மனப்பயம் (How to overcome fear anxiety)

மனப்பயம் அல்லது மனபிராந்தி, இது இல்லாத ஒன்றை உருவகித்து இருப்பதாக உணர்வது.மனத்தின் கற்ப்னையே. இந்த கற்பனையில் இருந்து எப்படி வழியே வருவது (How to overcome fear anxiety)? என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

பயம் என்ற உணர்வு மனிதனுக்கு கட்டுப்பாட்டினைத் தரும். கடமையை ஒழுங்காக  செய்ய வைக்கும். நல்ல ஒழுக்கத்தினைத் தரும். ஆனால் எல்லைகளைத் தாண்டிய பயம் மனித வாழ்வினை அழித்து விடும்.

இன்றைக்கு இருந்த இடத்திலேயே கைத்தொலைபேசி மூலமே எல்லா வேலைகளையும் செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கின்றோம். பல சிலிர்க்க வைக்கும் சாகசங்களை செய்கின்றோம். ஆனால் ஒரு சிறிய தலைவலிக்கும், பல் வலிக்கும் அல்லல் படுகின்றோம்..

சிலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. விழிப்புணர்விற்காக எழுதப்படும் கட்டுரைகள் டி.வி. நிகழ்ச்சிகளைப் படித்தவுடன், பார்த்தவுடன் தனக்கும் அதே போல் இருப்பதாக உணர்வது.எனக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கின்றது என்று பயந்து அதிலேயே மூழ்கி விடுவர். பயம் மனிதனின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு.

பலர் எப்பொழுதுமே பயத்திலேயே வாழ்கின்றனர். ஏதோ ஒரு காரணம், நிகழ்வு, கற்பனை, முன் நிகழ்ந்த நிகழ்வின் ஆழ்ந்த பதிவு போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் எப்பொழுதும் பயத்திலேயே இருக்கின்றனர்.

‘பயம் என்பது  மது, புகைபிடித்தலை  விட மிக மோசமானது.’  தொடர்ந்து பயத்திலேயே இருப்பவர்  செயற்திறன் அற்றவர்  ஆகிவிடுகிறார்.மனபயம் என்பது  ஒரு வித நோய்.

‘அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும்’.

How to overcome fear & anxiety, to overcome fear & anxiety,yoga to overcome fear & anxiety,annaimadi.com,How to overcome fear anxiety, fear & anxiety,reasons for fear & anxiety,ways to overcome fear & anxiety 

தேவையற்ற பயங்களில் இருந்துவிடுபட( How to overcome fear anxiety)

 பயம் உங்கள் வாழ்வினை உடல் நலத்தினை அழிக்கின்றது என்பதனை நன்கு உணர வேண்டும்.
 எதனைப் பற்றி நீங்கள் பயப்படுகின்றீர்கள் என ஆழ்ந்து சிந்தியுங்கள்.உங்கள் உள் மனமே இதிலிருந்து வெளி வர வழி கூறும்.
எதனையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என டென்ஷன் பட்டு குறுக்கு வழிகளில் செல்லாதீர்கள்.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள்.
நிகழ்நொடியில் தான் பல செயல்களை சாதிக்க முடியும். பிடித்தமான வேலையை  செய்யுங்கள். முழு கவனத்துடன் வேலை செய்யுங்கள்.
நான் நன்றாக இருக்கிறேன்’ என உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.

தேவை என நினைத்தால் சற்றும் தயங்காது மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறுங்கள்.

நல்ல ஆக்கப்பூர்வமான புத்தகங்களைப் படியுங்கள்.
முறையான உணவு மிக முக்கியம்.
யோகா, தியானம், உடற்பயிற்சி இவை பெரிதும் உதவும்.
கடவுள் நம்பிக்கை உடையவர் என்றால் பிரார்த்தனை செய்யுங்கள்.
ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
 வாழ்வில் வெற்றி பெறுவதே உங்கள் கண்களில் தெரிய வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தன்தோற்றத்தினைப் பற்றியும், நல்ல பண்பு, குண நலன்களை பற்றியும் ஒரு ஆக்கப்பூர்வமான கருத்து இருக்கும்.

How to overcome fear & anxiety, to overcome fear & anxiety,yoga to overcome fear & anxiety,annaimadi.com,How to overcome fear anxiety, fear & anxiety,reasons for fear & anxiety,ways to overcome fear & anxiety

பயத்தால் ஏற்படும் அறிகுறிகள்

முடி கொட்டுதல், •எடை கூடுதல் அல்லது  குறைதல்
சோர்வு போன்றவை ஏற்படலாம்.
அதிக சோகம் • படபடப்பு •தனிமையிலேயே இருத்தல்
எதிர்காலத்தினைப் பற்றிய கவலை என இருக்கும்.

தொடர் பயம் என்பது நோய் எதிர்ப்பு சக்தியினை வெகுவாய் குறைத்து விடும்.
தூக்கமின்மை ஏற்படும்.
ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
முறையான உணவு எடுத்துக்கொள்ளமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடல் நலம் வெகுவாய் பின்னடையும்.

பயத்தால் ஏற்படும் விளைவுகள்

இருதய பாதிப்பு ஏற்படும்.
ஜீரண உறுப்புகளில் பிரச்சினை ஏற்படும்.
குடல் பாதிப்பு அதிகமாய் இருக்கும்.
பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு பாதிக்கப்படும்.
வயதுக்கு மீறிய மூப்பு தோற்றம் ஏற்படும்.
இளவயதிலேயே இறப்பு ஏற்படும்.
ஞாபக மறதி அதிகமாகும். சோர்வு ஏற்படும்.
உடல், நோய் பற்றிய பயம் எப்போதும் இருக்கும்.உலகமே பயமானதாகத் தோன்றும்.வெளி உலகத்தோடு பழக விருப்பம் இருக்காது. எல்லோரிடமும் இருந்து ஒதுங்கிக் கொள்வர்.எதிலுன் அக்கறை விருப்பம் இல்லாமல் போவதால், தமது தோற்றத்திலும் கவனம் காட்டமாட்டார்கள்.
தசைகள் வலுவிழந்து இருக்கும்.அன்றாட பணிகளை செய்ய இயலாது.மனஉளைச்சல் அதிகமாகும்.
இருதய துடிப்பு மிக அதிகமாக இருக்கும்.மிக அதிக வியர்வை இருக்கும்.அதிக மூச்சு வாங்கும்,வாய் வறண்டு இருக்கும்.

How to overcome fear & anxiety, to overcome fear & anxiety,yoga to overcome fear & anxiety,annaimadi.com,How to overcome fear anxiety, fear & anxiety,reasons for fear & anxiety,ways to overcome fear & anxiety

ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உடல் நலம், மன நலம் இரண்டினையும் மேம்படுத்தும் அழிவுப் பூர்வமான சிந்தனைகள் உடல் நலம், மனநலம் இரண்டினையும் அழித்துவிடும் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

இத்தனை பாதிப்புகள் தரும் பயத்தினை தூக்கி எறிவோம். நல்ல பாடல்களைக் கேட்போம்.

நல்ல நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது,.புதிய இடங்கள்,ஆலயங்கள் ,சுற்றுலா செல்வது நம்பிக்கையைத் தரும். என்னவோட்டங்க்களை மாற்றி புதிய முயற்சிகளில் ஈடுபடுவோம். எதையும் வெல்லமுடியும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *