பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள் (Benefits of holding a Pillaiyaar)
ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து வைப்பதை (holding a Pillaiyaar) காண்கிறோம். ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.
அதிகமாக மஞ்சள் ,சாணம் கொண்டு பிள்ளையார் பிடித்து (holding a Pillaiyaar) வைப்பது நமது இந்து சாஸ்திர பழக்கவழக்கத்தில் ஒன்று. இவை மட்டுமன்றி ,குங்குமம், சந்தனம், விபூதி, மண், வெல்லம், உப்பு, வாழைப்பழம், வெண்ணெய், சர்க்கரை போன்றவற்றாலும் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடுகள் செய்வர்.
இப்படி ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையாரை பிடித்து வைப்பதற்கு ஒவ்வொரு தனித்துவமான காரணங்களும், பலன்களும் உண்டு.

“பிள்ளையார்” பிடித்து வைப்பதன் (holding a Pillaiyaar) பலன்கள்
- மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்.
சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும். - விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும். - குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
- புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்.
- வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். வளம் தருவா.
- உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்
வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார். - வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
- வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
- பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.
- கல் விநாயகர்- வெற்றி தருவார்.
- புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்.
- மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.
சங்கடம் தீர்க்கும் பிள்ளையாரை வணங்கும் முறை

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினமான பிள்ளையாரின் பிறந்த தினத்தை, ”பிள்ளையார் சதுர்த்தி” என்று விமரிசையாகக் கொண்டாடுவது இந்துக்களின் பழமை வாய்ந்த பாரம்பரியம். அவரவர் வீடுகளிலும் ஆங்காங்கேயுள்ள ஆலயங்களிலும் இவ்விழாவைக் கொண்டாடுவது மரபு.
விநாயகரை பூஜித்து, விழா கொண்டாடி முடிந்ததும், அதற்கென்று செய்த வினாயகரின் விக்கிரகத்தை (திருவுருவத்தை, மூர்த்தியை) கரைப்பதற்காக கடல், நதி, ஏரி, வாய்க்கால், கிணறு என்று நீர்நிலைகளை நோக்கி எடுத்துச் சென்று அங்கே நீரில் கரைத்து து பூஜை முடிப்பார்கள்.