அதீத மன உளைச்சலில் இருந்து விடுபடுவது எப்படி? (How to relieve extreme stress)

ஓய்வில்லாத  தற்போதைய வாழ்க்கை முறையில் மன அழுத்தம் இல்லாமல் யாரும் இல்லை. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சாதாரணம். எனினும், அழுத்தம் அதிகமானால்  மன உளைச்சலை அதிகரிக்கும்.அதிலிருந்து விரைவாக விடுபடுவது (How to relieve extreme stress) என பார்ப்போம்.

நோய்களை உண்டாக்கக் கூடிய உடல் , மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு  காரணியையும் மன அழுத்தம் எனக் கருதலாம். அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை  மன அழுத்தம் கொடுக்கும் உடலியல் மற்றும் இரசாயன காரணிகளாக கூறலாம்.

தங்களை சுற்றி நடப்பவை காரணமாக அழுத்தம் ஏற்படும் போது, அதற்கு எதிர்வினையாக சில இரசாயனங்கள் உடலில் சுரந்து இரத்தத்தில் கலக்கின்றன. இந்த இரசாயனங்கள் அவர்களுக்கு அதிக ஆற்றல் மற்றும் பலத்தை அளிக்கிறது.

குறிப்பிட்ட காரணங்கள் அறியப்படாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது உண்மையே. அநேக குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது.

சிக்கலான சமூக, குடும்ப வாழ்வியல் முறைகள், பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், குழந்தை பருவத்தில்  ஏற்படும் குடும்ப வன்முறை, தாக்குதல்கள் போன்றவற்றால் உண்டாகும்  மனோரீதியான தாக்கங்கள் எதிர்காலத்தில்  மன அழுத்தம்  ஏற்பட காரணங்களாகின்றன.

காலை முதல் மாலை வரை அலுவலக பணிகளை முடித்து விட்டு மன அழுத்தத்துடன் வீடு திரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது, சரியாக உணவுகளை உண்ணாமல் இருப்பது, வீட்டுப் பாடத்தை முடிக்காமல் இருப்பது என்று பலவற்றையும் கண்டு அவர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். அவர்களைத் திட்டவும் செய்கிறார்கள்.
இதனால்  குழந்தைகளின் மனம், ஆரோக்கியமான சிந்தனை மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு நாளடைவில் அது மன உளைச்சலாக மாறும் நிலை உருவாகும். அதேநேரம் அதிக கோபம், பதட்டம், பிள்ளையை திட்டிவிட்டோமே என்ற கவலை போன்றவை பெற்றோருக்கும் மன உளைச்சலை  ஏற்படுத்துகின்றது.

குழந்தைகளுக்கு  ஏற்படும் மன அழுத்தம்

இத்தனை கால வாழ்க்கை அனுபவத்திற்கு பிறகும்  வயது வந்தவர்களும் தவறுகள் செய்கிறோம்.அது  இயல்பே. குழந்தைகள் சிறு சிறு தவறுகள் செய்வது என்பது மிக சாதாரணமானது. ஆனால் கோபத்தில் இதை உணர தவறும்  சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறு செய்வதை எண்ணிப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனம் உடைகின்றனர்.

இதனால் உற்சாகத்தோடு வளர வேண்டிய குழந்தைகள் பயத்துடன் வாழ , வளரத் தொடங்குகிறார்கள். பள்ளியில் ஆசிரியர்களுக்குப் பயந்து வீட்டில் பெற்றோர்களுக்குப் பயந்து தாங்கள் செய்வது சரியா அல்லது தவறா என்று தெரியாமல் திணறுகிறார்கள்.இதனால் அறியாமையிலேயே ,தங்களது குழந்தைப் பருவத்தைத் தவறாகக் கடக்கும் நிலைக்கு  பிள்ளைகள் ஆளாகின்றனர்.
 
annaimadi.com,stress free life,relief from stress,peaceful life,meditation,yoga,how to relieve extreme stress
இத்தகைய சூழல் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.முக்கியமாகப் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வது, வீட்டில் தாத்தா, பாட்டி போன்ற  உறவினர்களுடன் துணையாக இருந்து விளையாடி நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க இயலாத நிலை, அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்கை போன்றன ஆகும்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் உணர்ந்து , நேர்மறை சக்திகளையும் எண்ணங்களையும் உங்கள் குடும்பத்தில் வளர்த்துக் கொள்ளுங்கள்.இதன் மூலம் அமைதியான குடும்ப சூழல் அனைவருக்கும் கிடைக்கும். குழந்தைகள் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வளரும் சூழல்தானாகவே உருவாகிவிடும்.

அதீத மனஉளைச்சலை தவிர்க்கும் வழிகள் (How to relieve extreme stress)

1.மனதையும் ,சிந்தனையும் ஈர்க்கும் பணியில் ,விளையாட்டில், பாட்டு கேட்பதில், பாட்டு பாடுவதில் ஈடுபட  மனவோட்டம் மாறி மன உளைச்சல் குறையும் .

2.கடற்கரை, ஆற்றங்கரை, குளங்கள் போன்ற நீர்நிலைகள்,தோட்டங்கள்,தோப்புகளில் உலவி வரலாம். பூக்கள், மரங்கள், மலைகள்,அருவிகள்,குருவிகள்,காடுகள், என  இயற்கையை ரசிக்க பழகுங்கள்.

குறைந்தது வீட்டு பூந்தோட்டம், தோட்டம், முற்றத்தில் காலாற நடக்கலாம்.

