அதிக நார்ச்சத்தின் அவசியம் என்ன (High-fiber foods)

நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகுவதற்கும் சீரான இரத்த ஓட்டத்திற்கும் அதிக நார்ச்சத்து (high-fiber foods) மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. எல்லாத் தாவரங்களிலும் நார்ச்சத்து  காணப்படும்.

ஏனைய  ஊட்டச் சத்துக்களைப் போல் லாமல் நார்ச்சத்தானது  உடலால் ஜீரணித்துக் கொள்ளப்படுவதில்லை. அதாவது, இது சமிபாட்டுத்தொகுதியினூடாகச் சென்று ஜீரணத்தை செயற்படுத்துவதோடு சமிபாட்டுமண்டலத்தை சுத்தமும் செய்கிறது.

நார்ச்சத்துக்கள் இரு  வகையாக உள்ளது. அவை கரையக்கூடிய மற்றும் கரையமுடியாதவை ஆகும். நார்ச்சத்து அடங்கியுள்ள  அனைத்து உணவுகளிலும் இந்த இரு வகைகளும் கொண்டிருக்கும். நார்ச்சத்தானது உடல் எடையைக் குறைக்கவும் உதவிசெய்யும்.

பெரும்பாலும் நார்ச்சத்துள்ள உணவுகள் மற்ற ஊட்டச் சத்துக்களையும் மிக அதிகமாகக் கொண்டிருக்கும். 

annaimadi.com,good degestion,good for stomach,looseweight,healthy foods,full corn breads

அதிகளவு நார்ச்சத்துள்ள (high-fiber foods) உணவு ஏன் அவசியம்?

கரையாத நார்ச்சத்து

முழுக் கோதுமைப் பதார்த்தங்கள், சோள உமி, மற்றும் சணல் விதைகள் என்பனவற்றில் கரையாத நார்ச்சத்து காணப்படுகிறது. இது சில மரக்கறிகள் மற்றும் பழங்களிலும் காணப்படுகின்றன.

இது மலத்தை மென்மையாகவும் பருமனாகவும் ஆக்குகின்றது.இதனால் கரையாத நார்ச்சத்து  மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

high fiber foods,Soluble fiber ,annaimadi.com,good degestion,good for stomach,looseweight,healthy foods,Check price

கரையக்கூடிய நார்ச்சத்து

பழங்கள் மற்றும் மரக்கறிகளில் கரையக்கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது. அது ஓட்ஸ், ஓட்மீல் , பார்லி, சீலியம், அவரையின விதைகள் என்பனவற்றிலும் காணப்படுகின்றது.

கரையக்கூடிய நார்ச்சத்து, இதயம்  இரத்தோட்டத்தொகுதிக்கு  நன்மை செய்கிறது. மேலும்  இது இரத்தத்திலுள்ள கொழுப்பு,   இரத்த சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது.

annaimadi.com,good degestion,good for stomach,looseweight,healthy foods, pasta with vegetables

அநேக உணவுகள் அதிகளவு கரையக்கூடிய மற்றும் கரையமுடியாத நார்ச்சத்து இரண்டையுமே கொண்டிருக்கின்றன. அதிகளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியது அதிக முக்கியமானது.

அதிகளவு நார்ச்சத்துள்ள தானியப் பொருட்கள்

அதிகளவு நார்ச்சத்துள்ள (high-fiber foods) உங்கள் காலையுணவுடன் நாளைத் தொடங்குங்கள். உதாரணமாக கோர்ன் பிளேக்ஸ் (Corn flakes),cereals  உடன்  ஸ்ரோபெரி(Strawberry), ராஸ்பெரி, அல்லது புளுபெரி(Blue berry) போன்ற பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முழுத் தானிய மாவினையும் சாதாரண மாவுடன் (Full corn flour)  சேர்த்து பயன்படுத்தவும். அன்றாடம்  முழுத் தானியமாவில் செய்யப்படும்  பிரட்டுகள், பஸ்ராக்களைப் (Pasta) பாவிப்பது அதிகளவான நார்ச்சத்தைப் பெற உதவும்.

பச்சைப்பட்டாணி, கறுப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ் போன்றவற்றைச் சேர்த்து வர, தேவையான நார்ச்சத்தை நாளாந்தம் பெற்றுக் கொள்ளமுடியும்.

அதிக நார்ச்சத்துள்ள மரக்கறிகள் மற்றும் பழங்கள்

ஆரோக்கியமான  உணவு எனும் போது அதில் பழங்கள்  மரக்கறிகள் மிகவும் முக்கியமானவை. அதிக நார்ச்சத்துள்ள பழங்களும் காய்கறிகளும்  சிறந்தவையாகும். பழச்சாறு,  மரக்கறிகளின் சாறுகள் வடிகட்டப்படுவதால்  மிகக் குறைந்தளவான நார்ச்சத்தைக் கொண்டிருக்கும். அதனால் அவற்றைக் குறைத்து, முழுமையான பழங்களாகவே சாப்பிடும் போது அதிக நார்ச்சத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.high fiber foods,annaimadi.com,good degestion,good for stomach,looseweight,healthy foods,fiber rich vegetables

தோலுடன் சாப்பிடக் கூடிய பழங்களைத் தோலுடனே சாப்பிடுவது மிக நல்லது. தோலை அகற்றுவதால் உங்களை அறியாமலே அவற்றிலுள்ள சத்துக்களையும் அகற்றி  விடுகிறீர்கள்.

செரிப்பழங்கள், திராட்சைப்பழங்கள், பீச்பழங்கள்,முலாம்பழங்கள், கன்ரலூப் (cantaloupe melon), மற்றும் தர்பூசணிப் பழங்கள் போன்றவற்றில் குறைந்தளவான நார்ச்சத்துக்களே உள்ளன.

annaimadi.com,good degestion,good for stomach,looseweight,healthy foods,fiber content fruits

பியர்ஸ், அப்பிள் ,மாம்பழம்,புளுபெரிப் பழங்கள்,ராஸ்பெரிப் பழங்கள்,ஸ்ரோபெரிப் பழங்கள்,உலர் பழங்கள், பீச் பழங்கள், ஆப்ரிக்கோட் பழங்கள், அத்திப் பழங்கள், ரெய்சின்ஸ் பழங்கள், மற்றும் கிரேன்பெரிப் பழங்கள்  ஆகிய பழங்கள்  மிக அதிகளவு நார்ச்சத்தைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.