ஆரோக்கியமான அழகிய கூந்தலிற்கு (For healthy hair)
பெண்களின் அழகிய தோற்றத்திற்கு முடியழகு அதிக பங்கை வகிக்கின்றது . ஆரோக்கியமான கூந்தல் அழகைப் பெற (For healthy hair) ஊட்டசத்து நிறைந்த உணவை உட்கொள்வதுடன் சரியான சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்துவதும் அவசியம்.
மென்மையான கூந்தலுக்கு
தலை முடியின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கும் சக்தி ஆரஞ்சு பழதோலுக்கு உண்டு. உலர்ந்த ஆரஞ்சு தோலுடன், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 250 கிராம் எடுத்து, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வர, முடி வாசனையுடன் பளபளப்பாக இருக்கும்.
கருமையான கூந்தலுக்கு
நீளமான, பளபளப்பான, உறுதியான கூந்தலைப் பெறுவது என்பது எளிதில் அடையக்கூடிய ஒன்று தான். கூந்தல் பராமரிப்புக்கு சிறிது நேரம் ஒதுக்கி உங்களுக்கு உதவக்கூடிய அனைத்து இயற்கை வழிகளையும் பின்பற்றவேண்டும்.
அந்த வகையில் பின்வரும் சில உதவிக்குறிப்புகளை நீங்கள் பின்பற்றி வந்தால், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை நீங்கள் கவனிக்கத் தொடங்கலாம்.
முடி மசாஜ்
தலையில் மசாஜ் செய்வது முடி வளர்ச்சியை அதிகரிக்கும். எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வது உச்சந்தலையைத் தூண்டுவதால், முடி அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல கூந்தலின் வேர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இது உதவும்.
தலையில் எண்ணெய் அல்லது ஷாம்பு போடும் போது மசாஜ் செய்தவாறு தடவுவது,உச்சந்தலையில் குவிந்து முடி வளர்ச்சியைப் பாதிக்கும் அழுக்கு, எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் அகற்ற உதவும்.
தலைக்கு குளித்தபின், முடியை மெதுவாக உலர்த்தி, மென்மையான துண்தினால் துவட்டியபின் இயற்கையாகவே முடியை உலரவிடுவது நல்லது.
தேங்காய் எண்ணெய்
முடி அழகிற்கு சிறந்த எண்ணெய்களில் ஒன்றாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பு அமிலங்களுடன் செறிவூட்டப்பட்ட இது கூந்தலில் புரதத்தை அதிகரிக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய் தலைமுடியை பளபளப்பாக வைத்திருப்பதுடன் அதிகமாக வளரவும் உதவுகிறது.
தலைமுடியை சூடான நீரால் கொண்டு அலசினால், அது தலைமுடியை பலவீனப்படுத்தும். சாதாரண தண்ணீரையோ குளிர்ந்த நீரையோ பயன்படுத்தவும். இவை உங்கள் முடிநுனியை உறுதியாக வைத்திருக்க உதவும்.
முட்டை வெள்ளைக்கரு ஹேர் மாஸ்க்
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இரண்டு முட்டை வெள்ளைக்கருவை சிறிது எலுமிச்சைசாற்றுடன் சேர்த்து தலைமுடியில் தடவவும் அல்லது சூடான ஒலிவ் எண்ணெய் (Olive oil), இலவங்கப்பட்டை மற்றும் தேன் ஆகியவற்றின் கலவையை 10 நிமிடங்களுக்கு கூந்தலில் தடவலாம்.
இவை ஒரு ஹேர் மாஸ்க் (Hair mask)ஆக நன்றாக செயற்படும். இதனால் முடி நன்றாக கருகருவென வளரும்.
உணவில் ஊட்டச்ச்சத்துக்கள் சேர்க்கவும்
ஆரோக்கியமான கூந்தலுக்கு போதுமான அளவு புரதத்தைச் சாப்பிடுவது அவசியம். புரதம் இல்லாத உணவு முடி உதிர்வதற்கு வழிவகுக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பயோட்டின் (வைட்டமின் பி 1) மற்றும் துத்தநாகம் போன்ற சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் தலைமுடி வளர காரணமான செல்களைத் தூண்டுகிறது.
தலைமுடிக்கு சிறந்த சப்ளிமெண்ட்களில் ஒன்று ஒமேகா (Omega). இது முடி உதிர்தலை சரிசெய்யவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. எந்தவொரு சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதற்கு முன்பும் ஒரு மருத்துவ உதவியை பெறுதல் நலம்.
ஊட்டச்சத்துக் குறைபாடு, முடி உதிர்தல் மற்றும் கூந்தல் மெலிந்து போக வழிவகுக்கும். முடிக்கு மிக முக்கியமான விற்றமின் ஏ, பயோட்டின், விற்றமின் சி, விற்றமின் டி, இரும்புசத்து மற்றும் துத்தநாகம் ஆகும். இவை அதிகம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
அதிக ரசாயனம் உள்ள பொருள்களைத் தவிர்க்கவும்
அதிக வாசனை கொண்ட ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மேலும், அவற்றைப் பயன்படுத்தும் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் இயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்தவும்.
நெல்லிக்காய், தேங்காய் , சீகைக்காய், தேசிக்காய், முட்டை, அவகடா (avacado)செம்பருத்தி இலையும் பூவும் போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி அல்லது இயற்கைப் பொருட்களாலான ஷாம்பூகளைப் பயன்படுத்தி தலையைக் கழுவலாம்.
இதன் மூலம் நீளமான, உறுதியான ஆரோக்கியமான கூந்தல் அழகைப் பெற (For healthy hair) முடியும்.
முடி உதிர்வை தடுக்க
முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது நல்ல பலன் தரும்.
அளவுக்கு மிஞ்சி முடி உதிர்வைத் தடுக்க உதவுவதும் வெந்தயம் தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.உடற்சூடும் குறைந்துவிடும்.
ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் (திரிபலா) பொடிகளை சம அளவு கலந்து நீரில் காய்ச்சி,இரவு ஊற வைத்து கொள்ளவும்.
காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
பெண்களுக்கு தலையில் உள்ள ஹ்ட்தொல்லை பேன் தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் அழிந்து விடும்.
செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவி வர பேன்கள் ஓடிவிடும்.