பல்வேறு வகைத் தேனும் பயனும் (Medicinal value of Honey)
ஓர் இனிய உணவுப்பொருளாகிய தேன் (Honey) அதிக மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான திரவத்தில் இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, கிருமிகளை வளர விடுவது இல்லை .
தேன் (Honey) 12 நாழிகையில் செரிந்து உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. புதிய தேனை சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
தேனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty Acid) பசியைத் தூண்டி விரைவாக உணவைச் செரிக்க செய்யும். தேன் மலமிலக்கியாகவும் செயல்படும்.
தேன் (Honey)உதிரப் போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. தேனும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், வயிறு பெறுமல், இரைப்பு இருமல், ஜலதோஷம், தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகும்.
இதயத்தின் தசைகள் சோர்வடைவதால் இதயச் சோர்வு போன்ற அபயாய நோய்கள் வருவதை தேன் தடுக்கிறது.
மேலும் தேன் இதயச் சுமையை குறைக்கும். தேனும் கரித்தூளும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடும். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி பின் வெந்நீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்குகிறதாம்.
தேனுடன் கலந்த பேரிச்சை, தேன் நெல்லிக்காய், ரோஜா குல்கந்து, துளசி தேன், தேனும் தினைமாவும் ,உலர் பழங்களுடன்சேர்ந்த தேன், லவங்கப்பட்டை தேன் என பல வகையில் தேன் மதிப்புக்கூட்டப்பட்டு விற்பனையாகிறது.
தேனும் தினைமாவும் நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, துளசி, பூண்டு என தேன் வகைகள் பல உள்ளன. சித்த மருத்துவத்தில் தேன் கிடைக்கக்கூடிய இடத்தைப் பொறுத்து, தேனை பலவகையாக பிரிக்கின்றனர்.
தேனின் வகைகள் (Types of Honey)
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன்,குறிஞ்சித்தேன் ,புற்றுத்தேன் என தேனில் அறுபது வகை உண்டு.
ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.
வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. ஒவ்வொரு வகை பூக்களிடமிருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது.
மலைத்தேன்
மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இந்த மலைத்தேன் கண் நோயைக் குணப்படுத்தக்கூடியது.
பொதுவாக, தேனை நல்ல தூக்கம், தொண்டைக்கட்டு, உடல் எடை, மேனி அழகு, வயிற்றுப்புண், கொப்புளம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
இது வயிற்றுப்புண், தொண்டைப்புண், தீக்காயம் போன்றவற்றை குணப்படுத்தும்.
தேன் குளியல் எடுத்து வந்தால் தலைமுடி கருமையாகவும், அடா்த்தியாகவும் இருக்கும். உடல் உறுப்புகளை வலிமைப்படுத்துகிறது. மலைத்தேன் குடித்தால் நரம்பு சம்பந்தமான நோய் வராது.
பேதி ஆனவா்களுக்கு கொடுத்தால் உடனே நிற்கும். இது மலத்தை இறுக்கும் குணமுடையது.
கொம்புத்தேன்
மரத்தில், காடுகளில், குகைகளில் கூடுகட்டியிருக்கும் தேன் கூட்டில் இருந்து கிடைப்பது கொம்புத்தேன். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.
எல்லா மருந்துகளுக்கும் இது ஒரு ஊக்கியாக பயன்படுகிறது. விளையாட்டு வீரா்கள் சோர்வு அடையாமல் இருக்க இத்தேனை சாப்பிட்டு வரலாம். ஜலதோஷம், காய்ச்சல் அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும்.
ஒற்றைத் தலைவலிக்கு இத்தேனை சாப்பிட்டால் சரியாகிவிடும். வெட்டுக் காயத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். தேன் அதிகமாக சாப்பிட்டால் பேதி ஏற்படும். குறைவாக சாப்பிட்டால் பேதி நிற்கும்.
குறிஞ்சிபூ தேன்
சா்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த ஒரு தேனாகும். பெரிய நெல்லிக்காய் இத்தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
வேப்பம்பூதேன்
நோய் எதிர்ப்புத் தன்மையுடையது. சா்க்கரை அளவைக் குறைக்கிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
நாவல் தேன்
நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது. நன்மை செய்யும் கொழுப்பு சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தது. ஜீரண சக்தியை அதிகரிக்க கூடியது.
ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது. நாவல் பழ மரங்களின் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேன் அதிக மருத்துவ குணம் கொண்டது.
கதம்பப்பூ தேன்
தேனில் தினமும் பல் தேய்த்தால் பல் வெண்மையாகவும், வலிமையாகவும் இருக்கும். கல்லீரலை வலிமைப்படுத்துகிறது. கோதுமை மாவு, பன்னீா் கலக்கி முகம் கழுவினால் முக பொலிவு ஏற்படும்.
பொந்து தேன்
இது மரப்பொந்து ,கிணற்று பொந்து ,சுவா்சந்துகளில் கிடைக்கும் தேன் ஆகும். இந்த தேனை குழந்தைகளுக்கு தொடா்ச்சியாக ஒரு வருடம் கொடுத்து வந்தால் உடல் உறுப்புகள் வலிமை பெறும். பிற்காலத்தில் நோயின்றி வாழலாம்.
சூரியகாந்திபூ தேன்
கசப்பும், புளிப்பும், துவா்ப்பும் கொண்ட தேனாகும். நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உடையது.