உறக்கத்தை கெடுக்கும் பாத எரிச்சல்(Foot irritation)
பாதங்களில் எரிச்சல் (Foot irritation) உணர்வு ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்தில் உள்ள சில வகை பாதிப்பு அல்லது கோளாறுகள் காரணமாக இருக்கலாம்.
சில சமயங்களில் இது சர்க்கரை நோய் ,நாள்பட்ட குடிப்பழக்கம் மற்றும் சிலவகை மருந்துகளின் தாக்கம் போன்றவற்றால் கூட ஏற்படலாம்.
சர்க்கரைநோய் உள்ள பல பேருக்கு பாத எரிச்சல் (Foot irritation) என்பது தீராத தொந்தரவாக உள்ளது.
அதோடு விற்றமின் பி, ஃபோலிக் அமிலம், தையமின் அல்லது கல்சியம் குறைபாடுகள், காயங்கள், நாள்பட்ட சிறுநீரக நோய்கள்போன்றவற்றாலும் பாதங்களில் எரிச்சலை (Foot irritation) சந்திக்கலாம்.

பாத எரிச்சலை கட்டுப்படுத்த சித்த மருத்துவம் (Siddha medicine to control foot irritation)
- மருதாணியில் எலுமிச்சை சாறு சேர்ந்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம் செய்து வந்தால் பாத எரிச்சல் குறையும்.
- சுத்தமான சட்டியில் எட்டிப்பழத்தை வெதுப்பி பின் அதை தரையில் கொட்டி வெது வெதுப்பான சூட்டோடு இருக்கும் பொழுது பாதத்தில் மிதித்து பின் பாதத்தை சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும்.
- சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும். பாத வெடிப்பு குணமாகும்.
- இரவு உறங்கும் முன்பு வெந்நீரில் சிறுது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் காலை வைத்து பின் கால்களை சுத்தமான நீரால் கழுவி , நன்கு துடைத்து விட்டு பின் தேங்காய் எண்ணையை காலில் தடவி கொள்ள கால் எரிச்சல் குறையும்.
இரவு நேரங்களில் பாதங்களில் எரிச்சல் அதிகமாக இருந்தால் நொடியில் தடுக்க சில டிப்ஸ்
குளிர்ந்த நீர்
குளிர்ச்சியான நீர் பாதங்களில் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஒரு அகலமான வாளியில் குளிர்ச்சியான நீரை நிரப்பி, அந்நீரில் பாதங்களை சில நிமிடங்கள் வையுங்கள்.
பின் சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் குளிர்ந்த நீரில் வைத்திருக்கவும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்யுங்கள்.

விற்றமின் B3
விற்றமின் பி3 என்று அழைக்கப்படும் நியாசின், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நரம்புகளை வலிமைப்படுத்தவும், நரம்புகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது.
இந்த விற்றமின் பி3 நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.
ஆகவே முழு தானிய பொருட்கள், பால், தயிர், பச்சை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை மற்றும் முட்டை மஞ்சள்கரு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர் (Apple cider vinegar)
ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் pH அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் குடிக்க வேண்டும்.
அல்லது ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.
இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள் (Turmeric)
மஞ்சளில் உள்ள குர்குமின், உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவும்.
2 டீஸ்பூன் மஞ்சளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.
அல்லது 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர்ந்ததும் கழுவ வேண்டும்.
பாதங்களுக்கு மசாஜ்
சில எண்ணெய்களைக் கொண்டு பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுவும் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய், ஒலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயால் பாதங்களுக்கு குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள்.
இஞ்சியில் உள்ள உட்பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடனடி நிவாரணம் அளிக்கும்.
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் பாதங்கள் மற்றும் கால்களில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள்.
குறிப்பாக சர்க்கரைநோய் உள்ளவர்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல பாதத்திற்கும் கொடுக்கவேண்டும். அவ்வப்போது பாதங்களை சுத்தம் செய்வது மிக அவசியம்.