வாட்டிய கோழி இறைச்சி செய்முறை (Grilled chicken)
கோழி இறைச்சியை அதிக எண்ணெயைப் பயன்படுத்தாமல் அனலில் வாட்டி (Grilled chicken) எடுக்கும் சமையல் முறை . இறைச்சி நேரடியாக நெருப்பிலோ அல்லது அதன் அனலிலோ சமைக்கப்படும். சுருக்கமாக் ஆதி மனிதனின் உணவு முறை என்று சொல்லலாம்.வித்தியாசம் என்னவேனில் ,நாம் இப்போது அதிக மசாலாக்களை சேர்த்து செய்கின்றோம். அவ்வளவு தான்.
தேவையான பொருட்கள்
- கோழித் துண்டுகள் – 1/2 கிலோ
- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
- தனியா தூள் – கால் மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாயை ஊறவைத்து அரைத்தது – 2 தேக்கரண்டி அல்லது மிளகாய்த் தூள் – அரை மேசைக்கரண்டி
- மிளகுத் தூள் – அரை மேசைக்கரண்டி
- புளித்த தயிர் – 1 கப்
- கரம் மசாலா – 1 தேக்கரண்டி
- தேசிக்காய் – ஒன்று
- இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
- ஒலிவ் எண்ணெய் – தேவையான அளவு
- கல் உப்பு – தேவையான அளவு
செய்யும் முறை
கோழி இறைச்சியை கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய் பேஸ்ட், மிளகுத் தூள் ,கரம் மசாலாத்தூள், தனியா தூள், இஞ்சி பூண்டு விழுது தயிர் , உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் வரை மூடிவைக்கவும்.
மசாலாகலவை இறைச்சியில் நன்றாக ஊறவேண்டும்.
மேலே படத்தில் காட்டியவாறு ஏதோ ஒரு வகையான கிரிலில் (Grill) செய்யலாம். இல்லையென்றால் ,நீங்கள் சாதாரணமான கல் அடுப்பின் மேல் கம்பி அமைப்பை வைத்து செய்யலாம்.
கோழித் துண்டுளின் மீது லேசாக எல்லா இடமும் படும்படியாக எண்ணெய் பூசவும்.
வெளியே அடுப்பில் விறகை வைத்து எரிய விடவும்.
இப்படி ஒரு கம்பி அமைப்பை அடுப்பின் மேல் வைத்து கோழிகளை வாட்டி எடுக்கலாம்.
பரிமாறுவதற்கு முன் தேசிக்காய்புளியை பிழிந்து விடவும்.
மிக்சரில் கருகிக் கிடக்கும் பூண்டு, வடையின் வெளிப்பகுதியில் கருகிய பச்சை மிளகாய் போல,கருகிய உணவின் சுவை அபாரமாக இருக்கும்.
வட்டிய கோழியின் சுவையை நினைத்துப் பார்க்கும்போதே உமிழ்நீர் சுரக்கும்.
இறைச்சியிலுள்ள கிருமிகளை நீக்கி இயல்பான சுவையை மஞ்சளும் மிளகும் கொடுக்கும்.
நாட்டுக்கோழி இறைச்சி தான் அதிக சுவையாக இருக்கும்.
கிரில்லில் அதிகமாக மீன், ஆடு ,மாடு, கோழி,பன்றி இறைச்சிகளை சுட்டு சாப்பிடுவார்கள். சைவத்தில் பனீர் ,உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாயை வைத்து பார்பிக்யூ செய்கிறார்கள்.
கோழிகளை குச்சியில் குத்தி செய்வதாயின் இடையிடையே வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் போன்றவற்றை வட்டமாக வெட்டி வைத்தால் சுவை கூடும்.
ஆதி மனிதனின் உணவு
இதை கிராமத்து சிறுவர்கள் குளத்தில் மீன் பிடித்து அல்லது காடுகளில் பறக்கும் காடையைப் பிடித்து நெருப்பில் வாட்டியும் சுட்டும் சாப்பிடுவார்கள். அதற்கு மிளகாய்த்தூளையும் உப்பையும் இறைச்சியின் மீது தடவி சமைப்பார்கள்.
ஆதி மனிதன் தொட்டு காலம்காலமாக இருந்த உணவு முறைகள் தான் இவை. முன்னோர்கள் விரும்பிச் சாப்பிட்ட உணவுகள் இப்போது வேறு வடிவில் , சில வசதிகளுடன், பலவகையான மசாலாக்களுடன்செய்யப்படுகிறது.
புளித்த தயிர், மிளகாய்த் தூள் உப்பு கொண்டு மசாலாக்கள் தடவிய இறைச்சியை கம்பியில் சொருகி நெருப்பின் தணலில் வாட்டி ,நம் கண்பார்வையில் நேரடியாக தயாராவதுதான் இதன் ஸ்பெஷல்.
உலகளவில் சிறந்த சுவையுடைய உணவாகவும், எல்லா காலங்களிலும் சமைக்கப்பட்டுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பிரதான உணவாக இதுவே இருக்கிறது.
குறிப்பு
ஊற வைத்து அரைத்த மிளகாய் பேஸ்ட் மற்றும் கல் உப்பு ஆகியவை விசேட சுவையைக் கொடுக்கும்.
மிளகாய்த் தூளும் உப்பும்தான் முக்கியம்.
சரியான பதத்தில் வாட்டி எடுக்க வேண்டும்.. இறைச்சிக்குள் மிளகாய், உப்பு, இஞ்சி, பூண்டு கலவை சேர்ந்து இருக்க வேண்டும்.
மசாலா அதிக மாகவோ குறைவாக வோ இருக்கக் கூடாது.