சுவையான கொள்ளு குழம்பு (Delicious horse gram kulampu)

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி கொள்ளு ரசம் , கொள்ளுத்துவையல், கொள்ளுக்குழம்பு (Horse gram kulampu),கொள்ளு வடை செய்து சாப்பிடலாம்.

கொள்ளு அதிக ஆற்றலையும், வலிமையையும் வழங்கக்கூடிய பயறு வகையைச் சேர்ந்தது. ஆதலால் தான் இதனை பந்தய குதிரைகளுக்கு உணவாக அளிக்கின்றனர்.

கொள்ளு குழம்பு சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். பிட்டு,சப்பாத்தி,இடியப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் இதனை வீட்டில் செய்தால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

கொள்ளு குழம்பு  (Horse gram kulampu செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கொள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கொள்ளானது அதிக கல்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்தினைக் கொண்டுள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு  கொள்ளு அதிகப் புரத சத்தைக் கொடுக்க கூடியது.

இது குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் அதிக நார்ச்சத்துடன் கூடிய கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது. இதில்  உள்ளது. கொள்ளானது அதிகளவு நுண்ஊட்டச்சத்துக்களையும், தாதுஉப்புகளையும்,பொஸ்பரஸ் கொண்டுள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பினைக் குறைக்கும் தன்மையை உடையது.

Delecious horse gram kulampu,annaimadi.com,kollu kulampu,kollu curry,annaimadi.com,kollu receipe,indian curry receipe,healthy tasty curry,

கொள்ளுகுழம்பு (horse gram kulampu) உண்பதால் கிடைக்கும் பயன்கள்

கொள்ளில் உள்ள நார்ச்சத்து செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது.

மேலும் இது குடலில் வாழும் ஒட்டுண்ணிகளை அழித்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

கொள்ளில் உள்ள நார்ச்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வினை உண்டாக்குவதுடன் உடலினை உற்சாகமாகவும் வைக்க உதவுகிறது

இதனால் மேலும்  உணவு உட்கொள்வது தடைசெய்யப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

மாதவிடாய் பிரச்சினையால் அவதியுறுபவர்கள் கொள்ளினை ஊற வைத்தோ அல்லது சூப்பாக செய்தோ உண்ணலாம். மாதவிடாய் பிரச்சினையால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை இதில் உள்ள இரும்புச்சத்து சரி செய்கிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் நரம்புகளில் ஒட்டிக் கொண்டு இரத்த ஓட்டத்தை தடை செய்து இரத்த அழுத்தத்தை உண்டாக்கிறது.
கொள்ளில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்பானது சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

உடல் பருமனானவர்கள் கொள்ளு பருப்பு எந்த வகையிலாவது உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீரும், கொழுப்பும் நீங்கி உடலின் ஊளைச்சதை காணாமல் போகும்.

மூக்கடைப்பினை நீக்குவதோடு சளியை இழகச் செய்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது கொள்ளு. கொள்ளானது உடலுக்கு வெப்பத்தினை வழங்குவதால் இது குளிர்காலத்துக்கு ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது.

கொள்ளு பருப்பை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு அடிக்கடி பிடிக்கும் சளியை விரட்டும். மேலும் இந்த நீர் கண்களில் ஏற்படும் நோய்கள், பசியின்மையால் வரும் வாயிற்று பொருமல், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்றவற்றை குணப்படுத்தும்.

மேலும் கொள்ளானது சீரான வளர்ச்சிதை மாற்றத்தையும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு கொள்ளு சிறந்த உணவு.ஏனெனில் கொள்ளினை தொடர்ந்து உண்ணும் போது அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் குறைக்கும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *