அல்சர் நோய் போக்கும் உணவுகள் (Foods for ulcer)

*உணவே மருந்து‘ என்பதற்கேற்ப அல்சரை நாம் உண்ணும் குறிப்பிட்டசில உணவுகள் வயிற்று அல்சரை சரிசெய்ய (Foods for ulcer) உதவும். அந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, அல்சரை விரைவில் குணமாக்க உதவும்.

அவசரமான வாழ்க்கை முறையால் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதும், பட்டினியாக இருப்பது தான் அல்சர் ஏற்பட  காரணம்..

 சாப்பிடாமல் இருப்பதால், இரைப்பையில் சுரக்கப்படும் அமிலம் கொஞ்சம் கொஞ்சமாக இரைப்பை சுவற்றை அரிக்க ஆரம்பித்து, புண்ணாக்கிவிடும். இதைத் தான்  அல்சர் என்கின்றோம்.

எல்லோருமே அவரவர் உடல் உழைப்பிற்கு தேவையான அளவு  உணவை எடுத்துக்கொள்ள  வேண்டும்.அதுவும் பசித்த பின்பே புசிக்க வேண்டும். இது தான் உணவு விதி.

இதை பின்பற்றினாலே போதும், தேவையில்லாமல் எந்த நோயுமே நம்மை நெருங்காது.

இது எல்லோருக்குமே பொதுவானது. மேலும் அல்சர் நோய் உள்ளவர்கள் இதைக் கட்டாயம் கடைப்பிடித்தால்  மிகுந்த நன்மை பெறமுடியும்.

அல்சர் நோய் உள்ளவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் (Foods for ulcer)

அல்சர் நோய் உள்ளவர்கள் சாதாரண சாதத்திற்கு பதிலாக  பால் சாதம், தயிர் சாதம் ,பீட்ரூட்சாதம், தேங்காய்சாதம்  மோர்சாதம் போன்றவற்றை உண்பது வயிற்று எரிச்சலைக் குறைக்கும்.

தினமும் நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும் இதனால் செரிமானம் சீராக இருக்கும்.

உணவில் இளநீர், புடலங்காய், கரட், முட்டைகோஸ், வாழைப்பழம், மணத்தக்காளிப்பழம், மணத்தக்காளி கீரை, கீரைவகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகள், பீட்ரூட், பீட்ரூட்சாதம் ,தேங்காய்,தேங்காய் பால்  ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிக குளிர்ச்சியான பானங்களையும், மிக சூடான பானங்களையும் தவிர்த்து சாதாரண வெப்பநிலையில் உள்ள நீரையே அருந்துதல் நலம் பயக்கும்.

சீரகதண்ணீர்  (Jeera water) அடிக்கடி அருந்தி வருவதும் மிக நல்லது.

பொதுவாக துவர்ப்பு சுவையுள்ள நாவல்பழம், சப்போட்டா பழம், மாதுளம் பழம், சுண்டைக்காய், அத்திப்பழம் (Figs) ஆகியவற்றை அல்சர் நோயாளிகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.

அல்சர் நோய் உள்ளவர்கள் உண்ண வேண்டிய உணவுகள் (Foods for ulcer) பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக  பார்க்கலாம்.

பூண்டு உணவின் மணத்தை அதிகரிப்பதோடு, வயிற்று அல்சரையும் விரைவில் சரிசெய்ய உதவும். இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள், வயிற்று புண்களை சரிசெய்ய தூண்டும். அதே சமயம் பூண்டு (Garlic) நோயெதிர்ப்பு சக்தியையும்  கொடுக்கும்.

கிரான்பெர்ரியில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள் அல்சர் பிரச்சனைக்கு இது சிறந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. இதனை அல்சர் நோயாளிகள் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், அல்சரை விரைவில் சரிசெய்யலாம்.

Foods for ulcer,annaimadi.com,remedy for ulcer,foods for ulcer patients,foods for ulcer relief,bestfoods for ulcer

தயிரை (yogurt) அன்றாட உணவில் அல்சர் நோயாளிகள் சேர்ப்பது நல்லது. இதில் உள்ள புரோபயோடிக் என்னும் நல்ல பாக்டீரியாக்கள், அல்சரை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடி அழித்து, அல்சர் வராமல் தடுக்கும்.

மேலும் தயிரை உட்கொள்வதன் மூலம், ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கலாம்.

அல்சர் பிரச்சனைக்கு தற்போதைய மருத்துவத்தில் மருந்துகள் இருந்தாலும், சரியான உணவு முறையை (Diet) பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.
அதோடு தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *