பிரகாசமான முக அழகிற்கு (For bright face beauty)

பிரகாசமான முக அழகை (For bright face beauty) பெற எப்ல்லோரும் மிகுந்த அக்கறை கொள்வர்.முகப்பரு, வறண்ட சருமம், வெயிலால் ஏற்பட்ட கருமை, எண்ணெய் பசையான சருமம் ,கரு வளையம் ,இறந்த செல்கள் போன்றவற்றை போக்கி பளிச்சென்ற அழகான முகத்துடன் இருப்பது அழகு மட்டுமல்ல. ஆரோக்கியம் , மகிழ்ச்சி தரும் விடயங்கள்.

சிவப்பழகை பெற குங்குமப்பூ

சிகப்பழகைப் பெற அனைவருக்கும் மிகுந்த ஆசை இருக்கும். அதற்காக அதிக பிரயத்தனம் செய்யத் தேவையில்லை.

இதற்கு குங்குமப்பூ ஒன்றே போதும்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் (Butter) கலந்து நன்றாக குழைக்கவும்.

இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர, முகம்,உதடு  நல்ல சிவப்பு நிறம் பெறும்.

உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 பேரீச்சம்பழம்  ஒன்று, 10 உலர்ந்த திராட்சையை ஒரு நாள் முழுவதும் சுடுநீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளிபழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.

20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலால் கறுத்துப்bபோயிருக்கும் முகத்தை  பப்பாளியானது பளபளப்பாக மாற்றும்.

 முகம் பளபளப்பாக இருக்க

சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.

முகப்பருக்கள் மறைய

 திக எண்ணெய் பதார்த்தங்களை உண்பதாலும், உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் பொதுவாக முக் பருக்கள் ஏற்படுகிறது உணவுமுறை மாறுபாட்டாலும் முகப்பரு தோன்றும்.

முகப்பருக்கள் நீங்கி  முகம் தெளிவு  பெற (For bright face beauty) , முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன்  பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும்.

காய்ந்த பின் முகத்தைப்  பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும்.  இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.

முகத்தில் பருக்கள் இருந்தால் பூண்டு, துத்தி இலையை சம அளவு எடுத்து அவற்றை நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வரவும். விரைவில் பருக்கள் மறைந்து  போய்விடும்.

பொலிவான  முக அழகை பெற

இயற்கை அழகே அழகு. ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை  பயன்படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

 இயற்கை மூலிகைகளால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி முகப் பொலிவினைப் பெறுவது முக அழகை  மேலும் கெடுக்காமல் பாதுகாப்பதோடு முகத்திற்கு நிரந்தர அழகையும் கொடுக்கும்.

அழகு சிகிச்சைகள்

இறந்த செல்கள் அழுக்கு,தூசிகளால் முகம் களையிழந்து கறுத்து போய்விடும். அவர்கள்  ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமெட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இப்படி வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர முகத்திற்கு பேஷியல் (Facial)  செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடவும்.

பின்னர் குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும்.

தொடர்ந்து இதே போல் செய்து வர, முக அழகை கெடுக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்.

இவற்றோடு உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும். தினமும் அதிகளவு  தண்ணீர் பருகுவதும் உடல்கழிவுகள் அகன்று முக பிரகாசத்தைக் (For bright face beauty) கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *