வாயுத்தொல்லை நிரந்தரமாக நீங்க (Gas trouble remedies)

வயது அதிகரிக்க அதிகரிக்க உடம்பில் வாயு தொல்லைகளும் (Gas trouble)அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆரோக்கியமாக வாழ பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவை நமது உடலில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

சமிபாட்டு பிரச்சனையை உருவாக்கும் விடயங்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக உறங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு உணவை சாப்பிடுவது சிறந்தது.

ஒவ்வொரு தரம்  சாப்பிட்டு முடிந்ததும் ஏப்பம் வர வேண்டும். செரிமானம் ஆகவேண்டும். அடுத்த வேளை உணவிற்கு தானாகவே  பசிக்க வேண்டும்.

ஆனால், மாறாக சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்புசமாக இருப்பது, ஏப்பம் வராமல், செரிமானம் ஆகாமல் இருப்பது, பசியின்மையோடு, மந்தமாக, சோர்வாக இருப்பது எல்லாமே வாயுத் தொல்லை (Gas trouble) தான்.

வாயுத்தொல்லை, இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்றது.  gas trouble relief,gas trouble medicine,gas trouble remedies,annaimadi.com,gas works well in the body,அன்னைமடி,வாயுதொல்லைநீங்க,வாயுதொல்லைநீங்கஉணவுகள்,வாயுதொந்தரவா,வாயுதொல்லை போக்க,வாயுதொல்லை தரும் உணவுகள்,வாயு தொல்லை அறிகுறிகள்,Gas Symptoms,வயிறு உப்புசம் ஏற்பட காரணம்,Cause of gas problem,cause of flatulence,வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க,relief of gas problem permanently,gas trouble natural medicines,வாய்வுத் தொல்லை,gas problem

வாயு தொல்லை தரும் உணவுகள் (Foods that give gas trouble)

பால் பொருட்களை எப்பொழுதும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமானால் அதுவே வாயுத் தொல்லையை (Gas trouble) உண்டாக்கும்.
அதிலும் தயிரில் உள்ள ப்ரோபயோடிக்ஸ்  அதிக அளவு வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். 
பருப்புவகைகள், வாழைக்காய், உருளை கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சக்கரவள்ளி, பீன்ஸ், ம பால், முட்டைகோஸ், வெங்காயம், காலிபிளவர், முளைகட்டிய தானியம், முட்டை, கொழுப்பு நிறைந்த உணவுகள்,மசாலா உணவுகள், செயற்கை பானங்கள் முக்கியமாக அதிக மாச்சத்துள்ள உணவுகள் வாயு தொல்லைக்கு காரணமாக அமைகின்றது.
இது போன்ற உணவுகளில் சத்துக்களும் இருப்பதால், முற்றாக தவிர்க்காமல் குறைந்த அளவு மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

  gas trouble relief,gas trouble medicine,gas trouble remedies,annaimadi.com,gas works well in the body,அன்னைமடி,வாயுதொல்லைநீங்க,வாயுதொல்லைநீங்கஉணவுகள்,வாயுதொந்தரவா,வாயுதொல்லை போக்க,வாயுதொல்லை தரும் உணவுகள்,வாயு தொல்லை அறிகுறிகள்,Gas Symptoms,வயிறு உப்புசம் ஏற்பட காரணம்,Cause of gas problem,cause of flatulence,வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க,relief of gas problem permanently,gas trouble natural medicines,வாய்வுத் தொல்லை,gas problem

கொழுப்புகள் நிறைந்த உணவை உட்கொண்டால், செரிமானம் மெதுவாக நடைபெற்று உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகும்.
இவ்வாறு நீண்ட நேரம் ஆவதால் வயிற்றில் வாய்வுத் தொல்லையும் (Gas trouble) அதிகரிக்கும்.

வயிறு உப்புசம் ஏற்பட காரணம் (Cause of flatulence)

உடலில் வாயு உண்டாக, இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருட்கள், பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும் போது உண்டாகும் வாயு.

மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று.இவை இரைப்பையிலிருந்து, ஏப்பமாகவோ, குடலை சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ, உடலில் இருந்து வெளியேற வேண்டும்.

அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கி விட்டால், வயிறு வீங்கி, உப்புசம் ஏற்படும்.

சாப்பிடும் போது பேசுவது, அவசரமாக சாப்பிடுவது, ‘ஸ்ட்ரா’ மூலம் உறிஞ்சிக் குடிப்பது, சூயிங்கம் மெல்வது, மிட்டாய் சப்புவது போன்ற சமயங்களில், நம்மையும் அறியாமல், காற்றையும் சேர்த்து விழுங்குகிறோம்.

சிறுகுடலில், அதிகமாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா சேர்வது,

உணவு வேளை இடைவெளி, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, மலம் மற்றும் சிறுநீரை அடக்குவது போன்றவற்றால் வயிறு உப்புசம் ஏற்படலாம்.  gas trouble relief,gas trouble medicine,gas trouble remedies,annaimadi.com,gas works well in the body,அன்னைமடி,வாயுதொல்லைநீங்க,வாயுதொல்லைநீங்கஉணவுகள்,வாயுதொந்தரவா,வாயுதொல்லை போக்க,வாயுதொல்லை தரும் உணவுகள்,வாயு தொல்லை அறிகுறிகள்,Gas Symptoms,வயிறு உப்புசம் ஏற்பட காரணம்,Cause of gas problem,cause of flatulence,வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க,relief of gas problem permanently,gas trouble natural medicines,வாய்வுத் தொல்லை,gas problem

இவை தவிர, வயிற்றில் எரிச்சல் , சர்க்கரை நோய், ‘குளூட்டன்’ என்னும் புரதம் செரியாமை, அசுத்தமான நீர்நிலைகளில் வாழும், ‘ஜார்டியா’ எனும் பூச்சி, நீர் மூலம் உடலுக்குள் செல்வது உள்ளிட்ட, பல்வேறு பிரச்சனைகளாலும் ஏற்படலாம்.

குடலில் புழுக்கள் இருந்தாலும் வாயு தொல்லைக்கு ஏற்படும். மாத்திரைகள் குறிப்பாக பேதி ,ஆஸ்துமா போன்றவற்றிற்கு  மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் வாயு தொல்லை அதிகரிக்கும்.

வயிறு உப்புசத்தால், வயிறு அல்லது அடிவயிறு வீங்குதல், வாயுத் தொல்லை, சாப்பிட்டதும் அசௌகரியமாக உணர்தல், வயிறு இரைச்சல், குமட்டல் ஏற்படும்.

இதை தவிர்க்க, நன்மை செய்யும் பாக்டீரியா உள்ள தயிர் போன்ற உணவுகளை சாப்பிடலாம்.

மருத்துவரின் பரிந்துரையின்றி, சுயமாக மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாயு அதிகரிக்கும் உணவை, முடிந்தவரை குறைக்க வேண்டும்.

நன்றாக மென்று சாப்பிடும் பொழுது உணவு இலகுவாக ஜீரணமாகிறது. உணவு சமிபாட்டு பிரச்சனையும் வாயு தொல்லைக்கு முக்கிய காரணம்.

வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க  Relief of gas problem permanently

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவ தோடு, இரைப்பையில்  இருந்து வாயுவையும் வெளியேற்றிவிடும்.

துளசிச்சாறு மற்றும் இஞ்சிச்சாறு. தலா மூன்று ஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, காலை, மாலை என இரண்டு வேலையும் மூன்று நாட்களுக்கு குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும்.

காபி, டீ  இதற்கு பதிலாக  சுக்கு மல்லி காபியை குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம், ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப்  பொடி செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் நாட்டுச் சர்க்கரையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

வாயுவினால் அவதியுறும் போது புதினா இலைகளை மென்று நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை  வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.

வாயுத் தொல்லை ஏற்படும் சமயங்களில் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு எடுத்துச் சாப்பிட வேண்டும்.

பப்பாளிப்பழம் ஜீரணமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாயுத் தொல்லை குணமாகிவிடும்.

வாயுத் தொல்லை, வயிறு உபாதைகளுக்கு, பூண்டு மிகவும் நல்லது. எனவே பூண்டை வறுத்து அல்லது சுட்டு சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். வாய் தொல்லையிலிருந்து விடுபட உணவுடன் பூண்டு ரசம் செய்து சாப்பிடலாம்.

தொல்லை தொடர்ந்தால், உணவா, நோயா என, மருத்துவரிடம் பரிசோதித்து, சிகிச்சை பெறுவது அவசியம்.
சாப்பிடும் பொழுது உணவுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *