அல்சரும் தவிர்க்கவேண்டிய உணவுகளும் (Foods to avoid for ulcers)

அல்சர் ஆயுட்கால நோய் அல்ல. பழக்கவழக்கங்கள், உணவுக் கட்டுப்பாடுகளை (Foods to avoid for ulcers) கடைபிடித்து வர முற்றிலும் குணமாக்கிவிட முடியும்.

அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதிகமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் (Foods to avoid for ulcers) தவிர்த்தால் அல்சரை அறவே ஒழித்து விடலாம்.

வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும்.

அத்தகைய பிரச்சனைகளில் தலையாயது அல்சர்! பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.

அல்சர் ஏற்பட பொதுவான காரணங்கள் (Common Causes of Ulcers)

  • உடலில் ஏற்படும் நோய்களுக்கு இரசாயன மருந்துகளை உட்கொண்டு குணமடைந்தாலும், மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள், பின்விளைவுகளால் உடலின் உட்புறத்தில் உள்ள உறுப்புகள்  மற்றும் சதைப்பகுதிகள் பாதிக்கப்பட்டு இரணமாவது
  • குடிபழக்கத்தால் குடலில் ஏற்படும் புண்
  • உண்ணும் பொருளில் விஷக்கிருமிகள் கலந்து சென்று தாக்குதல்
  • நேரம் தவறி சாப்பிடுதல்
  • மலச்சிக்கல், கோபம், பயம், அதிர்ச்சி போன்றவை
  • நரம்புத்தளர்ச்சி, மன அழுத்தத்தால் ஏற்படும் மந்தநிலை. இதனால் வயிற்றில் சுரப்பு நீர் கட்டுப்பாடுடன் சுரக்காமல் அதிக அளவில் சுரந்து  அல்சரை உண்டாக்குகிறது.  

Things to avoid for ulcers,Things to avoid with ulcers,what to avoid for ulcers,ulcer,food for ulcer,food to avoid for ulcers,annaimadi.com,அல்சர் எப்படி உருவாகிறது,அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் ,Foods to avoid for ulcers,Common Causes of Ulcers,அல்சர் ஏற்பட பொதுவான காரணங்கள்

அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods to avoid for ulcers)

இரைப்பை புண் உள்ளவர்கள் இளநீர் குடிக்க கூடாது.குடல் புண் உள்ளவர்கள் இளநீர் குடிக்கலாம்.
புளி வகை உணவுகளை சேர்க்க கூடாது.
தயிர்,மிளாகாய் போன்ற காரமானவற்றை சேர்க்க கூடாது.
கடினமான எளிதில் ஜீரணம் ஆகாத உணவு வகைகளை தவிர்க்கவும்.
குளிர்பானங்கள் அனைத்தையும் தவிர்க்கவும்.
மதுபானங்களை நிறுத்தவும்.
பீடா, புகையிலை,புகை பிடித்தல் கூடாது.
காபி, டீ  அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. அவை அல்சரை அதிகபடுத்தும்.
மசாலா மற்றும் வறுக்கபட்ட உணவுகள்.
இத்துடன் வயிறு எரிச்சலை தூண்டும் உணவுகளை தவிர்க்கவும்.
பூண்டு சேர்க்கபட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்கவும்.
குளிரூட்டபட்ட உணவுகள் வேண்டாம்.
உப்பு குறைவாக பயன்படுத்துங்கள்.
கடையில் கிடைக்ககூடிய குழம்பு, பேக்கரி உணவுகள், ஹோட்டல் உணவுகள், பாஸ்ட்புட் அனைத்தும் தவிர்த்தால் நல்லது.

அல்சர் எப்படி உருவாகிறது (How Ulcers Form)

டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும் போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும்.

அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, ‘ஹெச் பைலோரை’ (H Pylori) என்ற நுண்கிருமி தான். இது ஒரு வகையான பாக்டீரியா.

உணவுப் பொருட்கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம். இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான ‘டியோடினம் ‘என்ற பகுதியில் தான் அல்சர் உருவாகும்.

இந்த வகை வயிற்றுப் புண்ணுக்கு ‘பெப்டிக் அல்சர்’ என்று பெயர். நாம் உண்ணும் உணவு இரைப்பைக்கு சென்று அமிலங்களால் சூழப்பட்டு தாக்குதல் நடத்தும். தொட்டால் விரல் வெந்து விடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர்கள் வலுவாக இருப்பதால், அமிலங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், இரைப்பையில் சுரக்கக் கூடிய அமிலத்தின் அளவு அதிகமாகும் போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில் கொண்டு விடும்.

Things to avoid for ulcers,Things to avoid with ulcers,what to avoid for ulcers,ulcer,food for ulcer,food to avoid for ulcers,annaimadi.com,அல்சர் எப்படி உருவாகிறது,அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் ,Foods to avoid for ulcers,Common Causes of Ulcers,அல்சர் ஏற்பட பொதுவான காரணங்கள்

வயிற்றில் புண் வந்து ஆறும் போது, அது தழும்பாக மாறும். இதனால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன் குடலுக்கு போகாது. எப்போதும் வயிறு ‘திம்’என்று இருக்கும். இதை சிலர், ‘சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை.வாயுத் தொல்லையாக இருக்குமோ?’ என்று நினைப்பார்கள்.

இப்படி அடைப்பு ஏற்படும் போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறு குடலுக்கு போய் விடும்.

ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கி விடும். இதனால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *