பாத்திமாவின் மூன்று சிறிய புனிதர்களின் கதை (Holiness Lucia, Francisco & Jacinta)
திருச்சபையின் இளைய புனிதர்களான பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா மார்ட்டோ (Holiness Lucia, Francisco & Jacinta) ஆகியோரின் புனித கதையை அறிந்து கொள்வோம்.இருவரும் அல்ஜஸ்ட்ரலில் பிறந்து பாத்திமாவின் திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றனர்.
அவர்கள் மானுவல் பெட்ரோ மார்ட்டோ மற்றும் ஒலிம்பியா டி ஜீசஸின் ஏழு குழந்தைகளில் இளையவர்கள். சிறுவயதிலிருந்தே அவர்கள் எளிய கிறிஸ்தவக் கல்வியைப் பெற்றனர். அவர்கள் விரைவில் குடும்ப மந்தையின் மேய்ப்பர்களாக ஆனார்கள்.
இவர்களது உறவினர் லூசியா (1907-2005) (Lucia), கொஞ்சம் வயதானவர்.இம்மூன்று சிறிய மேய்ப்பர்கள்(Holiness Lucia, Francisco & Jacinta) ஒரு தேவதையை 1916 இன் வசந்த, கோடை மற்றும் இலையுதிர் காலத்தில் லோகா டோ கேபிசோ (Cova da Iria ) மற்றும் லூசியாவின் வீட்டின் கிணற்றில் மூன்று முறை பார்த்தார்கள்.
சிறிய மேய்ப்பர்கள் (Holiness Lucia, Francisco & Jacinta) வாழ்ந்த அல்ஜஸ்ட்ரல்(born in Aljustrel) தெற்கே சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது.
1916ம் ஆண்டு வசந்த காலத்தில் ஒரு நாள், 9 வயது லூசியா,ள் 8 வயது பிரான்சிஸ் மார்த்தோ, 6 வயது ஜசிந்தா மார்த்தோ ஆகிய மூன்று சிறாரும் பாத்திமா என்ற சிறிய கிராமத்தில் பசும்புல் நிறைந்த பகுதியில் தங்களது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர்.
மழை பெய்யத் தொடங்கியதால் அருகிலிருந்த குகைக்குச் சென்றனர். பின்னர் மழை ஓய்ந்தது. சூரிய ஒளியும் வீசியது. அம்மூவரும் அக்குகையில் தங்களது மதிய உணவை அருந்திவிட்டு செபமாலை சொல்லிவிட்டு விளையாடத் தொடங்கினர்.
வானதூதரின் மூன்று காட்சிகள் (Holiness Lucia, Francisco & Jacinta)
மழைக்குப்பின் காலநிலை அமைதியாக இருந்தது. அப்போது திடீரென பெருங்காற்று வீசியது. மரங்கள் காற்றில் தள்ளாடின. திடீரென வெண்மைநிற ஒளி அச்சிறாரைச் சூழ்ந்து கொண்டது. அந்த ஒளிக்கு மத்தியில் மேகம் தோன்றியது. அம்மேகத்தில் ஓர் இளைஞர் தோன்றினார்.
நான் அமைதியின் வானதூதர், என்னோடு சேர்ந்து செபியுங்கள் என்று சொன்னார். அந்த வானதூதர் தரையில் முழந்தாளிட்டு தலையை மிகவும் தாழ்த்தினார்.
அம்மூன்று சிறாரும் (Holiness Lucia, Francisco & Jacinta)அவ்வானதூதர் செய்தது போலவே முழந்தாளிட்டு அவர் சொல்லச்சொல்ல இவர்களும் அதே செபத்தைச் சொன்னார்கள்.
இதேபோல் அவ்வாண்டு கோடையிலும், இலையுதிர்க் காலத்திலும் வானதூதர் தோன்றி பாவிகளின் மனமாற்றத்துக்காகச் செபிக்கக் கூறினார்.
வானதூதரின் இந்த மூன்று காட்சிகளும் அன்னைமரியாவின் காட்சிகளுக்கு அந்த மூன்று சிறாரையும் தயாரிப்பது போல் இருந்தது.
வீட்டுக்குப் போய்விடலாம் என்று எண்ணி அவர்கள் குன்றிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது மீண்டும் அதேமாதிரியான ஒளி.
அந்த ஒளிவந்த திசையை நோக்கிப் பார்த்த போது அங்கு ஒரு பெண் வெண்ணிற ஆடை அணிந்து, சூரியனை விட ஒளிமிகுந்து காணப்பட்டார்.
அப்பெண் அச்சிறாரிடம் பயப்பட வேண்டாம். நான் உங்களை எதுவும் செய்யமாட்டேன் என்று சொன்னார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று சிறார் கேட்க, நான் வானகத்திலிருந்து வருகிறேன் என்றார்.
ஆறாவது தடவையில் நான் யார் என்று சொல்வேன் என்று சொன்னார். நீங்கள் உங்களைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறீர்களா, அவர் மகிழ்ச்சியோடு அனுப்பும் துன்பங்களை பாவிகளின் மனமாற்றத்திற்காக ஏற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் நிறையத் துன்புற வேண்டியிருக்கும். ஆயினும் கடவுளின் அருள் உங்களைத் தாங்கிப் பிடிக்கும் என்று சொன்னார்.பின்னர் தனது கரங்களைத் திறந்து தாய்க்குரிய பாசத்தைக் காட்டினார். பின்னர் ஓர் ஒளியில் அப்பெண் மறைந்தார்.
