ஞாபக மறதியை போக்கும் உணவுகள் (Foods to boost memory)

ஞாபக சக்தியை அதிகரிக்க உங்கள் உணவில் சில முக்கிய உணவுகளை (Foods to boost memory) சேர்க்க வேண்டும்.

ஞாபக மறதி பிரச்சனையால் தற்போது பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். இதனால் முக்கியமான பணிகள் அல்லது பொருட்களை மறந்துவிடும் நிலை ஏற்படுகிறது.

தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிகமாக செல்போன்பயன்படுத்துவது மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவை நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது.

உடலில் உள்ள எந்த உறுப்பையும்விட அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்வது மூளைதான்.

தேவையான சத்துணவு, தேவையான அளவு கிடைக்காத போது மூளைக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

அதனால் மூளையின் செல்கள் அழிந்துவிடுதல், ‘அல்ஸீமர்ஸ்’ என்ற ஞாபகமறதி நோய், ஞாபகச் சக்தியை – ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றலை இழப்பது, பலவீனம், குழப்பம், நோய் தாக்குதல் முதலியவை ஏற்படுகின்றன.

மூளைக்கு எப்போதும் ஞாபகசக்தி இருக்க வேண்டும். அதற்கு வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது. மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு.

ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவு வகைகளாகும். ஏனென்றால், இந்த உணவு வகைகளில் போதுமான அளவு விற்றமின்கள், தாது உப்புகள் போன்றவை உள்ளன.

ஞாபகசக்தியை அதிகரிக்க

ஞாபகசக்தி குறைவாக இருப்பவர்கள் ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், முலாம்பழம் , அன்னாசி போன்ற பழ வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

கரட், தக்காளி,காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.

பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்தச் செல்கள் உருவாகவும் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன.

பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ்,சோயா எண்ணெய், போன்றவற்றை அதிக அளவு உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 ஞாபக மறதியை போக்கும் உணவுகள் ,Foods to boost memory,அன்னைமடி,ஞாபக சக்தி அதிகரிக்க,நினைவாற்றல் அதிகரிக்கும் உணவுகள்,annaimadi.com,foods for memory power

இது நம் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற உப்பு வகைகளைச் சமன் செய்து உடலைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட தண்டுக் கீரை, கொண்டைக் கடலை முதலியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், சத்துள்ள உணவு வகைகளால் அதிக அளவு ஆற்றல் கிடைக்கிறது.

அதனால் சோம்பேறித்தனம் நீங்கிச் சுறுசுறுப்பு அதிகமாகிறது.

மூளையை சுறுசுறுப்பாக்க

அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகளுடன் இரும்புச் சத்து நிறைந்துள்ள பேரீச்சம்பழம், பட்டாணி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கோபம், பதற்றம் போன்ற உணர்ச்சிகள் குறைய வழி கிடைக்கும். நரம்பு மண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள் (Foods to boost memory)

தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. கீரையில் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளது.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் இதனை தவிர்த்து விடுகின்றனர்.

ஆனால் மஞ்சள் கருவில் விற்றமின் டி, விற்றமின் பி 12, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால் இது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.

தயிர் நினைவாற்றல் அதிகரிக்க (Foods to boost memory)உதவுகிறது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை தயிர் சாப்பிடும் பெண்களிடம் யுசிஎல்ஏ நடத்திய ஆய்வு ஒன்றில், அவர்களின் மூளை செயல்பாட்டில் மாற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் தயிரில் குடல் ஆரோக்கியதை மேம்படுத்தும் ப்ரீபயாடிக் உள்ளது.

ஞாபக மறதியை போக்கும் உணவுகள் ,Foods to boost memory,அன்னைமடி,ஞாபக சக்தி அதிகரிக்க,நினைவாற்றல் அதிகரிக்கும் உணவுகள்,annaimadi.com,foods for memory power

மீன் அயோடின், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாகும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன.

எனவே வாரம் இரண்டு முறை மீன் உணவுகளை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

வால்நட்(Wallnut) நம் மூளை போல காட்சியளிக்கும். வால்நட் நமது மூளை செயல்பாட்டிற்கு மிக நல்லது என்பதே இதன் மூலம் புலப்படுகிறது.

தினமும் இதனை சாப்பிடுவதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அல்சைமர் நோய் வருவதை தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *