மருந்துகளை தவறாது சாப்பிட்டும் ஏன் சர்க்கரைநோய் குறைவதில்லை? (How does diabetes medicine work)

சர்க்கரை நோய்க்கு நாம் சாப்பிடும் மருந்துகள் ஒரு கட்டத்தில் நமது உடலை  தீவிரமாக பாதிக்கும் என்பதை
நாம் ஏன் இன்னும் அறியாமல் இருக்கின்றோம்? இது நாம் நம் உடலைப் பற்றி ,சர்க்கரைநோய்க்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் (How does diabetes medicine work) பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழர் கலாச்சாரத்தின் வாழ்வியல் முறைகளையும், உணவு முறைகளையும் கவனித்து ஆராய்ந்தால், நீரிழிவு என்னும் சர்க்கரை நோயானது  வர வாய்ப்பே இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு சர்க்கரை நோயின் தலைமையகமாகவே இந்தியா மாறிக்கொண்டு வரும் அளவுக்கு நாம் சிறுமையடைந்து விட்டதற்கு என்ன காரணம் என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். 

உணவே மருந்து, மருந்தே உணவு 

என்ற நமது உன்னத கலாச்சாரத்தின் அடிநாதத்தை மறந்துவிட்டோம்.தைமருத்துவமான சித்த ஆயுள்வேத  இயற்கை மருத்துவத்தையும் மறந்துவிட்டோம்.

எந்த உடல் பிரச்சினை என்றாலும் உடனே நவீன மருத்துவங்களையும், இரசாயன மருந்துகளையும் தேடிப்போகும் மனப்பாங்கு நம்மிடையே வளர்ந்துவிட்டது.

How does diabetes medicine work, annaimadi.com, How to work diabetes medicine,side effets of diabetes medicines,

நாம் சாப்பிடக்கூடிய சர்க்கரை மருந்துகள் நமது உடலில் என்ன பணியைச் செய்கின்றன (How does diabetes medicine work)

இதனை  நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் உணவுக்கட்டுப்ப்ட்டுடன் தவறாது மருந்து களையும் எடுத்து வந்தாலும் பரிசோதனை முடிவுகள் விரும்பத்தக்க மாதிரி இல்லை. விளைவு  மாத்திரைகளின் அளவும் இன்சுலின் அளவும் அதிகரித்து  கொண்டே  வருவது தான்..இது ஏன்? பலரிடம் இருக்கும் கேள்வி இது.

இதற்கு வைத்தியரின் பதில் 

”சர்க்கரை நோய் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்” என்பது தான்.

நம்முடைய உடலால் கழிவு என தீர்மானிக்கப்பட்டு, சிறுநீராக வெளியேற்றப்பட வேண்டிய, சிறுநீருக்கு ஒப்பான தரமற்ற குளுக்கோஸை, உடலுக்குள் திருப்பி அனுப்பி, பலவந்தமாக அதனை ஏற்றுக்கொள்ள வைக்கும் ஒரு அபாயம் விளைவிக்கும் செயலைத்தான் நமது உடலுக்கு அந்த மருந்துகள் செய்துகொண்டிருக்கிறன (How does diabetes medicine work).

அதாவது தரமற்ற குளுக்கோஸுக்கு இன்சுலின் சுரக்கக்கூடாது என்ற கணையத்தின் ஆரோக்கிய தன்மையை சிதைத்து, அதனை பலவந்தமாக இன்சுலின் சுரக்கவைப்பது தான் அந்த மருந்துகளின் நோக்கம். 

தரமான குளுக்கோஸ் மற்றும் தரமற்ற குளுக்கோஸ்

 ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் சர்க்கரைநோயின் அடிப்படையை விளங்கிக் கொள்வோம்.

ஒரு மாணவன் சரியாக படிக்கவில்லை, நல்ல  மதிப்பெண்கள் எடுக்கவில்லையென்றால் அவனை டியூஷனுக்கு அனுப்பியோ, சரியான பயிற்சிகள் கொடுத்தோ அவனை நல்ல மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டும். பதிலாக ஆசிரியரை மிரட்டி, அவனுக்கு அதிக மதிப்பெண்கள் போட வைப்பதென்பது அநியாயத்தின் உச்சம். மற்றும் மாணவனின் எதிர்காலத்திற்கும் கேடு. 

