கால் ஆணியை நீக்க எளிய மருத்துவம் (Foot wart)

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் பலருக்கும் இருக்கும் கால் ஆணி(Foot wart) இதற்கு கால் புற்று என்று இன்னொரு  பெயரும் உண்டு.

காலில் ஆணி (Foot wart) வந்தவர்கள் ,கால் ஊன்றி நடக்க முடியாமலும் ,செருப்பு அணியா முடியாமலும் வலியால் அவதிப்படுவதை கண்டிருப்போம்.

காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் ,அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி (Foot wart) பலருக்கு வருகிறது.

இந்தக்கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் ஆறாத அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பும் உண்டு.

கால் ஆணி எதனால் ஏற்படுகிறது? (Reason for Foot wart)

  • காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்துதல்
  • அடுத்தவரின்  பாதணிகளை பயன்படுத்துதல்
  • வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்

கால் ஆணி போக்கும் தீர்வுகள்( Solution for Foot wart)

  1. கால் ஆணி ஏற்பட்ட  இடங்களில் பூண்டை நசுக்கி அதன் சாறை தடவி வரவும். இரவுப் பொழுதில் காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  2. மல்லிகைச்செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.
  3. வேப்பிலையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். வேப்பிலை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி உள்ள  இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சனை சரியாகும்.
    Foot wart remover ,Foot wart,அன்னைமடி,பாத ஆணி போக்க , காலாணிக்கு தீர்வு,காலாணிக்கு இயற்கை மருத்துவம்,natur medicine for foot wart,annaimadi.com,Reason for Foot wart
    குப்பைமேனி
  4. அம்மான் பச்சரிசி செடியை சிறிது  சிறிதாக உடைத்து  அதில் வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிதைத்து விடாது. தொடர்ந்து இரண்டு வாரமாவது செய்யுங்கள். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்து விடும். 
  5. மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும். 
    Foot wart remover ,Foot wart,அன்னைமடி,பாத ஆணி போக்க , காலாணிக்கு தீர்வு,காலாணிக்கு இயற்கை மருத்துவம்,natur medicine for foot wart,annaimadi.com,Reason for Foot wart
    வசம்பு
  6. மருதாணி இலை கொஞ்சம், மஞ்சள் துண்டு கொஞ்சம் இரண்டையும் எடுத்து மையாக  அரைக்க வேண்டும். ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு உறங்கப்போவதற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்ட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்து வர  கால் ஆணி இல்லாமல் போகும்.
  7. சித்திரமூலம் (கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து உறங்கப்போவதற்கு முன் கால் ஆணி மேல் பூசி வர. மூன்று நாட்களில் பலன் கிடைக்கும்.
  8. இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

இந்த மூலிகைகள் கிடைக்காதவர்கள் கால் ஆணிக்கு (foot wart remover) இயற்கையான மருந்துகளை வாங்கி பாவிக்கலாம்.

கால் ஆணி வராமல் தவிர்ப்பது எப்படி?

அடுத்தவர்களின் காலணிகளை பயன்படுத்துவதையும் உங்கள் காலணிகளை மற்றவர்கள்  பாவிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

உங்கள் காலுக்குப் பொருத்தமான பாதணிகளை அணிய வேண்டும்.

மேலும் அதிக நேரம் நிற்பதை தவிர்ப்பது, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்வது, காலில் அடிபடாமல் பார்த்து கொள்வது, காலில் ஏற்படும் புண்களை உடனே சரியான மருத்துவத்தின் மூலம் சரி செய்வது, சர்க்கரை போன்ற நோய்களை கட்டுப்பாட்டில் வைப்பது  போன்ற நடவடிக்கைகளால் கால் ஆணியை தவிர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *