நீண்ட ஆயுளோடு வாழ ரகசிய உணவு
பச்சை பூண்டு (Garlic medicine) மிக மிக சிறந்தது!
பூண்டு அதிக மருத்துவ நன்மைகளை கொண்டிருக்கின்றது.இதனாலேயே சமையலிலும் சித்த மருத்துவத்திலும் பூண்டு (Garlic medicine) அதிகம் பயன்படுகின்றது.அனைத்து விதமான இதய பிரச்சினைகள் நீக்க இது பயன்படுகின்றது. உடலில் கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றவும் பூண்டு உதவுகின்றது.
“நிறை மாத கர்ப்பிணி” போன்ற தோற்றத்தை தரும் பலரின் பெரு வயிற்றை சிறிதாக்க பச்சை பூண்டு மருந்து (Garlic medicine).
பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது.சமைக்கும் போது பூண்டில் இருக்கும் அந்த அமிலத்தன்மை வெகுவாக பாதிக்கப்படும்.
சமைக்காத பச்சை பூண்டுத்துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்வதே, பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.
நேபாளிய,சைனா நாட்டு மக்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் இது…..!
செய்முறை
பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8 இலிருந்து 12மணி நேரம் நிழலில் காய வைத்த பின், அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊறவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட ஆரோக்கியம் நம்முடனேயே இருக்கும்!
சாப்பிட அவ்வளவு ருசியாகவும், அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு உணவாகவும் விளங்கும்.நேரத்தை ஒதுக்கி செய்து பலன் பெறுங்கள்.
6 மாதத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர 100 ஆவது வயதிற்குபின்னும்ஆயுள் நீடிக்கும்.
இதய பாதுகாப்பிற்கு பூண்டு (Garlic)
இதில் இதய பாதுகாப்பு பல தன்மைகள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
பூண்டில் அழற்சிக்கான எதிர் குணங்களும் அடங்கியுள்ளது. இதனால் நம் உடல் அழற்சிகளை எதிர்த்து போராட இது உதவிடும். அலர்ஜியால் ஏற்படும் அழற்சியை (ஒவ்வாமை நாசியழற்சி போன்றவைகள்) குணப்படுத்த பூண்டு உதவுகிறது.
பச்சையாக பூண்டை ஜூஸாக்கி பருகினால், படை மற்றும் மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்புகள் உடனடியாக நீங்கிவிடும்.
பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி தொல்லை குறைந்துவிடும். தொண்டை எரிச்சல்கள் குணமடையும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும்.
ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும். இது ஒரு விலை மதிப்பற்ற பொருள்.
பூண்டால் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும்,.சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து.
பூண்டு சாற்றை கை,கால்களில் இருக்கும் மருக்களின் மீது தடவினால் நல்ல பலனை கிடைக்கும்.
அடுப்பில் போட்டு சுட்டும் பூண்டை சாப்பிடலாம். அநேகமான கறிகளில் பூண்டு சேர்க்கப்படுகின்றது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு சரக்குக்கறியில் அதிகமாக சேர்க்கப்படுகின்றது.இதன் அபாரமான மருத்துவ நன்மை கருதியே!
பூண்டு (Garlic)மருந்தல்ல உணவு!