ஆரோக்கியம் என்பது என்ன?(Good Health)

ஆரோக்கியம் (Good Health)என்றதும் இரண்டு நினைவிற்கு வரவேண்டும் 1. உடல் ஆரோக்கியம், 2. உணவு ஆரோக்கியம். உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கிய உணவு அவசியமானது.

இரண்டும் ஒன்றுடன் ஒன்றாய் சேர்ந்தது. எனவே பொதுவாக ஆரோக்கியம் என்றால் முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு ஆரோக்கியம் தான். அது சீரடைந்தால் உடல் தானாகவே ஆரோக்கியமாக இருக்கும்.

வாழ வேண்டும் என்றால் ஆரோக்கியமாக (Good Health)வாழவேண்டும். ஆனந்தத்துடன் வாழ வேண்டும். வாழ்நாளை பரிபூரணமாக அனுபவிக்க வேண்டும்.

நினைத்ததைக் கிடைத்ததை அருந்துகிறோம். உணவை உட்கொள்கின்றோம். இதில் எங்கு ஆரோக்கியம் வருகின்றது. எப்படி ஆனந்த ஆரோக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் சீர் கெட்டபின் அங்கும் இங்கும் அதற்காக அலைகின்றோம்.

வாழ்நாளை முழுக்க முழுக்க அனுபவிக்க கடைசி நிமிடம் வரை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கிய உடல் வேண்டும். அதற்கென திட்டங்கள் இட்டு செயல்படவேண்டும்.

வாழ்வு வளம் பெற உடல், மனது ஆரோக்கியமாய் இருக்க சில நல்ல பழக்க வழக்கங்களை உணவு முறையில் நடைமுறைப் படுத்தி பழக வேண்டும்.

நாம் பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவன். பழக்கத்தினால் எதையும் சாதிக்க முடியும். அவனால் எதையும் விரைவாக பழகவும் முடியும். 

அளவான உணவு

நீங்கள் மனிதர்கள் போலச் சாப்பிடாமல் விலங்குகள் போல் உணவு உண்பதே சிறப்பு. எப்படி என்றால் மனிதன் தன் ருசிக்காக மேலும் மேலும் என விரும்பி சாப்பிடுகின்றான்.

விலங்குகள் தன் பசிக்காக மட்டுமே சாப்பிடுகின்றன. பசி அடங்கியதும் அது உண்பதை நிறுத்திவிடும். இதுவே சிறந்த பழக்கம்.                                                                                                                                                                           

‘எண்சாண் உடம்பிற்கு வயிறே பிரதானம்’ என ஒரு பழமொழி உண்டு. இதை பல இடங்களில் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உபயோகித்தாலும் இதன் முதண்மை வயிற்றைப் பேணிக் காக்க வேண்டும் என்பதுதான்.

உடலின் உறுப்புக்களுக்கு தேவையான சத்துக்களை சக்கரைப் பொருளாக மாற்றி இரத்தத்தில் கலக்கச் செய்வது இரப்பை என்ற வயிறே ஆகும்.

இது தன் செயல் திறனை இழந்தால் சத்துக்கள் உடலில் கலப்பது குறையும். பல உறுப்புகளின் செயலாக்கம் குறைந்துவிடும். இரப்பையின் சக்தி குறைந்தால் அசீரணம் ஏற்படும்.

உணவை நாம் முன்பு அருந்திய அளவிற்கு சாப்பிடமுடியாது. நன்றாயுள்ளது என்றோ கிடைத்தது என்றோ எதையும் சாப்பிட சாப்பிட வீணான கோளாறுகள் ஏற்படும்.

அசீரணத்தால் வந்தி பேதி ஏற்படலாம். இன்னும் பல குறைகள் உண்டாகும். மேலும் ஒரு இயந்திரம் கூட ஓர் காலஅளவு தான் இயங்குகிறது. பின் அதன் திறன் குறைந்துவிடும். ஆரோக்கியம் என்பது என்ன?,Good Health,அன்னைமடி,annaimadi.com,ஆழ்ந்த உறக்கம்,ஆரோக்கிய உணவு,healthy food,

வாழ்நாள் பூராவும் இயங்க வேண்டிய இந்த இரப்பையை பேணிக் காக்க வேண்டியது முதல் திட்டமாக இருக்க வேண்டும். 

எனக்கு இருக்கும் பிரச்சனையில் இதற்கு எப்படி முக்கியம் கொடுப்பது என்று சரியான நேரத்தில் உண்பதில்லை, கிடைத்த எதையும் உண்பது, காலம் தாழ்த்தி உண்பது, மிக அதிகமாக உண்பது, உண்ணாமலே இருப்பது ஆகியவை தவறான கருத்தாகும்.

நீங்கள் எதற்காக உழைகின்றீர்கள்?

நீங்கள் உண்ண, உங்களை நம்பி உள்ளவர்களைப் பாதுகாக்க. நீங்கள் நலமுடன் இருந்தால் தான் உங்களை நம்பிய உறவுகளுக்கு உங்கள் உதவி கிடைக்கும்.

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் உடல் நலத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களின் நல்வாழ்வு நம் வாழ்வுடன் பின்னப்பட்டுள்ளது.

உடலை ஆரோக்கியமாக வைக்க நாம் செய்ய வேண்டியது(Good Health)

சூரிய ஒளி

காலை சூரியஒளி படுமாறு சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். காற்று சூரிய ஒளி நம் உடம்பில் பல தேவையான இயற்கை மாற்றங்கள் செய்யும்.

நல்ல சுவாசம்

நல்ல சீரான மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் பிரணாயமம் செய்யுங்கள்.

நீர்சத்து

உணவு அருந்தியபின் நீர் அருந்தவும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் நீர் பருகுங்கள்.ஆரோக்கியம் என்பது என்ன?,Good Health,அன்னைமடி,annaimadi.com,ஆழ்ந்த உறக்கம்,ஆரோக்கிய உணவு,healthy food,

உடல் பயிற்சி

முடிந்த அளவு உங்களுக்குத் தெரிந்த சாதரண பயிற்சிகளைச் செய்யுங்கள். நடைபயிற்சியாவது நாளும் செய்யுங்கள்.

ஆரோக்கிய உணவு

உணவு என்ற உடன் சிலருக்கு சுவை நினைவிற்கு வரும். சுவைக்காக உணவருந்தாதீர். தேவைக்காக அருந்துங்கள். “அற்றல் அளவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான் நெடுதுய்குமாறு” என்பதற்கேற்ப அளவறிந்து தேவைக்கேற்ப தேவையானவைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

அப்போது நோயும் மருந்தும் தேவையில்லை.  சராசரியாக ஒரு குழைந்தைக்கு ஒருநாளைக்கு 2000 கலோரிகளும், இளைஞர்களுக்கு 3500 கலோரிகளும் முழுவளர்ச்சி அடைந்தவர்களுக்கு 3000 கலோரிகளும் தேவைப்படும்.

பழவகைகள்,திரவ வகை,காய்கறிகள்,பருப்பு,தானியவகை சிறுதானியம் ,மாமிசம், பாற்பொருள் போன்ற ஒவ்வொரு வகைகளிலும் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்க்கவும்.

ஆழ்ந்த உறக்கம்

தேவையான தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு (Good Health) மிக முக்கியம். ஆரோக்கிய உடல் உள்ளவர்களுக்கு, உழைப்பவர்களுக்கு நல்ல உறக்கம் இயற்கையாகவே கிடைக்கும். மற்றவர்கள் படுத்த உடன் உறங்க சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

சராசரியான எடை

ஒவ்வொருவரும் தங்கள் உயரத்திற்கு வயதிற்கு ஏற்ப இவ்வளவு எடை இருக்கவேண்டும் என கணக்கிட்டுள்ளார்கள். அதைக் கண்டு உங்களின் எடையை நீங்கள் பராமரிக்க வேண்டும்.

உங்களின் குழைந்தகள் சராசரியாக நன்றக வளர்கிறார்களா என்பதை நீங்களே உயரத்தையும் எடையும் கொண்டு கணக்கிட்டு தெரிந்து கொண்டு தகுந்த ஆலோசனையுடன் நடவடிக்கை எடுக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *