படித்ததை நினைவில் வைத்திருப்பது எப்படி (How to remember what you read)
தேர்வு நெருங்கிய சமயத்தில் சில இலகுவான வழிமுறைகளைப் பின்பற்றி படிக்கும் போது ,படித்தவற்றை சுலபமாக நினைவில் வைத்திருக்க வர (How to remember) எல்லோராலும் முடியும்.
தேர்வு நெருங்க நெருங்க சிலருக்கு படித்த அனைத்தும் மறந்து போய் இருக்கும். தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறீர்களா, அதிக நேரத்தை பாவித்து ,எவ்வளவு படித்தாலும் மறந்து விடுகிறதா?
சிலருக்கு தேர்வு என்ற பயத்திலேயே படித்தது எல்லாம் மறந்து விடும்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.உங்களால் முடிந்ததை தான் செய்யமுடியும்.பரீட்சையில் சித்தி அடைவது முக்கியம்.
கீழ்நிலை மாணவர் கூட சித்தி அடையலாம்.அதற்கு ஒருவழி,இந்த முறையைப் பின்பற்றுங்கள். நிச்சயம் பாஸாக முடியும்.
தேர்வு நெருங்கியதும் உங்களால் செய்ய முடியாத, விளங்காத அல்லது கஷ்ரமான பகுதிகளை போட்டு படித்துக் கொண்டே இருக்காதீர்கள். இது எல்லோரும் செய்யும் மிகப் பெரிய பிழை.
இது நீங்கள் இலகுவாக செய்யக் கூடிய பகுதிகளைக் கூட செய்யமுடியாத நிலையை உண்டுபண்ணிவிடும்.
ஒவ்வொரு பாடத்திலும் உங்களுக்கு பிடித்த உங்களால் செய்யமுடியும் என்ற பகுதிகளை முன்னிலைப் படுத்த வேண்டும். உங்கள் நேரத்தை அந்த பகுதிகளை இன்னும் சிறப்பாக செய்ய பயன்படுத்துங்கள். படித்ததை நினைவில்கொள்ள சில வழிகள் (Quick learning tools to how to remember).
உதாரணத்திற்கு கணித பாட பரீட்சை வினாத்தாளில் 10 வினாக்கள் இருக்கும்.அதில் 8 வினாக்களுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
ஆனால் அதில் 3,4 வினாக்களிற்கான பாடங்களையே தயார் செய்து வைத்து இருந்தாலும், இந்த முறைகளை பயன்படுத்தி படித்தால், நீங்களும் சித்தி அடையலாம். இந்த பகுதிகளையே கூடுதல் கவனம் எடுத்து படியுங்கள்.3 வினாக்களுக்கு சரியாக விடை அளித்தாலே போதும்.
குறிப்புகள் எடுத்து படிப்பது
ஃப்ளாஷ் கார்டுகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். ஃபிளாஷ் கார்டை(flash cards) உருவாக்குவதற்கான எளிய வழி, முதலில் நீங்கள் விரும்பும் அளவுக்கு அட்டைப் பெட்டியிலிருந்து சில சதுரங்களை வெட்டிக் கொள்ளுங்கள்.அதில்
உங்களுக்கு புரியாத கேள்வி ஒரு பக்கத்திலும் பதிலை மறுபுறத்திலும் எழுதுங்கள். பதில்களை எழுதும் போது, அவற்றை புத்தகத்தில் மட்டும் இல்லாமல் உங்கள் சொந்த வார்த்தைகளிலோ அல்லது படங்களின் அடிப்படையிலோ உங்களுக்கு புரியும் விதத்தில் எழுதலாம்.
இறுதியாக, நீங்கள் உருவாக்கிய அட்டைகளை (கேள்வியின் பக்கத்திற்கு) திருப்பி வைத்து அவற்றுக்கு மனதினாலேயே பதிலளிக்கவும். நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்தால், அந்த விடயங்களை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.
சிறிய இலக்குகளை வைத்திருங்கள்
இந்த முறை மிகவும் வெற்றிகரமானதாகும். அதற்கு ஒரு உதாரணமாக, “நான் இன்று தமிழ் புத்தகத்தில் உள்ள பாடங்களின் தொகுப்பில் அனைத்து பயிற்சிகளையும் செய்த பிறகு தான் நண்பர்களுடன் விளையாடப் போகிறேன்” என்பது போல சிறு சிறு இலக்குகளை தினமும் நிர்ணயிக்கலாம்.
கடந்த கால பரீட்சை தாள்களை செய்து பழகுதல் (Pass paper)
நீங்கள் நிச்சயமாக ஒரு பரீட்சைக்கு முன் கடந்த வருட பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளித்து பார்த்திருக்கலாம். குறிப்பாக இதனை தனியாக செய்வதே சிறந்தது.
மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாஸ்ட் பேப்பர்களை செய்யுங்கள். பின்னர் அந்த ஆவணங்களில் உங்கள் பாட அலகு சம்பந்தப்பட்ட அனைத்தையும் முன்னிலைப்படுத்தவும் அல்லது குறிக்கவும்.
இன்னும் ஒரு விஷயம், கடந்த கால ஆவணங்களில் நீங்கள் தவறுவிட்டவற்றை மீண்டும் செய்யவும். பின்னர் நன்றாக அவற்றை நினைவில் கொள்ளுங்கள்.
பாடம் சம்பந்தமான வீடியோ பார்த்தல்
உங்களுக்கு புரியாத பாடம் சம்பந்தமாக யூடியூப் இல்(You tube) ஒரு வீடியோவை பாருங்கள். குறிப்பாக அறிவியல் போன்ற பாடங்களில் நிச்சயமாக இருக்கும். கண்களால் பார்ப்பது(Visual) கூடுதலாக நினைவில் பதியும்.
உதாரணமாக தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் திரைப்படம் நீண்ட காலமானாலும் நினைவில் இருப்பது போல.
சொல்லிப் பார்ப்பது /எழுதிப் பார்ப்பது
இந்த முறை கூட அறிவியல்பூர்வமாக மிகவும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகவும் எளிதானது.நீங்கள் படித்த ஒரு பாடத்தில் ஒரு பகுதியை பாடம் செய்கிறீர்கள்.
அதை உங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அல்லது தனியாகவே சொல்லிப் பார்ப்பது. இது பாடங்களை நினைவில் கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாகும் (How to remember).
இதே போல படித்தவற்றை ஒரு பேப்பரில் எழுதிப் பார்க்கலாம். எழுதுவது அதிகமாக மனதில் பதியும்.படித்ததை நினைவு படுத்தி படமாகவும் வரையலாம்.
குழுவாக ஒன்றுகூடி படிப்பது
இந்த முறை நம் அனைவருக்கும் தெரியும். நீங்கள் தனியாக இருக்கும் போது படிப்பதை விட நண்பர்களுடன் படிப்பது எளிதானது.
படிப்பில் அக்கறையுள்ள நல்ல மூன்று , நான்கு நண்பர்களை சேர்த்துக்கொள்ளவும். இருப்பினும், முக்கியமாக நேரத்திக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விட வேண்டியது அவசியம்.
குறிப்பிட்ட ஒரு பாடத்தில் எந்தபகுதியைப் பற்றி தீர்மானித்து அன்று அந்த பகுதியில் கேள்விகள் கேட்டோ ,விளங்கப்படுத்தியோ அறிவை பகிர்ந்து கொள்ளலாம். பரீட்சையில் வெற்றிபெற இது மிகவும் உதவும்.
மற்றவருக்கு சொல்லிக் கொடுப்பதால், உங்களுக்கு இன்னும் கூடுதலாக விளங்கும்.ஞாபகத்திலும் (How to remember) இருக்கும்.