உடல் உழைப்பின்மையும் உடல் பருமனும் (Physical Inactivity & obesity)
ஒருவர் உணவு எடுத்துக்கொள்ளும் வீதம் அதிகமாகவும், உடல் உழைப்பு குறைவாகவும் உள்ளவர்களுக்கு தான் உடல் பருமன் (Physical Inactivity & obesity) அதிகமாக ஏற்படுகிறது.
உடல் பருமன் தேக்கி வைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பதால் மட்டுமே உருவாகின்றது.
உடல் மற்றும் உடலுக்கு அடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு, கூடுதல் உணவு, குறைந்த உடல் உழைப்பு (Physical Inactivity & obesity) , சில நேரங்களில் பரம்பரை காரணங்கள், ஓமோன் சுரப்பதில் ஏற்றத்தாழ்வு போன்ற காரணங்களால் உடல் பருமன் நோயை உருவாக்குகின்றது.
உலகளாவிய அளவில் தடுக்கக்கூடிய நோயினால் மனிதர்கள் இறப்பதில் உடல் பருமன் முதன்மை வகிப்பது மிகவும் வருந்தத்தக்கது.
உடல் பருமனை ((Physical Inactivity & obesity) கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எப்போதும் ஆரோக்கியமான வழியை மாத்திரமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
உடல் பருமன் (Obesity) உடனடியாக தோன்றுவது அல்ல. கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள வைத்திருக்கும் தேக்கம் ஆகும்.
பெண்களுக்கு 20-25 சதவீதமும் ஆண்களுக்கு 12-15 சதவீதமும் உடலில் கொழுப்பு காணப்படுகிறது. பெண்களுக்கு அவர்களின் மகப்பேறு பணிக்காக மார்பகம், கூபகம், தொடை பகுதிகளில் 12 சதவீதம் கூடுதலாக அத்தியாவசிய கொழுப்பு காணப்படுகின்றது. ஆண்களுக்கு இது 3 சதவீதம் தான் காணப்படும்.
மேலும், உடல் பருமனை குறைக்க பலரும் டயட் எனும் பெயரில் பட்டினி கிடப்பது வழக்கமாகிவிட்டது. இது தவறான முயற்சி. உடலுக்குத் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
குறைவான கலோரியில் நிறைவான நார்ச்சத்து கொண்ட உணவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
கடைகளில் கிடைக்கும் உடன் உணவு வகைகளை நாடுவதை உடற்பருமன் உடையவர்கள் முற்றாக நிறுத்துவது அவசியம்.
உடல் உழைப்பின்மை (Physical Inactivity & obesity)
தற்போது உலகளாவிய ரீதியில் 30 சதவீதமான மக்கள் குறைவான உடல் உழைப்பை (Physical Inactivity & obesity) மேற்கொள்கின்றனர். சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தொலைக்காட்சி, கைப்பேசியை பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
இது உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. முந்தைய காலங்களில் குழந்தைகள், இளைஞர்கள் மாலை நேரங்களில் வீதிகளில் விளையாடுவதை காணக்கூடியதாக இருந்தது.
இன்று அவ்வாறான நிலை மாறி, விளையாட்டும் கூட கைப்பேசியிலும் கணினியிலும் என்ற அவல நிலை ஏற்பட்டுவிட்டது.
10இல் ஒருவருக்கு குழந்தை பருவத்திலேயே உடற்பருமன் வருவதற்கு அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதே காரணம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேற்கு நாடுகளில் உடல் பருமன் ஒரு முக்கிய பொது சுகாதார பிரச்சனையாக கருதப்படுகிறது.
மேலும், சில சமூகங்களில் உடல் பருமன் எனப்படுவது பண வசதியை சுட்டி நின்றாலும், அநேக சமூகங்களில் உடல் பருமன் அழகற்றதாக கருதப்படும் ஒரு நிலை காணப்படுகின்றது.
உடல்பருமன் கொண்டவர்கள் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படுவது ஏன்?(Why are obese people more susceptible to infections?)
உயிரணுக்களில் இருக்கும் ACE2 எனப்படும் நொதியே வைரஸ் உடலுக்குள் நுழைவதற்கான முக்கிய வழியாகும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அடிபோஸ் திசுக்களில் அல்லது கொழுப்பு திசுக்களில் இந்த மூலக்கூறு அதிக அளவு காணப்படுகிறது. இது குறிப்பாக பருமனான நபர்களின் தோலின் கீழ்ப்பகுதிலும் மற்றும் மற்ற உறுப்புகளைச் சுற்றிலும் அதிகமாக உள்ளது.
இதுவே, உடல்பருமன் கொண்டவர்கள் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படுவதற்கும், நோய்வாய்ப்படுவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.
தற்போதைய தொழில்நுட்பமயமான வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது மிகவும் அருகிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இதனால் ஏற்படும் விளைவு குறித்து பலரும் அக்கறை காட்டுவதில்லை என்பதே வருந்தத்தக்கது.
உலகம் முழுவதிலுமே தற்போது தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தி குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். இது உடல் பருமனில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
கட்டுக்குள் அடங்காத வகையில் உடல் பெரிதாக சதை போடுவதை உடல் பருமன் (Obesity) அல்லது உடற்கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பை சேகரித்து வைப்பது உடல் இயக்கத்தில் சாதாரண ஓர் இயல்பு தான்.
ஆனால், அதுவே தீவிரமாக நடைபெறும் போது அது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பது மட்டுமன்றி, அது மருத்துவ வட்டாரத்தில் ஒரு நோயாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ அறிவியலானது உடல் முழுவதுமான ஒட்டுமொத்த பருமனாக காணப்படுவதை ஒவொய்ட் (Ovoid) அமைப்பு என்றும், பருத்த தொப்பை மாத்திரம் காணப்படுவதை அப்பிள் அமைப்பு என்றும், தொடை, அடிவயிறு மட்டும் பருமனாக இருப்பதை கைனொய்ட் (Gynoid) அமைப்பு என்றும் வகைப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், ஒவ்வொருவரும் எந்த பிரிவு என்பதை பொறுத்து, அவர்களுக்கான சிகிச்சை முறையும் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மாறுபடும்.
இதனை நினைவில் கொண்டே உடல் பருமனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதுவே ஆரோக்கியமான முறையாகும்.