இதுபோன்ற ஒரு அடாவடித்தனத்தைத் தான் சர்க்கரை மருந்துகள் சாப்பிடுவதன் மூலமாக நமக்குள் நாம்
நிகழ்த்திக் கொண்டிருக்கின்றோம் என்பதை கவனமாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
தரமான குளுக்கோஸ் மற்றும் தரமற்ற குளுக்கோஸ் இந்த இரண்டைப் பற்றிய புரிதலில் தான் சர்க்கரை நோய்க்கான
நிரந்தரத் தீர்வின் அடிப்படை அடங்கி இருக்கிறது. 

ஆனால் நவீன மருத்துவ அறிவியலானது குளுக்கோஸின் தரம் பற்றிய இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாது.
காரணம், எதையுமே பொருள் வடிவத்தில் மட்டுமே பார்த்து ஏற்றுக்கொள்ளும் ஒரு முழுமை பெறாத தன்மையிலேயே அது இருப்பதால் தான்.How does diabetes medicine work, annaimadi.com, How to work diabetes medicine,side effets of diabetes medicines,

ஒரு மனிதனின் குணத்தையும், ஒரு மலரின் வாசத்தையும், ஒரு பழத்தின் சுவையையும் எந்த நுண்ணோக்கியில் நாம் காண முடியும்? 
தரமான குளுக்கோஸையும், தரமற்ற குளுக்கோஸையும் ஆய்வுக்கூடத்தில் சோதித்தால் அவை இரண்டுமே ஒரே உருவ ஒற்றுமையில் தான் இருக்கும். எனவே இந்த இரண்டு குளுக்கோஸுமே ஒன்று தான் என்ற தவறான கோட்பாட்டை மருத்துவ விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது.

சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வை நவீன மருத்துவங்கள் தர முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் இது தான்.
அடிப்படைக் கோட்பாட்டில் தவறு வைத்து, நவீன மருத்துவம் எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் அது தவறான  அத்திவாரத்தின் மேல் கட்டப்பட்ட கட்டிடத்தின் நிலை போன்றதாகத்தான் இருக்கும். 

இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் தரம், தரமல்லாதது என்பது உருவம் சார்ந்தது அல்ல. அது மறைவான உள் தன்மையின் நிலை. அதாவது ஒரே மாதிரி உருவமுள்ள இருவரின் குணங்கள் வேறு வேறாக இருப்பதைப் போன்றது.

சர்க்கரை நோய் பாதிப்புகளிலிருந்து விடுபட நாம் மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிறோம். பின்னர் ஏன் அந்த மருந்துகள் சர்க்கரைநோயை போக்கவில்லை.

How does diabetes medicine work, annaimadi.com, How to work diabetes medicine,side effets of diabetes medicines,

சர்க்கரை மருந்துகளின் பக்க விளைவுகள்

ஆதரவில் இருக்கும் போதே நமக்கு ரத்த அழுத்த நோய், சிறுநீரக கோளாறுகள், கண்கள் சம்பந்தமான பிரச்சினைகள், புண்கள் வந்தால் ஆறாமல் இருப்பது போன்ற பலவிதமான பிரச்சினைகள் வருகிறது.

இவையெல்லாம் சர்க்கரை மருந்துகளின் பக்க விளைவுகள் என்பதை நாம் ஏன் உணரத் தவறுகிறோம்?

சர்க்கரை அளவு 220 இருக்கக்கூடிய இருவரை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், ஒருவருக்கு அதனால் உடல் பிரச்சினைகள் தோன்றலாம். மற்றொருவருக்கு எந்த பிரச்சினையும் தோன்றாமல் இருக்கலாம்.

இதுபோல நிறைய உதாரணங்களை நாம் சொல்ல முடியும். ஆக, சர்க்கரையின் அளவு ஒரே மாதிரி இருந்தாலும், அதன் பாதிப்புகளில் வித்தியாசம் இருப்பதற்க்கு சர்க்கரையின் ‘தரம்’ மட்டுமே காரணம் என்பதை நாம் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.

சர்க்கரையின் அளவை கருத்தில் கொண்டு நமது ஆரோக்கியம் பற்றிய நிலைப்பாடு எடுப்பது என்பது சரியானதாக இருக்காது. அது நம்மை தவறான திசையில் பயணிக்க வைத்துவிடும் என்ற எச்சரிக்கை உணர்வு நமக்கு ஏற்பட வேண்டும்.

ஆகவே சர்க்கரையின் தரம் தான் இங்கே மையம். தரமற்ற குளுக்கோஸை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அதனை நமது உடல் பார்த்துக் கொள்ளும். தரமான குளுக்கோஸ் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் நமக்கான கேள்வி?

Leave a Reply

Your email address will not be published.