மறைந்து கொண்டிருக்கும் போதே, உலகில் அமைதி கிடைக்கவும், போர் முடியவும் தினமும் செபமாலை செபியுங்கள் என்று சொன்னார் அப்பெண். அவர் தான் அன்னைமரியா.மேய்ப்பர்களுக்கு அன்னைமரியாவின் ஆறு காட்சிகள்(Holiness Lucia, Francisco & Jacinta)
அன்னைமரியாவுடனான சந்திப்புக்கள்
அன்னைமரியா அந்த மூன்று சிறாரிடம் கூறியது போல, அவர்கள் இன்னும் 50 பேருடன் ஜூன் 13ம் தேதி அவ்விடத்தில் அதேநேரத்தில் செபமாலை செபித்துக் கொண்டிருந்தனர்.
ஆறு சந்திப்புகளின் போது, ஜெபமாலையின் பெண்மணி, துன்பம் மற்றும் தீமைகள் நிறைந்த உலகத்திற்கு கடவுள் வழங்கும் நம்பிக்கையை சிறிய மேய்ப்பர்களுக்குக் காட்டி, ஜெபமாலை ஜெபிப்பதன் மூலம், மனித இதயங்களை மாற்றுவதற்கு தங்களை அர்ப்பணிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
1917ம் ஆண்டு ஜூலை 13ம் தேதியன்று லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று சிறாருக்கு மூன்றாவது தடவையாகக் காட்சி கொடுத்தார் அன்னைமரியா.
இம்முறை ஒரு பெரிய கூட்டமே அச்சிறாருடன் சேர்ந்து செபமாலை சொல்லிக்கொண்டிருந்தது.
நீங்கள் யார் என்றும், நீங்கள் காட்சி கொடுப்பதை இக்கூட்டம் நம்புவதற்குப் புதுமை ஒன்றையும் செய்ய வேண்டும் என்றும் லூசியா அன்னைமரியாவிடம் கேட்டார்.
அதற்கு அன்னைமரியா, நீங்கள் தொடர்ந்து இங்கு வாருங்கள். அக்டோபரில் நான் யார் என்றும், நான் உங்களிடமிருந்து விரும்புவது என்ன என்றும், எல்லாரும் நம்பும்வண்ணம் புதுமை செய்வேன் என்றும் சொன்னார்.
நான்காவது காட்சியின் போது ஆகஸ்ட் 13ம் தேதியன்று மக்கள் பெருந்திரளாய்க் கூடியிருந்தனர்.
அரசு அதிகாரிகளின் தடை
ஆனால் இம்மூன்று சிறாரும் அவ்விடத்துக்குப் போகக் கூடாது என்று அரசு அதிகாரிகள் அவர்களை இரண்டு நாள்களாக அடைத்து வைத்திருந்தனர்.
காட்சியைப் பார்க்கவில்லை என்று சொல்லுமாறு அச்சுறுத்தி துன்புறுத்தினர். பின்னர் அவர்களை ஆகஸ்ட் 19ம் தேதியன்று விடுதலை செய்தனர்.
அச்சிறார் பெருங்கூட்டத்தோடு சென்று கொண்டிருந்த போது Valinhos என்ற இடத்தில் ஒரு மரத்துக்குமேல் அன்னைமரியாவைப் பார்த்தனர்.
தொடர்ந்து தினமும் செபமாலை செபிக்க வேண்டும் என்று சொன்னார். பின்னர், அன்னைமரியா மிகுந்த சோகத்துடன் செபியுங்கள், நிறைய செபியுங்கள், பாவிகளுக்காக உங்கள் தியாகங்களை அர்ப்பணியுங்கள் என்று சொன்னார்.
செப்டம்பர் 13ம் தேதியன்று இடம்பெற்ற ஐந்தாவது காட்சியின் போது அச்சிறாருடன் ஏறக்குறைய 30 ஆயிரம் பேர் கூடியிருந்தனர்.
அவர்கள் அனைவரும் செபமாலை செபித்துக்கொண்டிருந்த போது அதே மரத்துக்கு மேலே அன்னைமரியா காட்சி கொடுத்தார்.
போர் முடிவதற்காகத் தொடர்ந்து செபமாலை செபியுங்கள் என்றார்.
அக்டோபர் 13ம் தேதியன்று அச்சிறாருடன் ஏறக்குறைய 70 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். பருவமழை கொட்டியது. அன்னைமரியா காட்சி கொடுத்தார்.
லூசியா அவரிடம், நீங்கள் என்னிடமிருந்து என்ன விரும்புகிறீர்கள் என்று கேட்க, அதற்கு அன்னைமரியா, நானே செபமாலையின் அன்னைமரியா, இங்கு என் பெயரில் ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும்.
மக்கள் தொடர்ந்து தினமும் செபமாலை செபிக்க வேண்டும். போர் முடியும்.படைவீரர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவர் என்று தெரிவித்தார்.
இந்த முத்திப்பேறு பெற்றவர்களின் கல்லறைகள் பாத்திமாவில் அன்னைமரியா பசிலிக்காவில் உள்ளன.
இன்று பாத்திமாவுக்கு எண்ணற்ற பயணிகள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர்.
பிரான்சிஸ்கோ ஏப்ரல் 4, 1919 அன்று இரவு 10 மணிக்கு இறந்தார், 10 வயது மட்டுமே.
மூச்சுக்குழாய் நிமோனியா தொற்றுநோயால் நோய்வாய்ப்பட்ட அவரது சகோதரி 9 வயது நிரம்பிய ஜெசிந்தாவும் பிப்ரவரி 20, 1920 இல் இறந்தார்.
லூசியா தனது 97வது வயதில் 2005ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி உயிர் நீத்தார்.