பூந்தோட்டம், தோட்டம் செய்து அவற்றில்  சிறிது நேரம் ஈடுபடவது ,மன மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

3.எல்லா பிரச்சினைக்கும்  ஒரு தீர்வு கிடைக்கும்.எந்த பிரச்சனை மன உளைச்சல் கொடுத்ததோ அதற்கும் ஒரு தீர்வு உண்டு. சில நேரங்களில் கண்டறிய தாமதமாகலாம்.

அமைதியாக இருந்து யோசியுங்கள் .எதிர்ப்பக்கம் உள்ளவரின் சார்பாகவும் யோசியுங்கள்.உதாரணமாக பிள்ளைகளின் பிரச்சனை என்றால் அவர்கள் வயதில் நீங்கள் இருந்து யோசியுங்கள். நல்ல தீர்வு கிடைக்கும்.

4.கடவுள்  நம்பிக்கை இருந்தால், மானசீகமாக வேண்டிக்கொள்ளலாம். அல்லது நல்ல நண்பன் இருந்தால் அவருடன் பேசலாம். பிரச்சனைகளை விடுத்து நன்றாக உறங்கவும். நல்ல தூக்கம் உடலுக்கு ஆற்றலை தரும். எழுந்த பின் தெளிவு வரும். அல்லது அந்த மனஉளைச்சலின் வீரியம்  குறைந்து இருக்கும்.  

5.எல்லா மனிதருக்கும் ஏதோ பிரச்சினைகள், மன உளைச்சல்கள் இருக்கத் தான் செய்யும். அதனுடன்  தைரியமாக மோதி, வெளியேறுங்கள்.

annaimadi.com,h,stress free life,relief from stress,peaceful life,meditation,yoga,மன உளைச்சலில் இருந்து வெளிவர

மன அழுத்தம் ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள்

தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.

 தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்வதும உண்டு . நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.

சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.

அதிக நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது.

ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.

annaimadi.com,,stress free life,relief from stress,peaceful life,meditation,yoga,மண் உளைச்சலை வெல்வது eppadi

மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்

உடல் ரீதியான விளைவுகள்

பெரும்பாலும் நரம்பு, சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றுள் சில

 • படபடப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு
 • அதிகரிக்கும், மேலோட்டமான மூச்சு வாங்குதல்
 • நடுக்கம்
 • குளிர் அல்லது வியர்த்தல்
 • ஈரமான புருவப்பகுதி
 • இறுக்கமான தசைகள், வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், முறுக்கிய கைகள், பற்களை கடித்தல்
 • வயிற்று உபாதைகள்
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • முடி கொட்டுதல்

annaimadi.com,how to overcome stress,stress free life,relief from stress,peaceful life,meditACation,yoga,how to relieve extreme stress

மன ரீதியான விளைவுகள்

சரியான முறையில் சிகிச்சை பெறாத போது பலவிதங்களில் வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும்.

 • கவனம் செலுத்துவதில் சிரமம்
 • முடிவெடுப்பதில் சிரமம்
 • தன்னம்பிக்கை இழத்தல்
 • அடக்கமுடியாத ஆசைகள்
 • தேவையற்ற கவலைகள், படபடப்பு
 • அதீத பயம்
 • பயத்தால் பாதிப்புகள்
 • குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள்

மன அழுத்தத்தை சமாளித்தல் (How to relieve extreme stress)

மன அழுத்தத்தை நிர்வகிப்பது, அதை ஏற்படுத்தும் காரணிகளை அறிவதில் தொடங்குகிறது. சொல்வது போல் இது எளிதான காரியமல்ல.

உண்மையான காரணிகளை அறிய, உங்கள் குணம், நடைமுறைகள் மற்றும் அடிக்கடி கூறும் சாக்குபோக்குகளை ஆராயுங்கள்.

விபரத்தை பதிவு செய்யுங்கள்

இவ்வாறான பதிவுகள் மூலம், வழக்கமாக அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் காணவும் அவற்றை தவிர்க்கவும் இயலும்.

மன அழுத்த பாதிப்பு இருப்பதாக ஒருவர் உணர்ந்தால், அதை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யப்படும் பதிவு மூலம், நாளடைவில் ஒரு பொதுத்தன்மையை உணர முடியும்.

 • எதனால் மன அழுத்தம் ஏற்பட்டது (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)
 • நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)
 • உடல் மற்றும் மன்வியல்ரீதியாக எப்படி உணர்ந்தீர்கள்?
 • எப்படி நீங்கள் செயல்பட்டீர்கள்?
 • நீங்கள் இயல்பு நிலையை அடைய என்ன செய்தீர்கள்?

மன அழுத்தத்தை சமாளிக்கும் (How to relieve extreme stress) ஆரோக்கியமான வழிமுறைகள் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம் மட்டுமே சாத்தியம்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். இதைப்பற்றி ஆழமாக சிந்தியுங்கள், பிறருடன் ஆலோசனை செய்யுங்கள். காரணிகள் அல்லது நபர்களை அறிந்து அவற்றை குறைக்கும் அல்லது நீக்கும் வழிகளை கடைப்பிடியுங்கள்.

யோகாசனம், இறைவழிபாடு, தியானம்,உடற்பயிற்சியில் நாளாந்தம் ஈடுபடுங்கள்.ஓய்வெடுங்கள்.நன்றாக உறங்குங்கள்.விருப்பமான அமைதி தரும்  பாடல்களைக் கேளுங்கள்.

நல்ல மகிழ்ச்சி, அமைதி கிடைக்கும்!!

Leave a Reply

Your email address will not be published.