பலநோய்களை தீர்க்கும் கோமுகாசனம் (Gomukhasana)

கோமுகாசனம் (Gomukhasana) என்ற ஒற்றை ஆசனத்தின் மூலம் நாம் ஏராளமான பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். மனிதனுடைய எல்லா வியாதிக்கும் மூல காரணம் மலச்சிக்கல் தான். உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் தங்குவதால் பலவித நோய்கள் ஏற்படுகின்றது.

இந்த ஆசனம் செய்தால் மலச்சிக்கல் நீங்கும். பசியில்லாமல் அவதிப்படுவோருக்கு நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் இருந்தால் பசியிருக்காது. உடல் கழிவுகள் நீங்கினாலே உடல் ஆரோக்கியம் பெற்றுவிடும்.

நம் நாட்டில் வாழ்ந்த பெரிய மகான்கள் ஒவ்வொரு ஆசனத்தையும் செய்து பார்த்து அனுபவித்து அதன் எல்லாப் பலன்களையும் உணர்ந்தார்கள். மகான்கள் சுட்டிக்காட்டிய யோகாசனங்களில் கோமுகாசனமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கோமுகாசனம் செய்யும் முறை

Benefits of Komukasanam,How to do Gomukhasana,annaiamdi.com,மலச்சிக்கலை போக்கும் கோமுகாசனம்,கோமுகாசனம் செய்யும் முறை,கோமுகாசனம் செய்தால் என்ன பயன்கள் ,Benefits of Gomukhasana,Gomugasanam for constipation,

சாதாரணமாக உட்காரவும். வலது காலை மடித்து வைக்கவும். இடது காலை மடித்து அதன்மீது வைக்கவும். இப்போது வலது கால் முட்டியும், அதன் மீதுள்ள இடது கால் முட்டியும் ஒன்றன் மீது ஒன்று நன்கு பொருந்தி, முக்கோண வடிவில் இருக்கட்டும். இரு கால்களின் முட்டியும் முக்கோண வடிவில் மாட்டின் முகம் போல இருப்பதால் ‘கோ’, ‘முக’ ஆசனம் என்ற பெயர்.

வலது கையை மெல்ல உயர்த்துங்கள். குழந்தைகள் வந்தால், மிட்டாயை மறைத்துக் கொள்வதுபோல, இடது கையை பின்பக்கமாக கொண்டு செல்லுங்கள்.

இரு கைகளின் முட்டிகளை மடக்கி, இரு கை விரல்களையும் இணைக்க முயற்சியுங்கள். இணைக்க முடிந்தால், விரல்களை கோத்து, நன்கு இழுக்க முயற்சியுங்கள்.

Benefits of Komukasanam,How to do Gomukhasana,annaiamdi.com,மலச்சிக்கலை போக்கும் கோமுகாசனம்,கோமுகாசனம் செய்யும் முறை,கோமுகாசனம் செய்தால் என்ன பயன்கள் ,Benefits of Gomukhasana,Gomugasanam for constipation,

வலது கை, காதை ஒட்டி இருக்கட்டும். பார்வை நேராக, சுவாசம் சீராக இருக்கட்டும். 1-10 எண்ணி ரிலாக்ஸ் செய்யுங்கள். கை, கால்களை மாற்றிக்கொண்டு அடுத்த பக்கமும் இதேபோல செய்யுங்கள்.

விாிப்பில் அமா்ந்து வலது காலை இடது தொடைக்குக் கீழ் மடிக்கவும். அதைப்போல் இடது காலை வலது தொடைக்குக் கீழ் மடக்கவும். வலது கையால் இடது காலையும் இடது கையால் வலது காலையும் பற்றிக் கொள்ளவும்.

நிமிா்ந்த நிலையில் கண்ணை மூடிக்கொண்டு சுவாசத்தை மெல்ல உள்ளுக்கு இழுத்து மெல்ல வெளியில் விடவும். சுமாா் ஐந்து நிமிடம் கழித்து இப்படியே அமா்ந்த நிலையில் சுவாசத்தை உள்ளிழுத்துப் பின் வெளியே விடவும்.

உங்களது எந்த கால் முட்டியின் மீது உள்ளதோ அந்த கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து பயிற்சி செய்யவும்.

கோமுகாசனம் செய்தால் என்ன பயன்கள் (Benefits of Gomukhasana)

உடல் பருமன், மூட்டு வாதம் நீக்கும் கோமுகாசனம்.

அஜீரணம் நீங்கும்.நுரையீரல், மார்பு, இதயம் பலம் பெறுகின்றது.கை, கால்களில் ஏற்படும் வலி நீங்கும்.குடலிறக்கம்,  நீங்கும். தூக்கமின்மை, கூன்முதுகு நீங்கும்.

தலைவலி நீங்கும்.மூல வியாதி நீங்கும். மனிதனின் தோள்பட்டைகளில் காணும் ஏற்றம், இறக்கம் நீங்குகின்றது.

கணையம் ஒழுங்காக இயங்குகின்றது. அதனால் நீரிழிவு வராது. வந்தாலும் நீங்கும்.ரத்த ஓட்டம் சீராக உடலில் நடைபெறும். சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். தோள்பட்டை வலி நீங்கும். 

மார்பு விரிந்து நுரையீரல்கள், இதயம் வலுவடையும்.மனச்சோர்வு நீங்குகிறது, தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது, மனஅமைதி பெறுகிறது .

மன இறுக்கத்தை குறைக்கக்கூடியது கோமுகாசனம் (Gomukhasana). இது தொடை, இடுப்பு, முதுகு, தோள், கைகள் உட்பட உடலின் பல பகுதிகளையும் உறுதியாக்கும்.

நீண்ட நேர வாகனப் பயணம் அல்லது இடத்தைவிட்டு நகர முடியாத அலுவலகப் பணி காரணமாக ஏற்படும் தோள்பட்டை, கழுத்து வலியை குணமாக்கும்.

இதனைப் பயிற்சி செய்து பலன் அடைவோம். இந்த அற்புதக் கலையை நம் கையில் வைத்துக் கொண்டு நாம் ஏன் மருத்துவரிடம் சென்று அல்லல் பட வேண்டும்?
ஆசனம் செய்வோம். ஆரோக்கியம் பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published.