பல்வலிக்கு இயற்கை வழி எளிய தீர்வு (How to fix toothache in a natural way)
தீராத பல் வலி உறக்கத்தையும், உணவு உண்பதையும் ,அன்றாட வேலைகளையும் பாதிக்கக் கூடும். இதை எப்படி இயற்கை வைத்திய முறைகள் மூலம் சரி செய்யலாம் (How to fix toothache).
வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். ஏனெனில்
பல் வலி என்பது எல்லோருக்கும் தாங்க முடியாத வேதனையை தரக்கூடியது.பல்வலி வந்தால் அவ்வளவு சீக்கிரம் சாதாரணமாக நிற்காது.
வலியை தாங்க முடியாதவர்கள் பல்லை பிடுங்கி விடுவதும் இதனாலேயே. ஆனால் இப்படி எத்தனை பற்களை தான் பிடுங்க முடியும்.
அதோடு பல்வலி தாங்க முடியாமல் அடிக்கடி பற்களை பிடுங்குவது பின்னாளில் பற்களின் உறுதியை சீர்குலைத்து விடும். முக அமைப்பும் மாற வாய்ப்பு உள்ளது.பற்களுக்கிடையே இடைவெளி ஏற்பட்டு பலவித பிரச்சினைகள் உண்டாகும்.
இலகுவாக இயற்கை மருந்துகளைக் கொண்டு பல்வலியை எப்படி சரி செய்யலாம் (How to fix toothache) என அறிந்து கொள்வோம். அதற்கு நம் வீட்டில் இருக்கும் பல பொருட்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
பற்சொத்தை, பல் அரிப்பு, பல் சீழ் வடிதல் ஈறுகளில் இரத்த போக்கு போன்ற பலவித பிரச்சினைகளுக்கும் இவை தீர்வளிக்கும்.
வீட்டில் எப்போதும் இருக்கும் பூண்டு, உப்பு, புதினா போன்ற பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பற்சொத்தைக்கு காரணமான பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது.
வீட்டில் உள்ள பொருட்களின் மூலம் பல்வலியை போக்குவது எப்படி?
- வேப்பம்பட்டையை குடிநீர் செய்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க (How to fix toothache) பல்வலி தீரும்.
- கற்பூரவள்ளி இலை, துளசி இலை சேர்த்து மென்று,வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்திக் கொள்ள பல்வலி நீங்கும்.
- இரண்டு துளி கிராம்புத் தைலத்தை பஞ்சில் தோய்த்து பல்வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ள பல்வலி கட்டுப்படும்.
- கோவைப்பழம் சாப்பிட பல்வலி நீங்கும்.
- கொத்தமல்லி இலை அல்லது விதைகளை மென்று, கொத்தமல்லிவிதையில்க குடிநீர் செய்து வாய் கொப்புளித்து வர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்துர்நாற்றம் நீங்கும்.
- இலவங்கபொடியை கொண்டு பல்வலி உள்ள இடத்தில் தேய்க்க பல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்.
- 1 கரண்டி துளசிசாற்றில் சிறிது கற்பூரம், கிராம்புத்தூள் கலந்துசொத்தைப் பல்லின் மேல் தடவ வலி குறையும். ஈறு வீக்கம் நீங்கும்.
- கொய்யா இலைகளை மென்று பல் தேய்க்க பல்வலி,வாய்புண் குணமாகும்.
- மாதுளம்பழதோடுடன் உப்பு கலந்து பல் துலக்க பல்வலி தீரும்.
- சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து சொத்தைப்பல்லில் வைக்க தீவிரமான வலியை கட்டுப்படுத்தும்.
- பெருங்காயத்தை எலுமிச்சைச் சாற்றிலுரைத்து பஞ்சில் தோய்த்து வைக்க பல்வலி குணமாகும்.
- ஒரு துண்டு சுக்கு எடுத்து வாயில் வைத்திருக்க பல்வலி போகும்.
- சாம்பல் கொண்டு பற்களைத் துலக்க, பற்கள் வெண்மையாவதோடு, பற்களுக்கு கெடுதி செய்து கொண்டிருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, வாயில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி, பற்களுக்கு நல்ல பாதுகாப்புத் தரும்.
- இளம் அருகம்புல்லை மென்று, சாற்றை பல்வலி உள்ள பக்கம் ஒதுக்கி வைக்க வலி நிற்கும்.iதனைத் தொடர்ந்து செய்ய ஆடுகின்ற பல் உறுதியாகும்.
- துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வர பல்வலி குறையும்.
பல்வலி போக்கும் இயற்கை மருத்துவகுறிப்புகள் (How to fix toothache with natural)
- 3 -5துளி சுக்கு தைலத்தை பஞ்சில் தோய்த்து பிழிந்துவிட்டு, பல்வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி தீரும்.
- 200மிலி வெந்நீரில் 10துளி சுக்குத்தைலமிட்டு வாய்கொப்புளிக்க பல்வலி கட்டுப்படும்.
- கடுக்காய் தூளுடன் சம அளவு உப்புத்தூள் கலந்து பல்துலக்கி வர பல்வலி,ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்.
- குடசப்பாலை பட்டை குடிநீர் செய்து வாய்கொப்புளிக்க பல்வலி தீரும்.
- சாதிக்காய் எண்ணை 2 துளி பல்வலி உள்ள இடத்தில் பூசகுணமாகும்.
- நந்தியாவட்டை வேர் சிறுதுண்டு மென்று துப்ப பல்வலி குணமாகும்.
- தான்றிக்காய் தூள் கொண்டு பல்துலக்கிவர பல்வலி, பல்சொத்தைஅணுகா.
- சிவனார்வேம்பு வேரால் பல் துலக்கி வர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்ப்புண் குணமாகும்.
- தான்றிதோட்டை கருக்கி பொடித்து,குடிநீர் செய்து, வாய்கொப்புளித்துவர பல்வீக்கம், பல்வலி தீரும்.
- கருவேல்பட்டை,வாதுமைதோடு சமன் கருக்கிப் பொடித்து ,பல் துலக்கி வர பல் கூச்சம், ஈறுபுண்,பல்வலி,பல்ஆட்டம் தீரும்.
- கருவேலம் பற்பொடியில் பல்துலக்கி, மகிழ இலைக் கியாழத்தில் வாய் கொப்புளிக்க பல் நோயனைத்தும் தீரும்.
- கொழுஞ்சிவேரை சாறுபிழிந்து பஞ்சில் தோய்த்து பூச்சி விழுந்த பல்லில் வைக்க வலி நிற்கும்.
- சுக்கு, காசுக்கட்டி,கடுக்காய், இந்துப்பு சம அளவு இடித்து பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, அனைத்தும் நீங்கும்.
- புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு வற்ற காய்ச்சி ,கால் லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி கொழகொழ வென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கி, தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.
- வெள்ளருகு மூலிகையின் இலைகளை மையாக அரைத்து அதன் நடுவில் ஒரு சிறிய உப்புகல்லை வைத்து பல் வலி உள்ள பல்லில் வைத்து விட வலி நீங்கும்.
- கண்டங்கத்திரி பழத்தை பொடித்து, அனலிலிட்டு,புகையை வாயில்படும்படி பிடிக்க சொத்தைப்பல் குணமாகும்.பல்வலி குறையும்.
பற்களை நன்கு பராமரிப்பதற்கு நல்ல பல் மருத்துவமனைகள் அருகில் இல்லையென்றால், கவலைப்படாதீர்கள். வரும்முன் காப்பதே சிறந்தது. அதை நீங்களே செய்யலாம்; பற்களை ஒழுங்காக, சரியாக பராமரித்தால் முத்து பற்களுக்கு நீங்கள் சொந்தக்காரர்கள் ஆகலாம்!