முடி வளர்ச்சியில் வெங்காயம் ( Onion for hair growth)

முடி வளர்ச்சிக்கு வெங்காயத்தின் மாயம்  ( hair growth)

தலைமுடி சார்ந்த பல பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக சின்ன வெங்காயம் (Onion for hair growth) இருக்கிறது. தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது. முடி உதிர்வு (hair fall), நுனிமுடி வெடிப்பு , பொடுகு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது.வெங்காயத்தில் ஆண்டி பாக்டீரியல் பொருள்அதிகம் இருப்பதால் தலைமுடியின் வேரில் நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.

வெங்காய சாற்றுடன் வேறு சில பொருட்களை சேர்த்து கூந்தலுக்கு மாஸ்க் போடுவதால்  முடி உதிர்வது இல்லாமல் போவதோடு, கூந்தல்  நன்கு பொலிவோடு காணப்படும்.அவை

முடி அடர்த்தியாக வளர

வெங்காய சாற்றை தலைமுடியின் அடிப்பகுதியில் தடவ வேண்டும்.ஒரு துணியை தலையில் சுற்றி 20-30 நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.

இதன் மூலம் முடி நன்கு வலிமை அடைவதோடு தலைமுடியின் வேரில் உள்ள பிரச்சனைகளும் அகலும்.குளிர்காலத்தில் இவ்வாறு செய்வதை தவிர்க்கவும்.

 

Onion for hair growth
சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. 
வெங்காயச் சாறு தயாரிக்கும்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன் அந்த நீரை வடிகட்டி எடுக்க வேண்டும்.
 

Check Price

கூந்தல் நன்கு வளர (Onion for hair growth) 

இதற்கு வெங்கயத்தை அரைத்து அந்த சாற்றில் சிறிது தேன் கலந்து அதனை தலில் தடவி மசாஜ் செய்து குளிக்கவும்.இதனால் சொட்டையான இடத்தில் கூட முடி வளரும்.

அரைத்த வெங்காய சாற்றுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தடவி நன்கு மாசாஜ் செய்யவும்.சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் சுற்றி 20 நிமிடங்களில் தலையை கழுவவும்.

பொடுகு நீங்க

இதற்கு வெங்காயச் சாற்றில் தேசிக்காய்புளி சேர்த்து தலைக்கு மசாஜ் செய்து, சிறிது நேரத்தில் தலையைக் கழுவவும்.

இதன் மூலம் பொடுகு நீங்குவதோடு தலைமுடி வேர்கள் சுத்தமாக்ககப்படுவதால் முடி வளர்ச்சியும் கூடும்.

Leave a Reply

Your email address will not be published.