இதயநலன் காக்கும் செம்பருத்திப்பூ!(Hibiscus)
இறைவன் நோய்க்கான தீர்வையும் நம் பக்கத்தில்லேயே வைத்துள்ளான். அப்படி சிறப்பு வாய்ந்த அற்புத மூலிகைகளில் ஒன்று தான் செம்பருத்தி!
செம்பருத்திப்பூக்கள் வெறும் இதயநோய் என்றில்லாமல், இதயநோய் சம்பத்தப்பட்ட படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு என்று அத்தனை பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது.
செம்பருத்தி (Hibiscus) இதை செவ்வரத்தை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.
சித்தர்கள் செம்பருத்தியை (Hibiscus) தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவக்குணங்கள் நிறைந்தது செம்பருத்தி.
பெண்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் செம்பருத்தி(Hibiscus to solve women’s problems)
செம்பருத்தி (Hibiscus) பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும், மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
இரும்பு சத்து ரத்தம் விருத்தி ஆவதற்கும், உடலின் பலத்திற்கும் இரும்பு சத்து மிகவும் அவசியமாக இருக்கிறது.
பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு சிலருக்கு ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிட்டு வருவதால் அதிக ரத்த போக்கு ஏற்படுவது நிற்கும்.
மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப் பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரச்சனைகள் தீருவதோடு கர்ப்பப்பை குறைபாடுகளும் சரியாகும்.
உரிய வயது வந்தும் பருவமடையாத பெண்களுக்கு செம்பருத்திப்பூக்களை நெய்யில் வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்து வந்தால் உரிய பலன் கிடைக்கும்.
வெறுமனே செம்பருத்திபூவின் இதழ்களை சாப்பிடலாம். சாப்பிட விரும்பாதவர்கள் அப்பூவை நீரில் வேகவைத்து, வடிகட்டி அருந்தலாம்.
ஜூஸ், தேநீர், பொரியல், சம்பல்.சலாட்,செம்பருத்தி மணப்பாகு என உணவில் சேர்த்து பலன் பெறலாம்.
செம்பருத்திப்பூ ஜூஸ் (hibiscus flower juice)
செம்பருத்திப்பூவை ஜூஸ் செய்து குடிக்கலாம். 4-5 செம்பருத்திப்பூக்களின் இதழ்களை எடுத்துக்கொண்டு அதனுடன் விதை நீக்கப்பட்ட ஒரு நெல்லிக்காய், இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலை, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு சிறிது சேர்த்து மையாக அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதில் தேன், நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.
செம்பருத்திப்பூக்களின் மருத்துவ பயன்பாடு (Medicinal use ofhibiscus flowers)
இவை தவிர உஷ்ணம் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு அமைதியையும் தரக்கூடியது செம்பருத்தி.
இது கண், உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சூட்டினால் வரக்கூடிய நோய்களில் இருந்தும் காத்துக்கொள்ளலாம்.
2 அல்லது 3 செம்பருத்திப்பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சிறிது தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வு அதிகரித்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குவதால் வயிற்றிலும், வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி உள்ளவர்கள் தினமும் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
சருமம் வறட்சியை போக்க
உடலின் மேற்போர்வையாக இருக்கும் தோல் அல்லது சருமத்தில் ஈரப்பதம் இருப்பது அவசியம்.செம்பருத்தி பூ குளிர்ச்சி மற்றும் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை பொருந்தியது.
இந்த பூவை சாப்பிடுவதாலும், அரைத்து சருமத்தில் தேய்த்து கொள்வதாலும் சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து செய்து உடலை பளபளக்க செய்யும்.