சுகப்பிரசவமாக கர்ப்பிணிகள் செய்ய வேண்டிய விஷயங்கள்

கருவுற்றதை உறுதி செய்ததும் உங்கள் மருத்துவரை அணுகி கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், வாழ்க்கை முறை குறித்து தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். கூடவே உரிய பரிசோதனை குறித்த தகவல்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் கருவின் வளர்ச்சியை உறுதி செய்து கொள்ள தேவையான விற்றமின்கள் ,சில வைட்டமின்கள் குறைவாக இருக்கும்பட்சத்தில் உணவு முறையும் உடன் மாத்திரைகளும் பரிந்துரைப்பார்.

பரிசோதனைகளை அவசிய தவிர்க்காமல் உரிய இடைவேளையில் செய்து கொள்ள வேண்டும். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற கர்ப்பகால நோய்கள் வராமல் தடுக்கவும் வந்தால் அதை கட்டுக்குள் வைக்கவும் இப்பரிசோதனைகள் அவசியம்.

உணவும் விற்றமின்களும்

உணவு முறையை பொருத்தவரை மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டில் இருக்கும் மூத்த தலைமுறையினரின் அனுபவங்களையும் கேட்க தவறாதீர்கள்.

கருவளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பழங்கள், காய்கள், கீரைகள், உலர் கொட்டைகள், விதைகள், திரவ ஆகாரம், முளைகட்டிய தானியங்கள், சுண்டல் வகைகள், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் , முட்டை, மெலிந்த கோழி இறைச்சி என்று திட்டமிட்டு தவறாமல் எடுத்துகொண்டால் கருவளர்ச்சி சீராக இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும்.

போலிக் ஆசிட் சத்து நிறைந்த வாழைப்பழம், சிறந்த மலமிளக்கியும் கூட. உடனடி ஆற்றல் தரக்கூடிய வாழைப்பழத்தைக் கர்ப்பிணிகள் சாப்பிடலாம். மலக்கட்டைத் தவிர்க்க அதிகளவில் கீரைகள், கனிந்த கொய்யா உட்கொள்வது அத்தியாவசியம்.

கீரைகளில் பொதிந்துள்ள விற்றமின்களும் தாதுகளும், தேவையான ஊட்டத்தை அள்ளிக் கொடுக்கின்றன. அதிக வாந்தி காரணமாக இழந்த நீர்ச்சத்தை மீண்டும் பெற சாத்துக்குடி சிறந்த தேர்வு.

annaimadi.com,healthy child,happy delevery time,foods for easy delivery,natrural delivery

இதை எக்காரணமும் கொண்டு அலட்சியம் செய்யகூடாது. வைட்டமின் பற்றாக்குறை கரு வளர்ச்சியை பாதிப்பதோடு குறைபிரசவத்தையும் தூண்டிவிடும். அதனால் கர்ப்பகாலம் முழுவதுமே கருவின் வளர்ச்சி சீராக இருக்க விற்றமின் குறைபாடில்லாமல் பார்த்து கொள்ல வேண்டும்.

ஆழ்ந்த உறக்கம்

கர்ப்பகாலத்தில் மன அழுத்தம், பதட்டம் போன்றவை தாண்டி குழந்தையின் அசைவும் சேர்ந்து தூக்கமின்மையை உண்டாக்கிவிடும். தூக்கமின்மை என்பது கர்ப்பகாலத்தில் இயல்பான ஒன்று.

தினமும் இரவில் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இரவில் தூக்க நேரம் குறைந்தால் பகலில் அதை ஈடு செய்ய சில மணி நேர தூங்குவது அவசியம்.

இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உணவை முடித்துவிட வேண்டும். தூங்குவதற்கு முன்பு மிதமான வெந்நீர் குளியல் எடுத்துகொள்வது தசைகளுக்கு இதமாக இருக்கும். படுக்கும் முன்பு ஒரு டம்ளர் பால் இலேசான சூட்டில் குடிப்பது  நல்ல தூக்கத்தை பெற உதவும்.

கட்டிலில் படுத்தாலும் கீழே படுத்தாலும் படுக்கை செளகரியமாக  இருக்க வேண்டும். படுக்கைக்கு முன்பு செல்ஃபோன், டீவி அனைத்தையும் தவிர்த்து நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம்.

அமைதி தரும் மெல்லிய இசை கேட்கலாம். கர்ப்பகாலம் முழுவதும் இதை கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கியமான அறிவான  குழந்தையை பெற்றுக் கொள்ளலாம்.

Check price

Maternity Belt for Breathable Pregnancy Back Support

உடற்பயிற்சியும் யோகாசனமும்

கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் போதுமான சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வது சிரமமாக இருக்கும். வாந்தி, ஒவ்வாமை, குமட்டல் இருப்பதால் கர்ப்பகால உடல் சோர்வு இருக்கவே செய்யும். ஆனால் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று நினைக்காமல் இயன்றளவு உடலுக்கு வேலை கொடுப்பது நல்லது.

உடலை வருத்தும் பயிற்சிகள் இல்லாமல் மிதமான நடைபயிற்சியை கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

நடைபயிற்சி செய்வது நெஞ்செரிச்சல் பிரச்சனையை குறைக்க செய்யும். ஜீரணத்தை அதிகரிக்க கூடும். கால்களில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.

தசைகளுக்கு வலிமை கொடுக்கும். உடல் ஒத்துழைத்தால்இலகுவான யோகாசனம் , வேறு மிதமான உடற்பயிற்சிகளும் செய்யலாம்.

உடல் எடை கட்டுப்பாடு

கர்ப்பகாலத்தில் குறிப்பாக 20  கிழமையின் பின் கருவின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பிணியின் உடல் எடையும் அதிகரிக்க கூடும். இது இயல்பானது.

கர்ப்பிணியின் உயரம் வயது இரண்டையும் கணக்கில் கொண்டு கர்ப்பகாலத்தில் அதிகரிக்க வேண்டிய உடல் எடையை மருத்துவர் அறிவுறுத்துவார். அதை அதிக கவனத்தோடு கடைப்பிடிப்பது அவசியம்.

ஏனெனில் தாய் மற்றும் சிசுவின் எடை இரண்டுமே அதிகரிக்கும் போது சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்பு குறைய தொடங்கும்.அதனால் சரியான முறையில் உடல் எடை அளவாக அதிகரிக்க வேண்டும்.

மன அழுத்தம்

கர்ப்பகாலம் முழுக்க மகிழ்ச்சியாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்பகாலத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

சுற்றியிருப்பவர்களும் கர்ப்பிணியின் மனதை பாதிக்கும் வகையில் எந்தவிதமான செயலையும் செய்ய கூடாது. மனதில் தேவையில்லாத கவலைகளை தேக்கி வைக்கக்கூடாது. மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்.

Happy pregnancy,annaimadi.com,healthy child,happy delevery time,foods for easy delivery

கர்ப்பகாலத்திலும்  பிரசவ நேரத்திலும் தாய்க்கும் சேய்க்கும் எந்த விதமான தொந்தரவும் இல்லாத போது சுகப் பிரசவமே (Happy pregnancy) நடக்கும்.

சரியான உணவு முறை, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை,  உள்ளவர்களின் அன்பான கவனிப்பு, சீரான  மருத்துவ கண்காணிப்பு போன்றவை ஒரு பெண்ணின் பிரசவத்தை சுகப்பிரசவமாக்கும் (Happy pregnancy) என்பதில் என்த ஐயமும் இல்லை!