ஆழ்ந்த உறக்கத்திற்கு மூலிகைத்தேநீர் (Herbal tea)

தூக்கமின்மையால் வாடுபவர்கள் ,உறங்குவதற்கு முன் இந்த மூலிகைத் தேநீரை (Herbal tea) அருந்துவது நல்ல உறக்கம் கிடைக்க வழிவகுக்கும்.

உடல் தனக்குத் தேவையான ஒய்வினைப் பெறவும், அந்த ஒய்வு நேரத்தில்  மூளை தனது பல்வேறு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு உடல்  இயக்கத்தை சரியாக பேணவும் தூக்கம் உதவுகின்றது.

இயற்கை நமக்கு அளித்த வரம் தான் உறக்கம்.

நோயற்று, ஆரோக்கியமாக வாழ தூக்கம் இன்றியமையாதது. சிலருக்கு ஒழுங்கான தூக்கம் அமைவதில்லை.மன அழுத்தத்தின் காரணமாக இடையிடையே  விழிப்பு ஏற்பட்டு எழுந்து சிரமத்திற்குள்ளாவதாகவும்,  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள் போன்றவை தான் தூக்கம் பாதிக்கப் படுவதற்கு அடிப்படைக் காரணம்.

வாழ்வதற்காக வேலை செய்கிறோமா வேலை செய்வதற்காக வாழ்கின்றோமா  என்பதைப் பற்றி யோசிக்கக்கூட அவகாசமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

இந்தப் பரபரப்பில் நாம் இழப்பது நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தை தான்.

கம்ப்யூட்டரில் வேலை, சதா மொபைல்போனை வெறித்தபடி இருப்பது, உடற்பயிற்சியின்மை, சத்தான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, அளவுக்கு அதிகமான நொறுக்குத்தீனி… என மாறிவிட்ட வாழ்வியல் முறை அதிகமாகப் பாதிப்பது நம் தூக்கத்தைத் தான்.

இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே விழிப்பு வந்துவிடும்; பிறகு தூக்கம் வராது. இதன் காரணமாக பகல் பொழுதுகளில் ஓய்வுக்காக நம் உடல் ஏங்கும்.

தூக்கம் பாதிக்கப்படும் போது, உடலின் செயற்பாடுகளில் மாறம் ஏற்படுகின்றது. இதனால் நோய்கள் நம்மை நெருங்குகின்றன.

தூக்க மாத்திரை இல்லாமலேயே மனதை அமைதியாக்கி ஆழ்ந்த உறக்கத்தை கொடுப்பதற்கு அஸ்வகந்தா பெரிதும் உதவுகிறது.

5 கிராம் அமுக்கராச் சூரணத்தை சிறிது பொடித்த கல்கண்டுடன் கலந்து இரவில் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன், பால் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட, தூக்கம் நன்றாக வரும்

இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நம்முடைய தூக்கம், விழிப்பு நிலைகளை (Sleep-Wake cycle) கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அடுத்த நாள் நாம் உற்சாகமாகச் செயல்படுவதற்கான உத்வேகத்தைக் கொடுக்கும் சில உணவுகள் கூட ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கும்.

 நமக்குச் சீரான தூக்கத்தைத் தரும் சில உணவுகள் இங்கே…  

தூங்குவதற்கு முன்னர் சூடாகப் பால் குடித்துவிட்டு தூங்கினால், இரவு அமைதியான, நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதற்குப் பாலில் இருக்கும் கால்சியம் சத்துதான் முக்கியக் காரணம்.

பால் மெலட்டோனின் ஹார்மோன் மற்றும் ட்ரிப்டோஃபேன் அமினோ அமிலம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்தும். பால் பொருள்களான சீஸ், தயிர், மோர் என அனைத்துமே உறக்கத்துக்கு மிகவும் நல்லவை.

உணவில் கவனம் எடுத்துக்கொள்வதுபோலவே சில வாழ்வியல் முறைகளிலும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது உடல் வலி, சோம்பல், உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், மயக்கம், உடல் பருமன், தெளிவற்ற மனநிலை ஆகியவை உண்டாகின்றன.

அப்படியானவர்கள்  இந்த மூலிகைத் தேநீரை (Herbal tea) முயற்சித்து பார்க்கலாமே.

மூலிகைத் தேநீரை (Herbal tea) தயார் செய்வது எப்படி ?

வீடியோவில் பார்ப்போம்.

மதிய நேர தூக்கத்தைத் தவிர்ப்பது, படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு குட்டி வாக் போவது, சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் இடையில் ஒரு மணி நேரம் இடைவெளிவிடுவது, படுக்கையில் போன், லேப்டாப் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் இருப்பது, சரியான நேரத்துக்குத் தூங்கச் செல்வது போன்றவையும் தூக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

கவனத்தில் கொண்டு கடைப்பிடித்து, ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தை பெறுவோம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *