குழந்தைகளுக்கு ஏன் அடிக்கடி தலைவலி(Children with frequent headache)

பொதுவாக தலைவலியைப் பொறுத்த வரையில், பெரியவர்களை விட குழந்தைகளுக்கு குறைவாகவே ஏற்படுகிறது. அதோடு தலைவலி அடிக்கடி (Frequent headache) வருவதும் இல்லை.

தலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும்.

தலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது அக்கறையை வெளிப்படுத்துவதால் சில வேளைகளில் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதை விட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதே சிறந்தது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சிறு தலைவலிக்கே அங்கலாய்ப்பார்கள்.அதுவும் அடிக்கடி தலைவலி  (Frequent headache) ஏற்பட்டால் பயந்து போவது இயல்பே. குழந்தைகளுக்கு ஏற்படும் தலைவலி, வயிற்று வலி, கால் வலி  பெரும்பாலும் ஆபத்தான நோய்களால் வருவதில்லை.

குழுந்தை தலைவலி என அடிக்கடி (Frequent headache) சொல்கிறதா? அல்லது தலைவலியால் அவதிப்படுவதாக நீங்கள் உணர்கிறீர்களா? இந்த கேள்விக்கான பதில் முக்கியம்.

அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்,Children with frequent headache, requent headache,அன்னைமடி,cause for frequent,annaimadi.com,reason for frequent headacheh

சின்ன சின்னப் பிரச்சனைகளே பிள்ளைகளுக்கு அடிக்கடி தலைவலியை (Frequent headache) ஏற்படுத்தும். பெற்றோரின் ஓயாத நச்சரிப்பு கூட அடிக்கடி தலைவலியை கொடுக்கலாம்.

உதாரணத்திற்கு  ‘சாப்பிடு சாப்பிடு’ ‘படி படி’ என அடிக்கடி கட்டாயப்படுத்துவதாலும்  பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்படலாம். இதனாலேயேசில சில பிள்ளைகள் வயிற்றுவலி என்று பொய் சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால் இத்தகைய தலைவலிக்கு காரணத்தைக் கண்டறிந்து நீக்குவதன் மூலம்  பெரும்பாலான தலைவலிகளை போக்கலாம்.

குழந்தைகளுக்கு அடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்கள்(Causes of frequent headache)

  • போதுமான தூக்கம் இல்லாமை, அல்லது வழமையான தூங்கும் வழக்கங்களில் திடீரென மாற்றம் ஏற்படுவது
  • தாமதமாக தூங்கச் செல்வது அல்லது இடையில் விழித்து எழுவது, வழமையான நேரத்திற்கு முன்னரே எழுவது
  • சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை, பசி,போதிய நீராகாரம் இல்லாமல் இட்டுத் நா உலர்தல்ருப்பது 
  • பெற்றோருக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்கள்
  • நீண்ட நேரமாக குழந்தைகள் டிஜிட்டல் திரைகளை digital screen ) பார்ப்பது
  • தலையில் லேசாக அடிபடுதல், காயம் ஏற்படுதல்
  • தடிமன், காய்ச்சல், டொன்சிலைடிஸ், சீழ்ப்பிடித்த புண் போன்ற சாதாரண தொற்று நோய்கள்.
  • கடுமையான மணங்களை நுகர நேர்தல்உதாரணமாக  வாசனைத் திரவியங்கள், பெயின்ட்(Paint) ,சாம்பராணி போன்றவற்றின் மணம்

அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்,Children with frequent headache, requent headache,அன்னைமடி,cause for frequent,annaimadi.com,reason for frequent headacheh

  • குழந்தைகளின் வளர்ச்சியின் போது உடலில் ஏற்படும் பலவிதமான ஹோர்மோன்(Harmon changes) மாற்றங்கள்
  • வாகனங்களில் நீண்ட நேரம் பயணிப்பது
  • அருகில் உள்ளவர் புகை பிடிப்பது
  • கோப்பி, கொக்கோ போன்ற கபேன்(caffeine)கலந்த பானங்களை அருந்துவதும் தலைவலியை  உண்டாக்கலாம்
  • சில மருந்து பாவனை

மூளைக்குள் கட்டி வளர்தல், உயிராபத்தான தொற்று நோய்களால் போன்றவற்றால் குழந்தைகளுக்கு தலைவலி வருவது குறைவு. எனவே எடுத்த எடுப்பில் கடுமையான நோய்களை நினைத்து மனதைக் குளப்பிக் கொள்ள தேவையில்லை.

இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.

அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்,Children with frequent headache, requent headache,அன்னைமடி,cause for frequent,annaimadi.com,reason for frequent headacheheadache

மருத்துவ உதவிதேவையா?(Need medical help)

தலையில் கடுமையான அடிபடுதல், காயம் ஆகியவற்றைத் தொடர்ந்து தலைவலி ஏற்படல் போன்ற நிலைகளில்  

தலையிடி மிகக் கடுமையாக இருப்பதுடன் கீழ்க்கண்ட அறிகுறிகள் சேர்ந்திருந்தால்.

  • வாந்தியெடுத்தல்
  • பார்வையில் மாற்றம்,தெளிவின்மை
  • கழுத்து நோ, கழுத்து விறைப்பு
  • குழப்பமான மனநிலை
  • சமநிலை பாதிப்பு
  • கடுமையான காய்ச்சல்
  • தலைவலியானது காலையில் கண்விழித்து எழும்போதே அல்லது குழந்தையின் தூக்கத்தை பாதிப்பதாக   இருத்தல்.
  • 3 வயதாகும் முன்னரே அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் அலட்சியம் வேண்டாம்.

மருத்துவ உதவியை அவசரமாக  பெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *