளவு நீர் அருந்தும் பழக்கம் போன்றவற்றால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
கழுத்தின் அடிப்பகுதியில் உள்ள சிறிய பட்டாம்பூச்சி வடிவ அமைப்பு தான் தைராய்டு. இது உடலில் தைராய்டு ஹார்மோன்களை சுரக்க காரணமாகிறது. தைராய்டு ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தையும், ஆற்றலை உருவாக்கும் வேகத்தையும் பாதிக்கிறது.
இது மட்டுமல்லாமல், தைராய்டு தலை முடி வளர்ச்சிக்கும், உடல் வெப்பநிலை, எடை, இதயத் துடிப்பு மற்றும் கருவுறுதல் மற்றும் மூளை வளர்ச்சியுடன் மனநிலை மாற்றத்திற்கும் உதவுகிறது.
சுரப்பி சரியாக செயல்படாதபோது , ஒரு நபர் பல சிக்கல்களை அனுபவிக்க முடியும். இதை இலகுவாக அன்றாடம் உண்ணும் உணவுன் மூலம் சரி செய்ய முடியும்.
தைராய்டை சரிசெய்யும் ஆரோக்கிய உணவுகள் (Foods for Thyroid)
- நம் உடலின் தைராய்டு சுரப்பி சீராக வேலை செய்வதற்கு அயோடின் சத்து அவசியமாகிறது. தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
- தயிரிலிருந்து தயாரிக்கப்படும் யோகர்ட் (குறைந்த கொழுப்புள்ள தயிர்) அதிக அயோடின் சத்துள்ள உணவாகும். எனவே, தினசரி உணவில் யோகர்ட் (Yogurt) சேர்த்துக்கொள்ளலாம்.
- ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது. எனவே இந்த உணவு தேவையான அயோடின் சத்து கிடைக்கச் செய்கிறது.மேலும், முட்டை தைராய்டு சுரப்பிக்கும் மிகவும் தேவையான ஒன்று.இத்தகைய உணவுகளில் கல்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.

- உடலில் துத்தநாகச் சத்து குறைபாட்டால் ஹைப்பர் தைராய்டிஸம் ஏற்படுகிறது.கோழிக்கறி மற்றும் மாட்டிறைச்சியில் அதிகளவு துத்தநாகச் சத்து உள்ளது. மாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.
- இதுதவிர சமையலுக்கு சாதாரண உப்பைப் பயன்படுத்துவதை விட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும்.
- ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.
அயோடின் மட்டுமன்றி, செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம்.
செலினியம் அதிகம் உள்ள உணவுகள்
செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் சிறந்தது.
காளானில் செலினியம் அதிகம் உள்ளtதால் , அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
மாட்டின் ஈரலில் வைட்டமின் பி12 மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், செலினியம் குறைபாடு இருந்தால் குணமாக்கலாம்.
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது.
தானியங்களில் சிவப்புஅரிசி, ஓட்ஸ்,கொள்ளு மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன.
இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.

இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.
தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.
தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காப்பர் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது.
எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும்.
மேலும் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்புக் கிடைக்கும்.
உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செயற்பட முடியாது.