இதய பாதுகாப்பிற்கு பூண்டு சாதம் (Garlic rice)

பூண்டுசாதம் (Garlic rice) செய்வோம்

 சுவையான பூண்டுசாதம் (Garlic rice)  தொடர்ந்து ஒரே மாதிரி சாப்பிட்ட வாய்க்கு வேறு விதமான சுவையில் !

பூண்டு நோய்த் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த உதவுவதோடு உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இதயத்திற்கு பூரணபாதுகாப்பு அளிக்கும் விலை மதிப்பற்ற மருந்து, இந்த பூண்டு.

பூண்டுக்கு கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை உண்டு. எனவே உடல் பருமன் உள்ளவர்கள், இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி  பூண்டை உண்டு வந்தால், கெட்ட கொழுப்புகள் குறையும்.

பூண்டில் இருந்து வரும் காரமான மணத்தினாலே பலரும் பூண்டை சாப்பிட விரும்புவதில்லை. இப்படி வித்தியாசமான சுவையில் பூண்டை உணவில் சேர்த்துக்கொடுங்கள்.எல்லோருமே  விரும்பி உண்பார்கள்.

சளி,தடிமன்  காய்ச்சல் நேரங்களில் பூண்டு சாதம் சாப்பிடுவது, நல்ல மருந்தாகும்.

ஆரோக்கியமான இந்த பூண்டு சாதத்தை செய்ய  10 நிமிடங்களே போதுமானது.

பூண்டுசாதம் உருளைக்கிழங்ககு வறுவலுடன் செய்து சாப்பிட,வீடியோவை பாருங்கள்.

அருமையாக இருக்கும்!

பூண்டை சிறிதாக வெட்டி அல்லது  துகளாக நசித்து சேர்ப்பதால்  (Garlic Press Set ) முழுமையாக வாயில் கடிபடாது, குழந்தைகள் கூட வேண்டாம் என சொல்லமால் பூண்டுசாதத்தை (Garlic rice) உண்பார்கள்.

Garlis press,garlic rice receipe,annaimadi.com

                                                                                                               Check price

நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளது.

வயது கூடக் கூட  தமனிகள் விரிவடையும் திறனை இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு (Garlic) உதவும். மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும்.பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.Garlic rice,medicine for healthy heart,annaimadi.com

பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும்.அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்புக்குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும்.

மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டின் மருத்துவ குணம் உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published.