முடி உதிர்வை தடுக்கும் நெல்லிக்காய் (Hair loss treatment)
ஆரோக்கியமான, அதிகமான முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நெல்லிக்காயில் (Hair loss treatment) நிறைந்துள்ளது.நெல்லிக்காய் (Amla) முடி உதிர்தலைத் தடுத்து , தலைமுடிக்கு புத்துணர்வு அளிக்கிறது.
அதாவது பொலிவான கூந்தலைப் பெறுவதற்கு நல்ல தீர்வாக (Hair loss treatment) நெல்லிக்காய் இருக்கிறது.
நெல்லிக்காயை தினசரி உணவில் பயன்படுத்தி வந்தால் முடி கொட்டாது. அது மட்டுமல்லாது நெல்லிக்காய் முடி வளர்வதையும் ஊக்கப்படுத்தும்.
முடி உதிர்தலுக்குமரபணு, முறையற்ற உணவுகள், நீண்ட நாள் நோய், மன அழுத்தம் , மற்றும் விற்றமின் சி (Vitamin C) குறைபாடு போன்றவைகள் தான் முக்கிய காரணிகள் ஆகும்.
நெல்லிக்காயில் விற்றமின் சி-யுடன் அதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இளநரை,நுனிமுடி வெடிப்பு ஆகியவற்றையும் தடுக்கிறது.
அதிக இரசாயனங்கள் கலந்த ஷாம்பு,ஹேர் வாஷ் பாவனை, மாசுக்கள் , கூந்தலுக்கான சிகிச்சைகளால் போன்றன கூந்தலுக்கு பல வித அழுத்தத்தைக் கொடுத்து, முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.

நெல்லிக்காய் தயாரிப்புகள் (Hair loss treatment)
முடி உதிர்தலை தடுக்க தலையில் நெல்லிக்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் (Hair loss treatment) செய்யலாம்.இயற்கையானது.எந்தவிதமான பாதிப்பையும் தலைமுடிக்கு ஏற்படுத்தாது.
நெல்லிக்காய் எண்ணெய் (Amla Hair oil – Natural care for beautiful hair ) சீரான முறையில் தலைக்கு பூசி வரலாம்.
நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் , உடலை அமைதி கிடைக்கிறது. தலையில் இரத்த ஓட்டத்ம்அதிகரிக்கின்றது.
ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
அத்தகைய நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது.
நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது, கூந்தலை அடர்த்தியாக்குவது போன்ற பல நற்பலங்களைத் தருவதால்,தற்போது நெல்லிக்காய் எண்ணெய் (Amla oil), நெல்லிக்காய் இருக்கும் ஹென்னா (Hannah) போன்றவற்றை அதிகமானோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
நெல்லிக்காய் பொடியை (Amla powder), சீகைக்காய் பொடி மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து தலைக்கு போட்டு குளித்து வந்தாலும், கூந்தல் பொலிவு பெறுவதோடு அடர்த்தியாக அழகாக இருக்கும்.
பொடுகு தொல்லை இருந்தால், நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் பொடி பாவித்து வர,அதுவும் நீங்கிவிடும். நெல்லிக்காய்க்கு அந்த ஆற்றலும் உள்ளது.
இவை மட்டுமன்றி ,தினசரி உணவில் நெல்லிக்காயை , நெல்லிக்காய் ஜூஸ், இனிப்பு, ஊறுகாய், துவையல் அல்லது நெல்லிக்காய் சாதம் போன்றவைகளாக சேர்த்து வந்தாலும் நல்ல பலனைப் பெறுவது நிச்சயம்.