யோகாபயிற்சியினால் முதுகு,கழுத்து வலியை போக்குவோம் (Get relief of back and neck pain by yoga)

சாதாரண தலைவலியில் தொடங்கி கழுத்து வலி, முதுகு வலி உள்ளிட்ட பல நலக்குறைவுகள் பெரும்பாலானோரை வருத்தமடையச் செய்துகொண்டிருக்கின்றன.இதனால் உடல்நலப் பிரச்னைகள் குறித்து நாம் எல்லோருமே அதிகமாகக கவலை கொள்கிறோம்.

தமது அன்றாட வேலைகளைக் கூட செய்யவிடாமல் தடுக்கும் முதுகுவலி, மூட்டுவலி, எலும்புத்தேய்மானம் தலையைக் குனிந்து நிமிர முடியாமல் தடுக்கும் தொப்பை, தலை சீவும் போது கொத்து கொத்தாக உதிர்ந்து விழும் முடி, இளமையிலேயே முதிர்ந்த தோற்றம், விரும்பியதை உண்ணவிடாமல் தடுக்கும் சர்க்கரை நோய், சாப்பாட்டை விட அதிகமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என பல விடயங்கள் எம்மையெல்லாம் வருத்தப்பட வைக்கிறது. இதனால் உடல் வலியுடன் மனச்சோர்வும் நம்மை பாடாகப் படுத்துகிறது.

இவற்றிலிருந்து வெளியே வர யோகா பயிற்சிகள் (Get relief of back and neck pain by yoga) நமக்கு பெரும் துணையாக இருக்கும்.

இலகுவாக வீட்டிலிருந்தபடியே இந்த யோகாப்பயிற்சிகளை மெது மெதுவாக ஆரம்பித்துச் செய்யலாம்.

,annaimadi.com,stress free life,healthy life by doing yoga,vajrasana,pathmasana,benefits of yoga,savasana

கழுத்துவலி வராமலிருக்கவும், வந்தபின் அதைச் சரிசெய்யவும் கழுத்துக்கென சில பயிற்சிகள் உள்ளன.

கழுத்தை மேலும் கீழுமாக அசைத்தல், வலது பக்கம் மற்றும் இடது பக்கம் திரும்பிப் பார்ப்பது உள்ளிட்ட சில பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும்.இவற்றை வேலைகளுக்கு  மத்தியில் இடையிடையே மறக்காமல் செய்யவும்.

இதுபோன்று கழுத்துத் தசைகளை தளர்வாக வைக்கவும் இந்தப் பயிற்சிகள் உதவும்.

கழுத்துவலி மட்டுமன்றி தோள்பட்டை வலிகள் வராமலிருக்கவும் யோகா பயிற்சிகள் (Get relief of back and neck pain by yoga) உதவியாக இருக்கும்.

நீண்டநேரம் அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வதால் பலரையும் பதம் பார்ப்பது முதுகு வலி. இதுமட்டுமன்றி சிலருக்கு முதுகில் ஒருவித இறுக்கம் ஏற்படும்.

இதுபோன்றதொரு நிலை ஏற்படாமலிருக்க முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற யோகா உதவும். முறையான யோகா பயிற்சிகளைச் செய்தால், முதுகு வலி வராமல் தடுக்கமுடியும்.

Get relief of back and neck pain by yoga,annaimadi.com,stress free life,healthy life by doing yoga,vajrasana,pathmasana,benefits of yoga

முதுகு,கழுத்து வலியை போக்கும் யோகாசனங்கள் (Get relief of back and neck pain by yoga)

புஜங்காசனம், சவாசனம், மகராசனம் போன்ற பயிற்சிகள் முதுகு வலியிலிருந்து நிவாரணம் தருவதுடன், பிற்காலத்தில் வலி எதுவும் வராமல் தடுக்கவும் உதவும். முதுகுத் தசைகள் வலுப்பெற வஜ்ராசனம், பவனமுக்தாசனம், வக்ராசனம், தனுராசனம், சக்ராசனம் போன்ற பயிற்சிகள் உதவும்.

தினமும் சூர்யநமஸ்காரம் செய்வது தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கவும் சூர்ய நமஸ்காரம் மிக உதவியாக இருக்கும்.

இது ஆண், பெண்ணுக்கு ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளை சரி செய்ய உதவும்.குறிப்பாக மாதவிடாய்க் குறைபாடு உள்ள பெண்கள் மற்றும் தைராய்டு குறைபாடு இருப்பவர்கள் சூர்ய நமஸ்காரம் செய்தால் பலன் கிடைக்கும்.

இவை தவிர மனதை நிம்மதியாகவும், அமைதியாகவும் வைக்க இந்த யோகா பயிற்சிகள் உதவும்.

Get relief of back and neck pain by yoga,annaimadi.com,stress free life,healthy life by doing yoga,vajrasana,pathmasana,benefits of yoga

மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானப் பயிற்சிகள்போன்றவை ,ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக தொடங்க உதவியாக இருக்கும்.

யோகா அதிக  பயன்களைத் தரக்கூடியதாக இருந்தாலும், தொடர்ந்து  செய்தால் தான் அது பெருமளவில் உதவும்.

ஒவ்வொரு நாள் காலையும் தேவையான யோகா பயிற்சிகளைச் செய்து விட்டு அன்றைய நாளை தொடங்குவது நல்லது.

Neck and Back Massager,annaimadi.com,stress free life,healthy life by doing yoga,vajrasana,pathmasana,benefits of yoga
Neck and Back Massager with Soothing Heat, Full Body Muscle Pain Relief

Check Price

யோகா செய்ய நேரம் இல்லை என்று சாக்கு போக்குச் சொல்லி எம்மை நாமே ஏமாற்றாமல்  தினமும் 10 நிமிடங்கள் உங்களுக்காகவும், உங்கள் உடல்நலனுக்காகவும் ஒதுக்குங்கள்.

ஒரே பயிற்சியைத் தொடர்ந்து செய்வதால் மனச்சோர்வு ஏற்படத் தோன்றும். அப்படியில்லாமல், நடைப்பயிற்சி, யோகா பயிற்சி என மாற்றி மாற்றி செய்வது ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *