உடல் நலத்தை பாதிக்கும் 5 பழக்கங்கள் (Health affecting habbits)

ஒருவர் தான் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக வளர்சிதை மாற்ற நோய்கள், மூட்டு மற்றும் எலும்பு கோளாறுகள், இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், அதிக எடை உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய  கேடுகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
அன்றாடம் பின்பற்றும் பழக்கவழக்கங்களில் (Health affecting habbits) சின்ன சின்ன மாற்றங்களை செய்வதன் மூலம் நல்ல ஆரோக்கியமாக  வாழலாம்.

இவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலம் நம் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.

நமது வாழ்க்கை முறையை பாதிக்கும் பழக்கங்கள் (Health affecting habbits)

நிறைவான தூக்கம் இன்மை

வாழ்க்கையில் முன்னேற ஒருவருக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவரது உடல்நலனை பேண தூக்கம் மிக முக்கியம்.

சரியாக தூங்காமல் தூக்கத்தில் சமரசம் செய்து கொள்வது என்பது மிகவும் ஆபத்தான பழக்கங்களில் ஒன்று.

நீங்கள் ஒரு இரவு சரியாக தூங்கவில்லை என்றால் மறுநாள் உங்களுக்கு ஏற்படும் சோர்வு, எரிச்சல் உணர்வு மற்றும் கிறக்கம் இவற்றை கவனித்திருப்பீர்கள்.

நம் உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்கும் அளவிற்கு தூங்காமல், குறைவான மற்றும் தரமில்லா தூக்க பழக்கத்தை பின்பற்றுவதால் நோயெதிர்ப்பு மண்டலம், சுவாசம் மற்றும் செரிமான அமைப்பு உள்ளிட்டவற்றில் நாளடைவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே நம் உடல் இயற்கையான வேகத்தில் புத்துயிர் பெறுவதை உறுதிப்படுத்த தினமும் குறைந்தபட்சம் 6 மணிநேரமாவது தூங்க வேண்டும்.

விலங்கு-புரத உணவுகளை அதிகமாக சாப்பிடுதல்

உடல் நலத்தை பாதிக்கும் பழக்கங்கள் ,Health affecting habbits,அன்னைமடி,தாவர புரத உணவு ,சரியான தூக்கம்,annaimadi.com,plant protein foods,sleeping habbits

சீஸ் மற்றும் இறைச்சி போன்ற புரதங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்வது, IGF1 என்ற ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இந்த ஆபத்து காரணியை அதிகமாக எடுத்து கொள்ளும் ஒருவர் புகைப்பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் கூட, அவர் புகைபிடிப்பதற்கு சமமான பாதிப்புகளை உடலில் ஏற்படுத்துகிறது.

எனவே இத்தகைய புரதங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க, பீன்ஸ்,கடலை,சோயா போன்ற தாவர புரதங்களை உங்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

நீண்ட நேரம் ஒரே நிலையில் இருத்தல்

நீங்கள் அலுவலகத்தில் நாள் முழுவதும் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது அதிகளவில் புகைபிடிப்பதற்கு சமம்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, வேலைக்காகவோ அல்லது வாகனம் ஓட்டுவதற்காகவோ, அது நுரையீரல், மார்பகம் மற்றும் பெருங்குடல் போன்ற பல்வேறு புற்றுநோய்களை ஏற்படுத்தும்  வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது .

ஒவ்வொரு இரண்டு அல்லது இரண்டு மணி நேரத்திற்கும் சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு உங்கள் வேலையைத் தொடரவும்.

அதிகமாக தனிமையில்  இருத்தல்

உடல் நலத்தை பாதிக்கும் பழக்கங்கள் ,Health affecting habbits,அன்னைமடி,தாவர புரத உணவு ,சரியான தூக்கம்,annaimadi.com,plant protein foods,sleeping habbits

ஒருவர் அதிகம் தனிமையை மட்டுமே விரும்புவாராக இருந்தால் அவருக்கு இதயம் சார்ந்த கோளாறுகளை இப்பழக்கம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

கவலை, உணர்ச்சி தொந்தரவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் போதை போன்ற கூடுதல் நோய்கள் இப்பழக்கத்தால் ஏற்படுகிறது. குறைந்தபட்சம் உங்கள் நலனில் அக்கறை காட்டும் சில நல்ல நட்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இயற்கை உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளாமை

உடல் நலத்தை பாதிக்கும் பழக்கங்கள் ,Health affecting habbits,அன்னைமடி,தாவர புரத உணவு ,சரியான தூக்கம்,annaimadi.com,plant protein foods,sleeping habbits

உங்கள் உணவில் போதுமான அளவு பழங்கள்,காய்கறிகளைச் சேர்த்து கொள்ளாமல் இருப்பது உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்காமால் போகும்.

இது செரிமான பிரச்சனைகள் உட்பட பிற உடல்நலப் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை திரும்பப் பெறலாம். இதற்கு இயற்கை உணவுகள் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *