பல்ஈறு நோய்களை இயற்கையாக குணப்படுத்த(To cure gingivitis naturally)
ஈறு வியாதிகள் (Gingivitis) என்பது ஈறுகள் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல், பற்களை தாங்கும் பிற அமைப்புகளையும் சேர்த்து பாதிக்கும். ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் (Gingivitis ) பொதுவாக பல் சுத்தமாக இல்லாத பகுதியில் இருந்து தான் ஆரம்பிக்கும்.
பற்களுக்கு ஈறுகள் தான் பாதுகாப்பு அளித்து, எலும்போடு உங்கள் பற்கள் தாங்கி நிற்கும் ஆதரவையும் அளிக்கிறது. உங்கள் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லையென்றால், பல் ஆட்டம் கண்டு, பற்கள் உதிரும் அபாயம் ஏற்படலாம்.
இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
சரியாக பல் துலக்காத போது ஈறுகளில் பாக்டீரியா உருவாகி, அது பல்லில் அழற்சியை ஏற்படுத்தும். அழற்சி அல்லது ஈறுகளில் வீக்கம் ஏற்படுவது தான் ஈறுகள் சம்பந்தமான நோய்களுக்கான முதல் எச்சரிக்கை ஆகும்.
ஈறு சிவத்தல், பல் துலக்கும் போது இரத்த கசிவு, ஈறுகளின் கோடு விலகுதல், தொடர்ச்சியான சுவாச துர்நாற்றம், வாய் புண்கள் போன்றவை மற்ற அறிகுறிகளாகும் .
பல் ஈறு நோய் தொற்றின்அறிகுறிகள் (Symptoms of dental gingivitis)
இந்த நோயில் பல கட்டங்கள் இருக்கின்றன. முதலாவது, ஈறுகள் வீங்கும்.ஈறுகளிலிருந்து இரத்தம் கசிவது இதற்கு ஒரு அறிகுறி. இது பல் தேய்க்கும் போது, கொப்பளிக்கும் போது (flossing), வைத்தியர் பற்களை சுத்தமாக்கும் போது, அல்லது காரணமே இல்லாமல் கூட ஏற்படலாம்.
இதைக் கவனிக்காவிட்டால் அடுத்த கட்ட ஈறு நோயான பிரியோடான்டிஸ் (periodontitis) உண்டாகும். இந்தக் கட்டத்தில், பல்லைத் தாங்கிப் பிடித்திருக்கும் எலும்புகளும் ஈறு திசுக்களும் (tissues) அழிய ஆரம்பிக்கும். பெரும்பாலும், இந்த நோய் முற்றிப்போகும் வரை அதற்கான அறிகுறிகள் தெரியாது.
பல்லுக்கும் ஈறுக்கும் இடையே இடைவெளி, பற்கள் ஆடுவது, பற்களுக்கு இடையே இடைவெளி, வாய் துர்நாற்றம், ஈறுகள் குறைந்து பற்கள் மட்டும் பெரிதாக தோன்றுவது, ஈறுகளில் இரத்தம் கசிவது போன்றவை பிரியோடான்டிசின் அறிகுறிகள்.
பல் ஈறு நோய் ஏற்படுவதற்கு காரணங்கள் (Causes of dental gingivitis)
பல் ஈறு நோய் (Gingivitis) வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று பிளேக் (plaque). அதாவது பற்கள் மீது பாக்டீரியா படர்ந்து இருப்பது.
இந்த பாக்டீரியாவை நீக்கவில்லை என்றால் ஈறுகள் வீங்கிவிடும். இதைக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் பற்களிலிருந்து ஈறுகள் விலகி, ஈறுகள் ஓரம் பாக்டீரியா வளர ஆரம்பித்துவிடும்.
பிறகு, ஈறுகள் வீங்க வீங்க எலும்பு திசுக்களும் ஈறு திசுக்களும் அழிய ஆரம்பித்துவிடும். பிளேக் அதிகமாகப் படியப் படிய, அது கடினமாகிவிடுகிறது.
சரியாகப் பராமரிக்கப்படாத பற்கள், எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகள், வைரஸ் கிருமி தொற்று, மன அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், அளவுக்கு மிஞ்சிய குடி, புகையிலை, பிரசவ காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை பல் ஈறு நோய் வருவதற்கு மற்ற காரணங்களாக இருக்கின்றன.
ஈறு நோய் (Gingivitis) பல விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால் பல் வலி ஏற்படலாம். பல்லை பிடுங்க வேண்டியிருக்கலாம். உணவை மென்று சாப்பிடுவதும் பேசுவதும் கூட கஷ்டமாகிவிடலாம். முக அழகும் பாதிக்கப்படலாம். பல்நோய் பல நோய்களுக்குக் காரணமாவதால், பற்களை நன்றாகப் பராமரிப்பது மிக அவசியம்.
பல் வியாதிகளிலிருந்து விடுபட இயற்கை வழிகள்
- தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
- மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.
- மல்லி விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருக்க பல்கூச்சம் மறையும்.
- கராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரத்தில் வாய் கொப்பளிக்க பல் ஈறு வீக்கம் நீங்கும்.
- எலுமிச்சைசாறுடன் நீர் கலந்து வாய் கொப்புளிக்க ஈறில் இரத்தம் வருதல் நிற்கும்.
-
புதினா விதையை வாயில் போட்டு மெல்ல பல் கூச்சம் மறையும். புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்க பல்கூச்சம் குணமாகும்.
- ஆலம் விழுதால் பல் துலக்கி வர பற்கள் பலப்படும்.ஆலம்பாலை காலை மாலை தடவி வர வாய்ரணம், உதடு, நாக்குவெடிப்பு, பல்ஆட்டம் தீரும்.
- எருக்கம்பாலைத் தொட்டு பல்சொத்தை, பல்நோய் உள்ள இடத்தில் பூச குணமாகும்.
- நுனாவின் முதிர்ந்த காய்களை உப்புநீரில் ஊற வைத்து உலர்த்தி,சுட்டு கரியாக்கி பல் துலக்கிவர பல்சொத்தை குணமாகும்.
- துளசி இலையை கொதிக்க வைத்த நீரில் உப்பு கலந்து வாய் கொப்புளிக்க பல்சொத்தை குணமாகும்.ஈறு பலப்படும்.
- நாயுருவி வேர்சூரணம் அல்லது வேர் கொண்டு பல் துலக்கிவர பற்கள் பலமடையும்.
- பிரம்மதண்டு விதையை தீயில் புகைத்து வாயில் படச் செய்ய சொத்தைப்பல் குணமாகும்.
- தான்றிக்காயை சுட்டு மேல்தோலை பொடித்து, சமன் சர்க்கரை சேர்த்து, தினம் இருவேளை சாப்பிட்டுவர பல்,ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

- கருவேலம்பட்டைக் குடிநீர் கொண்டு வாய் கொப்புளிக்க வாய்புண், பல்ஈறு அழுகல், பல்ஆட்டம் போகும்.
- நஞ்சறுப்பான் இலைச்சூரணம் கொண்டு பல்துலக்க பற்கறை நீங்கும். பல் சுத்தமாகும்.
-
புளியங்கொட்டைதோல்,கருவேலம்பட்டைதூள் சமனாக கலந்து உப்புத்தூளுடன் பல்துலக்கி வர பல்கூச்சம், பல்ஆட்டம், சீழ், இரத்தம்வடிதல், ஈறுவீக்கம் தீரும்.
- மகிழங்காயை மென்று வாயிலடக்கி வைத்திருந்து துப்ப பல்ஆட்டம் நீங்கி உறுதிப்படும்.
- அன்னாசி, ஆரஞ்சு,திராட்சைபழங்கள் அதிகம் சாப்பிட்டு வர ஈறில் இரத்தம் காணல் நிற்கும்.
- காலை வெறும் வயிற்றில் 3-4எலுமிச்சம்பழத்தை உறிஞ்சிச் சாப்பிட ஈறில் இரத்தம் காணல் தீரும்.