தைராய்டுசுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்(Foods to cure Thyroid deficiency)

தைராய்டுசுரப்பை உணவின் (Foods to cure Thyroid deficiency) மூலம் சரியான அளவில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

பல முக்கிய செயல்களில் ஈடுபடும் தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் ஏதும் வராமல், அதன் ஆரோக்கியத்தை ஒருசில உணவுகள் (Foods to cure Thyroid deficiency) மேம்படுத்தும்.

இந்த உணவுகளை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

தைராய்டு சுரப்பு அதிகமானால் உடல் எடை குறையும். உடல் சோர்வாக இருக்கும். சாதாரணக் குளிரைக் கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும்.

தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் உடல் எடை அதிகரிக்கும். இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம் உருவாகும்.

உடலில் தைராய்டு மிகவும் முக்கியமான சுரப்பி. இது கழுத்தின் முன் பக்கத்தில் பட்டாம்பூச்சி போன்ற வடிவில் இருக்கும் சுரப்பியாகும். இந்த தைராய்டு சுரப்பியில் உடலின் பல முக்கிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது.

அதில் உடல் எடைப் பராமரிப்பு, ஆற்றலைப் பயன்படுத்துவது, உணவை வளர்சிதை மாற்றம் செய்வது மற்றும் தூக்கம் போன்ற செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கவை.

இந்த தைராய்டு ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரும்பாலும் தைராய்டு பிரச்சனைகளால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள்.

தைராய்டு பிரச்சனைகளானது பெண்களுக்கு இறுதி மாதவிடாய் காலம், நாள்பட்ட மன அழுத்தம் போன்றவற்றால் வரக்கூடும். இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும்.

அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும்.

annaimadi.com, Foods to improve the health of the thyroid gland,foods to cure thyroid,அன்னைமடி,தைராய்டை குணமாக்கும் உணவுகள்,தைராய்டு குறைபாட்டை போக்கும்  உணவுகள்,தைராய்டு சுரப்பியின் செயற்பாட்டைமேம்படுத்த,Foods That Cure Thyroid Deficiency,Foods to cure Thyroid Deficiency

தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்(Foods to cure Thyroid deficiency)

ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் விற்றமின் பி உள்ளது. இவற்றை உணவில் சேர்ப்பதால் (Foods for Thyroid deficiency) தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும். மேலும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.

முட்டை தைராய்டு சுரப்பிக்கும் மிகவும் தேவையான ஒன்று. ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது.

தயிரில் அயோடின் சத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு கப் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும்.

அதிலும் தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே தைராய்டு பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உணவில் தேங்காய் எண்ணெயை அன்றாடம் சேர்த்து வாருங்கள்.

அயோடின் உணவுகள்(Iodine)

annaimadi.com, Foods to improve the health of the thyroid gland,foods to cure thyroid,அன்னைமடி,தைராய்டை குணமாக்கும் உணவுகள்,தைராய்டு குறைபாட்டை போக்கும்  உணவுகள்,தைராய்டு சுரப்பியின் செயற்பாட்டைமேம்படுத்த,Foods That Cure Thyroid Deficiency,Foods to cure Thyroid Deficiency

அயோடின் உணவுகள் தைராய்டு சுரப்பியில் தைராக்ஸின் உற்பத்திக்கு உதவும். தைராக்ஸின் உடலில் மெட்டபாலிசத்தை நிலையாக வைத்துக் கொள்ளும்.

ஆகவே தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். அயோடின் சத்து அன்னாசிப்பழம், அயோடைஸ்டு உப்பு, முட்டை, மீன் எண்ணெய் போன்றவற்றில் ஏராளமான அளவில் உள்ளது.

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6, தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை உறுதிபடுத்தப்படுகிறது.

 ஒமேகா கொழுப்பு அமிலங்கள் பூசணிக்காய், சால்மன், டூனா, வெங்காயம், பச்சை இலைக் காய்கறிகள், சூரியகாந்தி விதை, பூண்டு, எள்ளு மற்றும் வால்நட் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இதர புரோட்டீன்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், வாழைப்பழத்தை அன்றாடம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கடற்பாசி

கடல் காய்கறிகளில் அயோடின் பொதுவாக காணப்படும். அயோடின் தைராக்ஸின் உற்பத்திக்கு உதவும். உடலில் அயோடின் போதுமான அளவில் இல்லாவிட்டால், அது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை பாதித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைப் பாதிக்கும்.

எனவே கடல் காய்கறியான கடற்பாசியை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

செலினியம் உணவுகள்(Selinium)

தைராய்டு குறைபாட்டிற்கு செலினியம் மிகவும் முக்கிய பொருளாகும். இது தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த சத்து தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களை சமநிலையில் தக்க வைக்கும். இத்தகைய செலினியம் முட்டை, காளான்கள், கடல் சிப்பி, பூண்டு, பிரேசில் நட்ஸ் போன்றவற்றில் அதிகம் அடங்கியுள்ளது.  

annaimadi.com, Foods to improve the health of the thyroid gland,foods to cure thyroid,அன்னைமடி,தைராய்டை குணமாக்கும் உணவுகள்,தைராய்டு குறைபாட்டை போக்கும்  உணவுகள்,தைராய்டு சுரப்பியின் செயற்பாட்டைமேம்படுத்த,Foods That Cure Thyroid Deficiency,Foods to cure Thyroid Deficiency

பால் பொருட்கள்

ஹைப்பர் தைராய்டு பிரச்சனையினால் உடலில் கல்சியத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும். இதன் விளைவாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

எனவே கல்சியம் நிறைந்த உணவுகளான நெய், பால், சீஸ், தயிர் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். கல்சியம் சத்தானது அத்திப்பழம், பசலைக்கீரை, எள்ளு, முந்திரிப்பழம் போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.

ஜிங்க் உள்ள உணவுகள்(Zinc)

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், டயட்டில் ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இத்தகைய ஜிங்க் சத்து நிறைந்த பாதாம், வேர்க்கடலை, வால்நட்ஸ் போன்றவற்றுடன் இரும்புச்சத்து நிறைந்த பூசணி விதையையும் சாப்பிடுங்கள். இதனால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படும்.

இரும்புச்சத்து மற்றும் காப்பர் உணவுகள்

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மற்றும் காப்பர் மிகவும் உதவியாக இருக்கும். இந்த கனிமச்சத்துக்கள் தைராய்டின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

இதில் காப்பர் சத்தானது முந்திரி, சூரியகாந்தி விதை, கடல் சிப்பி, நண்டு, செரில்கள், விதைகள் மற்றும் கொக்கோ பொருட்களில் உள்ளது. இரும்புச்சத்தானது பச்சை இலைக் காய்கறிகள், மாட்டிறைச்சி, கோழி போன்றவற்றில் உள்ளது.

உடலால் இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்சுவதற்கு, வைட்டமின் சி அவசியமாகும். எனவே இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், தக்காளி,பெர்ரி போன்றவற்றையும் சாப்பிடுங்கள்.

பெர்ரிப் பழங்கள்

annaimadi.com, Foods to improve the health of the thyroid gland,foods to cure thyroid,அன்னைமடி,தைராய்டை குணமாக்கும் உணவுகள்,தைராய்டு குறைபாட்டை போக்கும்  உணவுகள்,தைராய்டு சுரப்பியின் செயற்பாட்டைமேம்படுத்த,Foods That Cure Thyroid Deficiency,Foods to cure Thyroid Deficiency

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், தினமும் தங்களது டயட்டில் ஒரு கப் பெர்ரி பழங்களை சாப்பிடுவது நல்லது. அதிலும் ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்டை ஒரு கப் சாப்பிடுவது நல்லது.

இதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தைராய்டின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும்.

தினை

தினையில் சையனோஜெனிக் க்ளுக்கோசைடுகள் ஏராளமான அளவில் உள்ளது. தினை அரிசியில் செய்த உணவுகள் தைராய்டு சுரப்பியில் உள்ள அதிகப்படியான அயோடினைத் தடுக்கும். மேலும்  தினைஅரிசிக்கு  நோயெதிர்ப்பு மண்டலத்தின் முறையான செயல்பாட்டிற்கும் உதவியாக இருக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர்(Cauli flower), ப்ராக்கோலி(Broccoli) போன்ற காய்கறிகள் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, இந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

சல்பர் அதிகம் உள்ள சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு சோடியம் சேர்க்கப்படுவதால் இது அயோடின் அளவையும் குறைத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *