பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் (Hunger and disease)

பசி வந்தால் எந்த நோயும் (Hunger and disease) குணமாகும் என்பது இயற்கையின் விதி! 

பசி என்பது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளால் அறியப்படுகிறது. நாம் உணவு உண்ணும் போது, அந்த உணவை ரசித்து ருசித்து மனதார உண்ண வேண்டும்.

 இதனால் எந்த ஒரு கவனச்சிதறல் இல்லாமல், உணவின் மீது முழு கவனம் செலுத்தி நம்மால் உணவினை நன்றாக உண்ண முடிகிறது.

குறிப்பாக  இந்திய உணவு  என்பது மருந்தாகும்.நோயின்றி வாழ, வருமுன் காக்க, வந்தபின் சிகிச்சை அளிக்க என வகைப்படுத்தி  இயற்கை யையே பயன்படுத்தி வந்தனர்.

இதனால் அக்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அதை முறையாகக் கடைப்பிடித்து நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

ஆனால் இன்று 30 வயது இளைஞன் கூட சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்றவைகளால் தாக்கப்பட்டு அவதிப்படுகிறான். இதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் அந்நியநாட்டின் மீதுள்ள மோகமே எனத் தோன்றுகிறது.

இயற்கைக்கு மாறுபட்ட உணவுகள் உதாரணமாக ரசாயனம் கலந்த குளிரூட்டப்பட்ட உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள் என வகைவகையாக உண்டு, உடல் உழைப்பு இன்றி உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் வேலை செய்து, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது இதற்கு முதற் காரணம்.

இயற்கையை மறந்துபோன மனிதன் இயற்கை மருந்துகளையும் மறந்து நாகரீக முன்னேற்றத்திற்கு ஆட்பட்டுபசிக்காதபோதும் உண்ணமுற்பட்டதன் விளைவு புதிய புதிய நோய்களின் தாக்கம்.

மனரீதியான பசி(Hunger and disease)

 பசி (Hunger and disease)நமது உணர்வுடன் தொடர்புடையது. என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்ற வடிவத்தில் மன பசி தோன்றுகிறது. 

நாம் சந்தோஷமாக இருக்கும் தினங்களில் சிக்கன் பிரியாணி போன்ற உணவுகளையும், நாம் சோகமாக இருக்கும் தினங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுவது இந்த மன பசி தான்.

இந்த மன பசியில் உள்ள ஒரு தீங்கு என்னவென்றால், நேரத்திற்குத் தகுந்தாற்போல் நாம் உணவுகளை தேர்ந்தெடுக்கும் படி இது செய்கிறது.பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் ,Hunger and disease,annaimadi.com,அன்னைமடி

ஊட்டச்சத்தினை அதிகரிக்க பல்வேறு குறிப்புகள், அழகு நிபுணர்களின் ஆலோசனை போன்ற நம் மன எண்ணப்படி உணவுகளை மாற்றிக் கொள்கிறோம்.

மேலும் நாம் குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது அதிக புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை தூண்டுவது இந்த மன பசி.

 இதனால் ஆரோக்கியமான ஊட்டத்சத்து நம் உடலுக்கு கிடைப்பதில்லை. நீங்கள் உணவினை உட்கொள்வதற்கு முன் சில கேள்விகளை தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவேண்டும்.

அதாவது பசிக்காக சாப்பிடுகிறோமா? அல்லது ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த காரணத்தால் சாப்பிடுகிறோமா?

மேலும் இந்த உணவு உங்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்குமா? அல்லது இது உங்களுக்கு பசியை தீர்க்குமா? போன்ற கேள்விகளை நீங்கள் கேட்டு கொள்வது நல்லது. 

கண் பசி

சிலருக்கு சில பிடித்தமான ஹோட்டல்களில் சமைக்கும் உணவை பார்த்தால் உடனே சாப்பிட வேண்டுமென்று தோன்றும்.

பசிக்காக சாப்பிடாமல் பிடித்ததை சாப்பிடுவதற்கு இது நம்மை தூண்டுகிறது.இந்த நேரங்களிலும் நீங்கள் உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்புவது சாலச் சிறந்தது.

பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் ,Hunger and disease,annaimadi.com,அன்னைமடி

வாய் பசி

திடீரென குளிர்பானம் குடிக்க வேண்டும் அல்லது இனிப்பாக உண்ண வேண்டும் சுவையான உணவு உண்ண வேண்டும் அல்லது சூடாக ஏதாவது ருசிக்க வேண்டும் போன்ற எண்ணங்களை நமக்கு ஏற்படுத்தும்.

ஏதேனும் உணவை சுவைக்க வேண்டும் என்று விரும்பினால், அந்த உணவு ஆரோக்கியமானதா என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் அது உங்கள் பசியை (Hunger and disease) பூர்த்தி செய்ய உதவுமா என்றும் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *