ஆழ்ந்த தூக்கம் ஒரு வரம் (Deep sleep)
ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆழ்ந்த தூக்கம் (Deep sleep) அவசியம். அப்போதுதான் உடல் உறுப்புகள் அதற்குரிய வேலைகளை சரியாக செய்து உடலை பராமரிக்கும்.
இல்லை என்றால் எதிர்விளைவுகளை உண்டாக்கி நோய்களை ஏற்படுத்தும்.
சில பழக்கங்களை வழக்கத்தில் கொண்டு வந்தாலே ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும். எப்படி? எவ்வாறு?
நாள் முழுவதும் உழைத்த களைப்பால் உடல் அசதி ஏற்படும். அப்போது உடல் வலிக்கு சூடான நீரில் ஒரு குளியலைப் போட்டால் உடல் வலி நீங்கும். அதேபோல் அது தூக்கத்தையும் தூண்டும்.
எனவே தூங்கப் போகும் முன் 2 மணி நேரத்திற்கு முன் நல்ல சூடான நீரில் குளித்துபாருங்கள்.
ஆழ்ந்த தூக்கம் (Deep sleep) உங்களை அறியாமல் வரும்.
ஆழ்ந்த தூக்கம் பெற என்ன வழி?
- தூங்குவதற்கு முன் சூடான பாலில் தேன் கலந்து அருந்துங்கள். இவ்வாறு இரண்டையும் சேர்த்து அருந்துவதால் தூக்கத்தைத் தூண்டும். பாலில் அமினோ ஆசிட் டிரைப்டோஃபான் இருப்பதால் தூக்கத்திற்கான ஹார்மோன்களைத் தூண்டும் வல்லமை உண்டு.
- தூக்கம் இன்மைக்கு அஸ்வகந்தா (Anxiety & Stress Relief Ashwagandha ) என்ற மூலிகை மிக சிறந்த மருந்து.
-
அஸ்வகந்தா அல்லது அமுக்கிரா கிழங்குக்கு மனஅழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும்.
அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதனால் நம் மன அழுத்தமானது குறைந்து நிம்மதியான உறக்கத்தை பெறுகின்றோம்.
- மசாஜ் செய்வதால் உடலும் மனதும் அமைதியைப் பெறும்.
குறிப்பாக இரவில் மசாஜ் செய்வதால் உடல் சோர்வுகள் முற்றிலும் நீங்கி தூக்கத்தைத் தூண்டும்.
மனம் சிந்தனை ஓட்டங்களால் அவதிப்பட்டாலும் அதைக் கட்டுப்படுத்தி அமைதி நிலைக்கு அழைத்துச் செல்லும். இதனால் ஆழ்ந்த தூக்கமும் உறுதி. இதற்காக தினமும் மசாஜ் செண்டர் செல்ல வேண்டும் என்பதில்லை.
வீட்டில் நீங்களே நல்ல வாசனை எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
லாவண்டர் எண்ணெய்க் (lavender massage oil) தூக்கத்தைத் தூண்டும் ஆற்றல் உண்டு. இது உங்கள் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளையும் நன்றாக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
தூங்கும் முன் உங்கள் கைகளில் அல்லது படுக்கை அறையில் வாசனைக்காகப் பயன்படுத்தினாலும் அதை நுகர்வதால் தூக்கம் தானாக வரும்.
- மூலிகைத்தேநீர் அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி பெறும்.மனம் அமைதி நிலையை அடையும். அப்போது உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத தூக்கம் வரும்.
- தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் உண்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.இரவில் கட்டாயம் அளவான உணவை உண்ணுங்கள்.
தூங்கும் முன் தவிர்க்க வேண்டியவை
காஃபி , ஆல்கஹால், சிகரெட் இவற்றை தூங்கும் முன் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
லாப்டாப், டி.வி, செல்ஃபோன் போன்ற எந்த கேட்ஜெட்டுகளையும் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிருங்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் படுக்கவும்.தாமதமாக படுப்பதால் உருண்டு, புரண்டு கொண்டிருப்போமே தவிர, தூக்கம் வருவது சிரமமாக இருக்கும்.
படுக்கை அறை என்பது தூங்குவதற்கு மட்டுமே. திருமணம் ஆகியிருந்தால், மனைவி, கணவர் இருவருக்குமான வாழ்க்கையை ரசிக்குமிடம். ஆதலால் படுக்கையறைக்குள் இந்த இரண்டை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
வேறு எந்த நினைப்பையும் சுமந்து கொண்டு படுக்கையறைக்குள் நுழைய வேண்டாம்.
ஒரே படுக்கையில் தொடர்ந்து படுக்கவும். படுக்கையை மாற்றினாலும் தூக்கம் வராமல் தொந்தரவாக மாறி விடும்.
தூக்கம் வரவில்லை என்றவுடன் படுக்கையறையை விட்டு வெளியேறுங்கள். ஏதாவது போரடிக்கும் புத்தகத்தை படிக்கலாம். அல்லது ஒரு வேலையை செய்து கொண்டிருந்தால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடும்.
தூங்கும்போது தளர்வான, அதாவது லூசான உடைகளை அணியவும். குறிப்பாக காட்டன் உடைகள் நல்லது. ப்ரஷ்ஷான உடைகளை அணிந்து படுத்தால் மகிழ்ச்சியான தூக்கம் வரும்.
படுக்கையறையில் வெளிச்சம், சத்தம், வெப்பம், குளிர் என்று தொந்தரவு தரும் விஷயங்கள் இருக்க வேண்டாம். குறிப்பாக கடகட வென்று சுத்தும் மின்விசிறியின் சத்தம் உங்களுடைய தூக்கத்திற்கு தடையை ஏற்படுத்தும்.
நிம்மதியான தூக்கத்திற்கு படுக்கையின் அமைப்பும் அவசியம். முதுகுக்கு நல்ல சப்போர்ட்டாக இருக்கும் பெட் அமைப்பு இருந்தால் நல்லது.
படுக்கை மீது அழகான விரிப்புகளும், அழகான சரியான தலையணைகளும் உங்களுடைய தூக்கத்தை சந்தோஷமாக மாற்றும்.