நல்ல பலன்களைத் தரும் பழ ஃபேஸ் பேக்!( Fruit facial)

பழங்கள் ஃபேஸ் பேக் ( Fruit facial) முகத்துக்குச் சிறந்த பலனையும், பாதுகாப்பையும் அள்ளித் தரும். ஏனெனில் பழங்களில் ஆன்டி ஆக்ஸைட், நார்ச்சத்து, நீர்ச்சத்து, மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.

இயற்கையில் கிடைக்கும் காய் மற்றும் பழங்கள் தான்,மனிதர்களுக்கு மிக நல்ல ஆரோக்கியமான உணவு.  பழங்களை நாம் தினமும் சாப்பிடுவதனால் நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது, முக அழகும் சரும பொலிவும் கிடைக்கின்றது. இப்படி பழங்களை நாம் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாயினும், அதை முகத்தில் நேரடியாக ஃபேஸ் மாஸ்க் (Face mask) போடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்?

நம் சருமத்தில் நேரடியாக பயன்படுத்தும் போது அதில் இருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து நமது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன், மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்கிறது.

Fruit facial,natural facial,annaimadi.com,healthy beauty tips

எனவே பழங்களை கொண்டு நம் முகத்தில் எப்படி ஃபேஸ் மாஸ்க் போடுவது என்பதை பார்ப்போம்.

அதோடு தொடர்ந்து பாவித்தாலும் நிறுத்தினாலும் எந்தவித பக்க விளைவையும் பழ ஃபேஸ் மாஸ்க் ஏற்படுத்தாது.

பழங்கள் ஃபேஸ் பேக் ( Fruit facial) செய்முறைகள்

1.ஆப்பிள் பாதி, சிறிது அவகடோ பழம் இவற்றை நன்றாக மசித்து மூன்று டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்.

இதை முகத்தில்  பூசி ,அரை மணி நேரம் வைத்திருந்து, அதன் பிறகு கழுவ வேண்டும்.

இது முகத்தில் எண்ணெய் வடிவதைக் கட்டுபடுத்தும்.

2.வாழைப்பழத்துடன், 2 டீஸ்பூன் தேன், கெட்டியான தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

முகத்தில் தடவி 20 நிமிடம் வரை வைத்திருக்க  வேண்டும்.

வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸைடு, முகத்தில் ஈரப்பதத்தை உண்டாக்க உதவும்.

Fruit facial,natural facial,annaimadi.com,healthy beauty tips,அன்னைமடி,பழ பேஷியல்,இயற்கை முறையில் அழகு

3.பேரீச்சம்பழத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றைச் சேர்த்து முகம் முழுவதும் தடவி, 10 நிமிடம் வைத்திருந்து கழுவவும். நன்கு காய்வதற்கு முன்பு எடுத்துவிடவேண்டும். முகம் பளிச் என, கோதுமை நிறமாக மாறும்.

ஆரோக்கியமான சில வகையான ரெடிமேட் ஃபேஷியல் அமேசானில் (Amazon) கிடைக்கின்றது.

fruit fcial

4.ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் ஆசிட்(Citric acid) முகத்துக்குப் பளபளப்பை உண்டாக்கும்.வெறும் ஆரஞ்சு சாற்றை மட்டும் ஒரு பஞ்சினால் தொட்டு முகத்தில்  தடவினால் போதும்.

முகத்தில் உள்ள கருமை மறைந்து, ஒரே மாதிரியான சீரான நிறத்தைத் தரும். மூக்கின் மேல் வரும் வெள்ளை, கறுப்பு புள்ளிகளைச் சரிப்படுத்தும்.

5.பப்பாளி ஃபேஷியல் செய்து கொள்வது நல்ல பலனை தரும். பப்பாளிப்பழக் கூழ், வாழைப்பழக் கூழ், ஒரு கரட், மூன்று ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்.

கலவையை முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்து பிறகு கழுவவேண்டும். இவ்வாறு செய்வதால் காலை முதல் மாலை வரை  பளிச்சென முகம் பிரகாசமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *