இயற்கைமுறையில் தலைமுடி பராமரிப்பு (Hair care)

முடியை உதிராமல் தடுத்தால் (Hair care) மட்டும் போதாது, புதிய முடியின் வளர்ச்சியும் நமக்கு அவசியம்.

அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க (Hair care) நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளை அனுபவித்து திருந்துகின்றனர்.

அதற்காகவே  கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, கண்ட ஷாம்பூக்களைப்  பயன்படுத்துகிறோம். ஆனாலும், பலருக்கு முடி உதிர்வது குறைந்திருக்காது.சிலருக்கு ஆசைப்பட்டபடி அடர்த்தியான கூந்தலும் வளர்ந்திருக்காது. என்ன காரணம்? 

முடி பராமரிப்புக்காக (Hair care) சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது.

கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால் தான் பலன் கிடைக்கும். மேலும் இயற்கை வழி தான் சிறந்தது .

முடி வளர்ந்துகொண்டே இருப்பதில்லை, மாறாக இரண்டு முதல் ஆறு வருடங்கள் தான் வளருகிறது. பின்னர் அது உதிர்ந்து, சிறிது இடைவெளிக்கு பிறகு அதே துளையிலிருந்து மற்றொரு புதிய முடி வளர ஆரம்பிக்கிறது.

ஒரு முடியின் வாழ்நாள் காலம், முடி சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு தலைமுடி சம்பந்தமாக எந்த பிரச்சினையும் இல்லாதிருந்தாலும் கூட, இந்த சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 70 முதல் 100 முடிகள் தானாகவே உதிர்கின்றன.

தலைமுடி பல்வேறு நிறங்களில் இருப்பதற்கு காரணம் என்ன?

தலைமுடியின் நிறத்தை மெலனின் என்ற கரும் பழுப்பு நிறமியின் அளவும் அது பரவியிருக்கும் விதமுமே பெருமளவு தீர்மானிக்கின்றன.

மெலனின் என்பது முடி, தோல், கண்கள் ஆகியவற்றில் காணப்படும் உயிரியல் நிறமியாகும். நிறமி அதிகளவில் இருந்தால் தலைமுடியின் நிறமும் கன்னங்கரேல் என்று இருக்கும்.

மெலனின் அளவு குறைய குறைய முடியின் நிறமும் கருப்பிலிருந்து பழுப்பு, சிவப்பு அல்லது பொன்னிறமாக மாறும். முடியில் கொஞ்சம் கூட மெலனின் இல்லையென்றால் அது வெண்ணிறத்தில் பளபளக்கும்.

பொடுகு தவிர தலைமுடி உதிர்வதும் தலைமுடி நரைப்பதும் கூட அநேகரின் கவலைக்கு காரணமாகின்றன.

வீட்டிலிருக்கும் ஒரு பொருளைக்கொண்டு தலைமுடியை எளிதாக பராமரிக்கலாம்.

தலைமுடியை எளிதாக பராமரிக்க சில குறிப்புகள்(Tips for easy hair care)

பால்

பாலில் இரண்டு விதமான ப்ரோட்டீன் இருக்கிறது. இது தலைமுடிக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுத்திடும். ப்ரோட்டீன் குறைவான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் தலைமுடி வலுவிலக்கும்.

உங்களது ஆரோக்கியத்தை பொறுத்தே தலைமுடியின் ஆரோக்கியமும் இருக்கும் என்பதால் நேரடியாக தலைமுடிக்கு ஊட்டச்சத்து ஏற்ற வேண்டும் என்று நினைக்காமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.

தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணம், போதிய ஊட்டச்சத்து இன்றி தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவிழப்பது தான்.

இதனை தவிர்க்க முட்டை, தேன் மற்றும் சிறிதளவு பால் சேர்த்து தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இது தலையின் வேர்கால்களை வலுப்படுத்தும்.இயற்கைமுறையில் தலைமுடி பராமரிப்பு,Hair care,அன்னைமடி,annaiamdi.com,nature hair care,குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி,Ways to take care of hair,தலைமுடியை நன்கு பராமரிக்க தவிர்க்க வேண்டியவை,தலைமுடியை எளிதாக பராமரிக்க சில குறிப்புகள்,Tips for easy hair care,இயற்கைமுறையில் தலைமுடி பராமரிப்பு,Hair care,அன்னைமடி,annaiamdi.com,nature hair care,குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி,Ways to take care of hair,தலைமுடியை நன்கு பராமரிக்க தவிர்க்க வேண்டியவை,தலைமுடியை எளிதாக பராமரிக்க சில குறிப்புகள்,Tips for easy hair care

 பாலில் அதிகப்படியான க்ளுடமைன் எனப்படுகின்ற ஒரு வகையான அமினோ அமிலம் இருக்கிறது. இது முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

பாலைக் கொண்டு முடியை ஸ்ட்ரையிட்னிங் செய்ய முடியும். முக்கால் கப் பாலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். சாதாரண பால் பயன்படுத்தலாம்.

அல்லது தேங்காய் பால் பயன்படுத்தினால் இன்னும் சீக்கிரமாக பலன் கிடைக்கும். தலை முழுவதும் அந்தப் பாலை ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

முட்டை: முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும்.

ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.

சீப்புகளை பயன்படுத்தவும்

சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இதன் மூலம் தலைக்கு ரத்த ஓட்டம் கிடைத்து முடி, அடர்த்தியாக வளரும். பெண் குழந்தைகளுக்கு முடி நீளமாக வளரும் போது, வகிடை இரண்டாகப் பிரித்து இரட்டை பின்னல் போடுவதால் நீளமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

ஆயில் மசாஜ்

முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிப்பதாகும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

வெங்காயச் சாறு

வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம்.

தன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவை

ஹேர் ட்ரையர்

தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும்.

அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.

கண்டிஷனர்

கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கண்டிஷனர்களான தயிரைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

மன அழுத்தம்

தற்போது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அதிகம். அப்படி மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும்.

ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.

போதிய தூக்கம்

அன்றாடம் 6-7 மணிநேரம் தூக்கமானது அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும்.

குழந்தையிலேயே தலைமுடியைப் பராமரிக்க வழி(Ways to take care of hair)

குழந்தை பிறந்தது முதல் தலைமுடியை ஆரோக்கியமாகப் பராமரித்துவிட்டால் வயதானாலும், முடி ஸ்ட்ராங்காக அழகாக இருக்கும். அந்தக் காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் குளியல் முறைகள் இருந்தன. 

எண்ணெய் தேய்ப்பதால் பலன் உண்டா இல்லையா என்றால், சருமத்திற்கு மென்மையையும், பளபளப்பையும் கூட்டி, உடலைப் புத்துணர்ச்சியாக்குவதில் பெரும் பங்கு எண்ணெய்க்கு உண்டு.

சருமத்தையும் முடியையும் வறண்டுபோகாமல் வைத்திருக்க எண்ணெய் நிச்சயம் உதவும்.

இதனால் தலையில் முடி வளர்ச்சியைத் தடை செய்யக்கூடிய செதில்கள் வராமல் பாதுகாப்பதுடன் அடர்த்தியாக வளரத் தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *