உணவருந்திய பிறகு செய்யக் கூடாதவை (Good habits to eat)

சத்தான உணவுகளை சமைத்து உன்பாதால் மட்டும் ஆரோக்கியம் பெற்றுவிட முடியாது. சாப்பிட்டதும் சில பழக்கங்களைக் (Good habits to eat)கைக்கொள்ள வேண்டும். அப்போது தான் உண்ட உணவு நன்கு செரிமானமாகி, உடலுக்கு சத்துக்கள் சேரும்.

சாப்பிட்டவுடன் தவிர்க்க வேண்டியவை (Good habits to eat)

குளித்து அரை மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம் அல்லது சாப்பிட்டு விட்டு இரண்டு மணிநேரத்தின் பின்னர் குளிக்கலாம். உண்ட உணவு சமிபாடு அடைய   ரத்த ஓட்டம் ,வயிற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டும்.

சாப்பிட்டவுடன்  வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிர்ச்சியாக்க,  ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும்.

உணவருந்திய பிறகு செய்யக் கூடாதவை ,Good habits to eat,சாப்பிடும்முறை,அன்னைமடி,annaimadi.com,eating method,

இதனால், வயிற்றுப்  பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவு சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். 

சாப்பிடும்போதோ சாப்பிடும் முன்போ பழங்கள் சாப்பிடக் கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும்.

சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு  முன்போ பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக்கூடாது. தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது, உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து, உணவு செரிப்பதைச் சிக்கலாக்கிவிடும்.

சாப்பிட்டதும் புகை பிடிக்கக் கூடாது. ‘உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்குச் சமமான விளைவை ஏற்படுத்தும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. 

சாப்பிட்டதும் இடுப்பு பெல்ட்டைத் தளர்த்தக் கூடாது.

தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்ட்டை தளர்த்திவிடுவார்கள். இதனால், சாப்பிட்ட  உணவு உடனடியாகக் குடலுக்கு சென்று விழுவதால், சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

சாப்பிட்டதும் நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால், உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது.

இப்படி உடனடியாக நடப்பதால், உணவில் உள்ள  சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும், சத்துகள் நம் உடலில் சேராது போய்விடும். சாப்பிட்டு சிறிது நேரத்தின் பின் நடைபயிற்சியை செய்யலாம்.

சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும்  நோய்க்கிருமிகளும் உருவாக வழிவகுக்கும்.உணவருந்திய பிறகு செய்யக் கூடாதவை ,Good habits to eat,சாப்பிடும்முறை,அன்னைமடி,annaimadi.com,eating method,

சாப்பாட்டில் மட்டும் அல்ல முறையிலும் கவனம் தேவை

சாப்பிடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் உள்ளன. பசிக்கும் பொழுது மட்டுமே சாப்பிட வேண்டும். அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் நோய் சேரும்.இதனால் ஆயுள் நிச்சயம் குறையும்.
நாம் சாப்பிடும் உணவில் மிளகு, சீரகம் கட்டாயம் இருக்க வேண்டும்.
மிளகு உடலில் இருக்கும் விஷத்தை முறிக்கும். சீரகம் உடம்பை சீராக வைத்திருப்பதால் சீர் + அகம் = சீரகம் என்று பெயர்.
இது குளிர்ச்சியை தரும். அதுபோல் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி சேர்ப்பதால் பித்தம் நீங்கி தலை சுற்றல் உண்டாகாமல் தடுக்கும். கடுகு உடலின் உஷ்ணத்தை ஒரே அளவில் சீராக வைக்க உதவும்.
அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் எல்லாத்தையும் சொல்லியாச்சு என்று தானே பார்க்கிறீர்கள்! ஆமாம் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் அனைத்தும் நமக்கு மருந்து தான்.
சாப்பிடும் பொழுது பேசக் கூடாது, படிக்கக்கூடாது. மொபைல் போன் பாவிக்க கூடாது. இடது கையை கீழே ஊன்ற கூடாது. சாப்பிடும் பொழுது வீட்டின் கதவு மூடி தான் இருக்க வேண்டும். வாசலுக்கு நேரே திறந்து வைத்துவிட்டு உட்கார்ந்து சாப்பிட கூடாது.
 
உணவருந்திய பிறகு செய்யக் கூடாதவை ,Good habits to eat,சாப்பிடும்முறை,அன்னைமடி,annaimadi.com,eating method,
 
வெளியில் இருந்தாலும் செருப்பு அணிந்து கொண்டு சாப்பிடக்கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிடக்கூடாது.
சாப்பிடும் பொழுது சாப்பாட்டில் மட்டும் தான் கவனம் இருக்க வேண்டும். அவசர அவசரமாக சாப்பிடாமல் ஒவ்வொரு பருக்கைகளையும் நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது கோபத்துடன் சாப்பிடக்கூடாது. நடுவில் எழுந்து எழுந்து போய் திரும்ப வந்து சாப்பிடக் கூடாது, இருட்டான இடங்களில், நம் நிழல் படும் இடங்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.
 
அது போல் சாப்பிடும் தட்டை கையில் மற்றும் மடியில் வைத்துக் கொண்டு சாப்பிட கூடாது. படுத்து கொண்டே சாப்பிடக் கூடாது.
இரவு நேரத்தில் கீரை, தயிர், நெல்லிக்காய், பாகற்காய், இஞ்சி, கஞ்சி போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.
இதுபோல் சாப்பிடும் உணவு விஷயத்தை தெய்வீகமாக எடுத்துக்கொண்டு, கிடைத்த உணவிற்காக கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு சாப்பிடுங்கள்.உணவின் சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும்.இதனால், நீண்ட ஆயுள் மற்றும் செல்வவளம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *