தினமும் பச்சை இலைவகை விரட்டும் நீரிழிவை! (Green leaf type & Diabetes)

தினம்தோறும்  கீரைவகைகளை உணவில் சேர்ப்பதால் நீரிழிவை தடுக்க(Green leaf type & Diabetes) முடியும் என்கிறார்கள்.

நீரிழிவைத் தடுப்பதற்கான வழிமுறைகளாக ஒவ்வொருவரும் பலவற்றை எல்லாம் செய்கின்றோம். சீனியை தவிர்க்கிறோம்.இனிப்புபண்டங்களை நிறுத்தி விட்டோம்.

ஆனால் சீனி சாப்பிடாவிட்டாலும் வருகிறது.இன்னும் கூடிக் கொண்டே தான் இருக்கிறது. பரம்பரையில் இல்லாவிட்டாலும் வருகிறது. அப்படியானால் தடுப்பது எப்படி?

 • போசாக்குள்ள உணவாக உட்கொள்ளல். ஆனால் இது சீனியைத் தவிர்ப்பது என்று அர்த்தம் அல்ல.
 • தினசரி உடற்பயிற்சி செய்தல் அல்லது உடல் உழைப்பில் ஈடுபடுதல்.
 • உடல் எடையை சரியான அளவில் பேணுதல்.

எனச் சுருக்கமாகச் சொல்லலாம்.

போசாக்குள்ள உணவு என்பது என்ன?

இனிப்பு, எண்ணெய், நொறுக்குத் தீனி போன்றவற்றை மிகக் குறைவாக உண்பது. மாப்பொருள் உணவை அளவோடு உண்பது, புரத உணவுகளை தேவையான அளவில் உண்பது, காய்கறி மற்றும் பழவகைகளை அதிகம் உண்பது இவற்றை போசாக்குள்ள உணவு எனச் சொல்லலாம்.

தினமும் ஒவ்வொரு பங்கும் 80 கிராம் நிறையுள்ளதாக 5 பங்கு அளவில் காய்கறிகளையும் பழவகைகளையும் உணவில் சேர்க்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்கப்பட்ட கருத்தாகும்.

எத்தகைய காய்கறி உணவுகள் நீரிழிவு வராமல் தடுக்க உதவும்

மாப்பொருள் குறைந்த அளவுள்ள காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகளில் மாப்பொருள் உள்ளதாயினும் அவற்றில் நார்பொருளும் நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால் அளவோடு உண்பதில் தவறில்லை. ஏனைய காய்களிகளில் மாப்பொருள் குறைவாகவும், நார்ப்பொருள் அதிகமாகவும் உள்ளதால் நல்லது.

இலைவகைகள் (Green leaf type & Diabetes) மேலும் சிறந்தவை என்கிறார்கள்.

பச்சை நிறமான இலைவகை நீரிழிவைத் தடுக்கும் (Green leaf type & Diabetes)

பச்சை நிறமான இலைவகைகள் அதிகளவு உட்கொள்ளும் உணவு முறையானது நீரிழிவு (Green leaf type & Diabetes) ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என ஒரு ஆய்வு கூறியது.

ஏனைய காய்கறிகள் உண்பவர்களை விட அதிகளவு பச்சை நிறமான இலைவகைகளை உண்பவர்களுக்கு மட்டுமே நீரிழிவு வருவதற்கான சாத்தியம் 14 சதவிகிதம் குறைவு என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 13 வருடங்களாக 223,000 பேரிடையே செய்த அவதானிப்பின் முடிவு.

ஆனால் ஏனைய வகை காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உண்பவர்களிடேயே இந்தச் நீரிழிவுக்கு எதிரான சாதகமான பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை.

இதன் அர்த்தம் ஏனைய வகை காய்கறிகள் பழங்கள் பயனற்றவை என்பது அல்ல. ஏனைய பல ஆராய்ச்சி முடிவுகள் எல்லாப் பழவகைகளும், காய்கறிகளும் நீரிழிவைத் தடுப்பதில் பங்களிப்பதுடன், இருதயநோய்களுக்கான சாத்தியத்தையும் குறைப்பதாகக் கூறுகின்றன.

ஆயினும் இலைவகை உணவுகளின் பங்களிப்பு (Green leaf type & Diabetes) அதிகம் என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது

  Daily green leafy vegetables repel diabetes,Green leaf type & Diabetes,annaimadi.com,பச்சை நிறமான இலைவகை நீரிழிவைத் தடுக்கும்,Green leafy vegetables can help prevent diabetes,பச்சை இலை வகை உணவுகளின் போசாக்கு ,Nutrition of green leafy vegetables,அன்னைமடி,போசாக்குள்ள உணவு,சர்கக்ரைநோய்க்கு தீர்வு,to control diabetes 

இலைவகை உணவுகளின் நற்பயனுக்குக் காரணம் என்ன?

ஒட்சிசனெதிரிகள் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பசுமையான பச்சை இலைகளில் பீற்றாகரோட்டின், பொலிபீனோல்ஸ், விற்றமின் சி போன்ற ஒட்சிசனெதிரிகள் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்களும் தாராளமாக இருப்பதே காரணம் எனலாம்.

பச்சை இலை வகை உணவுகளின் போசாக்கு (Green leaf type & Diabetes)

 • இலைவகைகள் மிகக் குறைந்தளவு கலோரிப் பெறுமானம் உள்ள உணவுகளாகும். அவற்றிலுள்ள மாப்பொருள்களானது நார்ப்பொருள்களிடையே அடைபட்டு இருப்பதால் எளிதில் சமிபாடடைவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதைக் குறைக்கின்றன.
 • இரும்பு, கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனியங்கள் உண்டு.
 • விற்றமின் D வகைகளுடன், விற்றமின்கள் K, C, E  ஆகியவை நிறையக் கிடைக்கின்றன. ஒரு கப் சமைத்த இலையுணவு ஒரு மனிதனுக்கு தினசரி தேவைப்படும் விற்றமின் K யைவிட 9 மடங்கு அதிகமாகக் கொடுக்கும் எனத் தெரிகிறது.

 • பீட்டாகரோட்டின், லியுடின் (beta-carotene, lutein, and zeaxanthin)  போன்ற பைட்டோநியுரியன்டசை (phytonutrients)     இலைவகை உணவுகள் தருகின்றன. இவை எமது உடற்கலங்கள் சேதமாவதைத் தடுக்கின்றன.
 • வயது அதிகரிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை (Age related macular degemeration) தடுப்பதிலும் இவை உதவுகின்றன.
 • கொலஸ்டரோல் குறைப்பு, இருதய நோயிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இப்பொழுது ஒமேகா 3 (Omeg 3 Fat) என்ற கொழுப்பை பலரும் பயன்படுத்துகிறார்கள். இது பெருமளவு ஆழ்கடல் மீன்களிலிருந்தே பெறப்படுகின்றது. ஆயினும் தாவர இலை உணவுகளிலும் இது சிறிதளவு காணப்படுகிறது.

பசுமை நிறமான இலை வகைகளில் விற்றமின் K அதிகம். இது

 • நீரிழிவுஏற்படாமல் தடுக்க உதவும்.
 • அழற்சியைத் தடுக்கும் குணம் விற்றமின் கே க்கு இருப்பதால் மூட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
 • இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதை தடுக்கும் ஆற்றலும் விற்றமின் கே க்கு உண்டு.

எனவே நீரிழிவைத் தடுப்பதற்காக மட்டுமின்றி மேற் கூறிய பல பலன்களும் கிட்டும் என்பதால் தினமும் உணவில் பசிய இலை உணவைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *