கொள்ளு வடை (Horse gram vada)
கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. இதனால் கொள்ளில் வடை (Horse gram vada) போன்று உணவில் சேர்த்து சாப்பிடுவது நலம் தரும்.
நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலு சேர்க்கும்.
குளிர்கால நாட்களில் கொள்ளு வடை செய்து சாப்பிடுவது மிக நல்லது. இது உடலை சூடாக வைத்திருக்கும்.
கொள்ளு வடை மிக சுவையாக இருக்கும்.
இந்த வடை செய்யும் முறை, மற்ற வடைகளைப் போல் சாதாரணமானது தான். செய்து சாப்பிட்டு பாருங்கள்!!
சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும்.
கொள்ளு தானியத்தின் (Horse Gram ) ஆரோக்கிய நன்மைகள் எண்ணற்றவை. எந்தவொரு ஆரோக்கிய பிரச்சனைக்கும் “கொள்ளு-சக்தி” வேலை செய்யும்!
ஆஸ்துமா, சுவாசக்குழாய் அலர்ஜி, சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரக கற்கள் மற்றும் இதய நோய்களுக்கான உபயோகங்கள் நம் பாரம்பரிய மருத்துவ நூல்கள் விவரிக்கின்றன.
மஞ்சள் காமாலை அல்லது உடலில் நீர்த்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேதத்தில் கொள்ளு பரிந்துரைக்கப்படுகிறது.
வாத நோய், கண்களில் ஏற்படும் அலர்ஜி மற்றும் மூல நோய்க்கு கொள்ளு மிகவும் திறன்மிக்க வகையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
உங்கள் உடலமைப்பில் வெப்பத்தையும் சக்தியையும் உருவாக்கும் திறனும் கொள்ளிற்கு உண்டு, எனவே இது குளிர்கால நாட்களில் உங்களை சூடாக வைத்திருக்கும்.
இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறிய அளவிலான சிறுநீரகக்கற்களை கரைந்து வெளியேற இது உதவும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.
மேலும், அதன் மெதுவாக ஜீரணமாகக்கூடிய ஸ்டார்ச், நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. பதப்படுத்தப்படாத கொள்ளுப் பயறுகள், உணவு சாப்பிட்ட பின் உள்ள உயர் இரத்த சர்க்கரையை குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
இந்த தன்மைகளால் நீரிழிவு நோய்க்கு ஏற்ற இன்னுமொரு நல்ல உணவாக கொள்ளு இருக்கிறது!
சமைக்காத கொள்ளுப் பருப்பில், இதனால் உங்கள் உடலை இளமையாகவும், துடிப்பாகவும் வைத்திருக்க முடியும்!
கொள்ளு (horse gram lentils) இங்கே (Here) கிடைக்கும்.
சில பிள்ளைகள் என்ன சாப்பிட்டாலும் பலமற்று மெலிந்து இருப்பார்கள். அவர்களுக்கு கொள்ளு வடை (Horse gram vada),கொள்ளு ரசம், குழம்பு கொள்ளு சுண்டல் போன்ற உணவுகளைக் கொடுத்து வர உடம்பு பலம் பெறும்.
சில பிள்ளைகள் என்ன சாப்பிட்டாலும் பலமற்று மெலிந்து இருப்பார்கள். அவர்களுக்கு கொள்ளு வடை (Horse gram vada),கொள்ளு ரசம், குழம்பு கொள்ளு சுண்டல் போன்ற உணவுகளைக் கொடுத்து வர உடம்பு பலம் பெறும்.