பூண்டு மிளகு சாதம் (Garlic pepper rice)

பூண்டு மிளகு சாதம் (Garlic pepper rice) சுவையானது. ஆரோக்கியமானது. சுலபமானது.நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும்  நல் மருந்தாகும் உணவு இது.

தற்போது அதிகமானோர் ,சுவையை விட உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளில் ஆர்வம்  காட்ட தொடங்கியுள்ளனர்.

உடல் நலத்திற்கான பூண்டு மிளகு சாதத்தை (Garlic pepper rice)  குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பிடிக்கும் வகையில்  சுவையாக எப்படி செய்வது என பார்ப்போம்.

பூண்டு மிளகு சாதம் செய்யத் தேவையான பொருட்கள்

பாஸ்மதி (சாதம்) – ஒரு கப்

பூண்டு – 10 பற்கள்

மிளகுத் தூள் – ஒரு டீ ஸ்பூன்

வெங்காயம் – ஒன்று

கடுகு – அரை டீ ஸ்பூன்

உளுந்து – அரை டீ ஸ்பூன்

கடலை பருப்பு – அரை டீ ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

தேயையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, நெய்,
உப்பு

பூண்டு மிளகு சாதம்  (Garlic pepper rice) செய்முறை

முதலில் பாஸ்மதி அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

வாணலியில் நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும். கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் சிவந்ததும், நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு இதில் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும். இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி விடுங்கள்.

இப்போது சுவையான பூண்டு மிளகு சாதம் தயார்.

பூண்டு மிளகு சாதம் இந்த பெருந்தொற்று காலத்தில் நம் உடலுக்கு இம்யூனிட்டி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு.

சளி, இருமல், தடிமன் ஆகியவற்றுக்கு மருந்தாகும் உணவு இது . சுவையாக  செய்து உண்ணுங்கள்.

சூப்பரான பூண்டு மிளகு சாதம் செய்யும் முறையை வீடியோவில் பார்ப்போம்.

சுவையான பூண்டு மிளகு சாதம் ரெடி..!
உணவே மருந்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *