குழந்தையின்மைக்கு காரணம் என்ன? (What causes high infertility?)
மனிதனின் தவறான வாழ்க்கை முறை,உணவு பழக்கவழக்கமே குழந்தையின்மைக்கு (High infertility) முக்கிய காரணமாக சொல்லலாம்.சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையில் மனித இனம் சென்று கொண்டிருக்கிறது.
உதாரணமாக,இராசாயனம் கலந்த உணவுகள் , மரபணுமாற்று பயிர்கள் ,விதை இல்லாத விளைபொருட்கள் (Seedless fruits) இருப்பதே ,குழந்தையின்மைக்கும் (High infertility) காரணம். இவற்றின் தாக்கங்களாலேயே ஆண்,பெண் இருபாலாரும் தற்போது அதிக மலட்டுத்தன்மையைக் கொண்டிருகின்றனர்.
எது எப்படி இருந்த போதும் மனித குலம் தொடர்ந்து வாழ இனப்பெருக்கம் அவசியம். அதற்கு ஆண்மைக் குறைபாடு அல்லது பெண்களின் நோய்கள் காரணமாக வந்துவிடக் கூடாது.
இயற்கையை விட்டு விலகியதால் ,இப்படி எத்தனையோ விரும்பத்தகாத பல மாற்றங்களை இன்று மனித குலம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.
அதே நேரம் பல பெண்களும் மாதவிடாய்க் கோளாறுகளாலும் அதன் பலனாக கருத்தங்கலில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதீத எடை, இன்சுலின் செயற்பாடு பாதிப்பு, சூலக நோய்கள் போன்றவை இவற்றிக்கு காரணமாக உள்ளன. இவற்றில் பலவும் தவறான வாழ்க்கை முறைகளின் பயனே.
மலட்டுத்தன்மை ஏற்படுவது எதனால் ?( Causes for High infertility)
- உணவு முறை மாற்றங்கள்
- உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை
- இயற்கையோடு இசையாத வாழ்வு
- சூழல் மாசடைதல்
- காலநிலை மாற்றங்கள்
இத்தகைய காரணங்களால் மனிதர்களில் இனவிருத்தி குறைந்து (High infertility) கொண்டு போகிறது. ஏழு தம்பதிகளில் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப் பேறு கிட்டாது போய்விடுகிறது.
மனிதனின் தவறான வாழ்க்கை முறை என்பதற்கு மேலாக தாயின் அல்லது பெற்றோரின் தவறான வாழ்க்கை முறை தான் காரணமாகலாம் என்கிறார்கள் சில வல்லுனர்கள்.
இதனால் கருவில் வளரும்போதே மலடாவதற்கான (High infertility) விதை விதைக்கப்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத உண்மை.
இதில் பெரும்பாலான தம்பதியினருக்கு ஆண்களின் குறைபாடே காரணமாக இருக்கிறது.
குறைபாட்டுக்கு காரணங்கள்
- பாலியல் தொகுதியில் உள்ள பிறவிக் குறைபாடுகள்,
- பாலியல் நோய்த் தொற்றுகள்.
- வாழ்க்கை முறைகள்
உதாரணமாக மனஅழுத்தம், போசணைக் குறைபாடு, அதீத எடை, மதுவும் ஏனைய போதைப் பொருட்களும் ஆண் மலட்டுத்தன்மைக்கு இட்டுச் செல்கின்றன.
இறுக்கமான உள்ளாடைகளை தொடர்ந்து அணிதல், நீண்ட நேரம் தொடைகளை நெருக்கியபடி உற்கார்ந்திருத்தல் போன்றவையும் காரணம் ஆகலாம்.
புகைத்தல் ஒரு முக்கிய காரணமாகும். அண்மைய ஆய்வுகளில் புகைப்பவர்களது மலட்டுத்தன்மை ஏனையவர்களை விட 15 சதவிகிதம் அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மலட்டுத்தன்மையை போக்கும் வழிகள்
உலகெங்கும் குழந்தை இல்லாதவர்கள தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இங்கிலாந்தில் ஆறு தம்பதிகளில் ஒருவர் என்ற விகிதத்தில் குழந்தையின்மை இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இருந்தபோதும் வைத்தியத் துறையின் அளப்பரிய முன்னேற்றம் காரணமாக டெஸ்ட் ரியூப்பில் குழந்தையை 1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.
வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். அதோடு தொடர்ச்சியாக மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.
தினசரி திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனுமொன்றை சாப்பிட்டு வரவேண்டும். இதனால் இரத்த உற்பத்தியும் புத்துணர்ச்சியம் ஏற்படும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணிசமாக ஆண்மைத்தன்மை பெருகும்.
ஆரோக்கியமான உணவு ,வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதே அனைத்திற்கும் சிறந்த வழி!!