வாசனைத்திரவியங்களும் பயன்களும் (Indian Spices)

வாசனைத்திரவியங்களில் (Indian Spices) என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என தெரிந்து கொள்வோம்.

இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் எந்வொரு  சிறு பொருளும் பசிக்காக மட்டுமல்லாது ,உடல் ஆரோக்கியத்தையும் அடிப்படையாக வைத்தே நம் முன்னோர் பயன்படுத்தி வந்தார்கள்.

இவற்றில் உணவில் நறுமணத்தினை உண்டுபண்ணி,பசியை தூண்டுவதற்காக சேர்க்கப்படும் வாசனைத் திரவியங்களும் (Indian Spices) அடங்கும்.

லவங்கப் பட்டை /கறுவா / Cinnamon Buds (Indian Spices)

மசாலா பொருட்களிலேயே மிகமிக அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது லவங்கப் பட்டை.
லவங்கப் பட்டைக்கு, நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பான டிரைகிளிசரைடு அளவை, இயற்கையானமுறையில் குறைக்க லவங்கப் பட்டை உதவும்.
பி.சி.ஓ.டி பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள், லவங்கப் பட்டையைச் சாப்பிட்டு வர விரைவில் சரியாகும்.

லவங்கப் பட்டையை நன்றாகப் பொடித்து, 500 மி.கி லவங்கப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, உடலில் சர்க்கரை அளவு குறையும்.
லவங்கப் பட்டையில் மாங்கனீசு, கல்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன.
பிரியாணியில் லவங்கப் பட்டை சேர்ப்பதால், எண்ணெய் காரணமாக ஏற்படும் வயிற்றுக்கோளாறுகள் தடுக்கப்படும்.

லவங்கப் பட்டை ,கறுவா ,Cinnamon Buds ,Indian Spices,annaimadi.com,Medicinal benefits of spices,அன்னைமடி,கராம்பின் நன்மைகள்,பல் ஆரோக்கியம்,

கராம்பு  Clove (Indian Spices)    

இனிப்புச் சுவையும் காரச்சுவையும் ஒருங்கே  கராம்பில் உள்ளது. சுருசுரு என இருக்கும் இது, பூஞ்சு  தொற்றுக்களை அழிக்கும்.
கராம்பு, பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது. கராம்புத் தைலமும் பல்வலிக்குப் பயன்படுத்தப்படுகிறது.
வாந்தி வரும் உணர்வு இருந்தால், தண்ணீரில் சிறிது அளவு கராம்பு போட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடித்தால், வாந்தி உணர்வு மறையும்.

பல்வலி முதலான பற்கள் மற்றும் ஈறுகளின் பிரச்சனைக்கு, கராம்பை நன்றாகப் பொடித்து, வலி ஏற்படும் இடத்தில் வைத்தால் வலி குறையும்.
விற்றமின் கே சத்து உள்ள கராம்பில் இருந்து எடுக்கப்படும் பல்வேறு எண்ணெய்களும், உடலுக்கு நன்மை தரும். எனினும், கராம்பை மிகக் குறைவாக சமையலில் பயன்படுத்தினால் போதுமானது.

பெருங்காயம் / Asafoetida

வயிற்றில் ஏற்படும் உப்புசம், கெட்ட காற்று, செரிமானக்கோளாறுகள் போன்றவற்றைச் சரிசெய்யும். எனவே தான் நம் முன்னோர்கள், சமையலில் பெருங்காயம் சேர்த்து வந்தனர்.
வயிற்று வலி, மார்புவலி போன்றவை ஏற்படும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரில், கால் தேக்கரண்டி பெருங்காயத்தைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதவிடாய் வலிக்கு, பெருங்காயத் தூள் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சிறு உருண்டைகளாக சாப்பிட, வலி குறையும்.
மோரில் எப்போதுமே சிறிது பெருங்காயத் தூள் கலந்து சாப்பிடுவது நல்லது.
பருப்பு வகைகளைச் சமைக்கும் போது, பெருங்காயம் சேர்த்துச் சமைத்தால், வாதப் பிரச்சனைகள் குணமாகும்.

பிரிஞ்சு இலை / Indian Bay Leaf (Indian Spices)

லவங்கப் பட்டை ,கறுவா ,Cinnamon Buds ,Indian Spices,annaimadi.com,Medicinal benefits of spices,அன்னைமடி,கராம்பின் நன்மைகள்,பல் ஆரோக்கியம்,

குருமா, பிரியாணி, குஸ்கா போன்ற பல்வேறு விதமான உணவுகள் சமைப்பதற்கு பிரிஞ்சு இலை பயன்படுத்தப்படுகிறது.
ஃபோலிக் அமிலம், விற்றமின் ஏ ஆகியவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்து ,மாங்கனீசு சத்து, நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
பிரிஞ்சு இலை செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

இமயமலைப் பகுதியில் பிரிஞ்சு இலை கிடைக்கிறது. பிரிஞ்சு இலை, நல்ல நறுமணம் கொண்டது. நறுமணம் அற்ற இலைகள் போலிகள் என அறிந்துகொள்ளலாம்.

அல்சர் போன்ற பல்வேறு வயிற்றுப் புண்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. ஆர்த்ரைடிஸ், தசை வலிகள் போன்றவற்றுக்கு, பிரிஞ்சு இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் மருந்தாகப் பயன்படுகின்றன.

சாதிக்காய் / Nutmeg (Indian Spices)

சாதிக்காய் இனிப்புப் பண்டங்களில் சுவையூட்டியாகவும், மசாலா பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சாதிக்காயின் தோலில் இருந்து எடுக்கப்படும் சாதிப்பத்ரியும் ஒரு மசாலா பொருள் தான்.
சாதிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். விந்து கெட்டிப்படும்.
கால் டீஸ்பூன் ஜாதிக்காய்ப் பொடி, அரைத் தேக்கரண்டி கசகசா, ஏலக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றைப் பாலில் சேர்த்துக் காய்ச்சி அருந்திவர, நல்ல தூக்கம் வரும்.

ஜாதிக்காயை நன்றாக அரைத்து, பேஸ்ட் போல செய்து, தண்ணியில் கலந்து குடித்துவந்தால், வயிற்றுப்போக்கு சரியாகும்.
ஆன்டிஏஜிங் கிரீம்கள் தயாரிப்பில் ஜாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஜாதிக்காயை அவ்வப்போது சாப்பிட்டுவந்தால், தோல் சுருக்கங்கள் நீங்கும்.
ஜாதிக்காய் பேஸ்ட்டை பருக்கள் மீது தடவிவர, முகப்பரு நீங்கும்.

கசகசா / Poppy Seed

கசகசா ருசிக்காகப் பயன்படுத்தப்பட்டாலும் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, குடல் புண்களை ஆற்றும்தன்மை மிகுந்தது.
பாப்பி செடியில் இருந்து கசகசா கிடைக்கிறது. கசகசா உடலை வலுவாக்கும்.

கசகசாவைப் பாலில் கலந்து குடித்துவந்தால், தூக்கமின்மை  சரிகாக வழி கிடைக்கும். சித்த மருத்துவமுறையில் கசகசா லேகியம் செய்து சாப்பிடுவதும் நல்ல பலன் தரும்.
சீதபேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
கசகசா, வால்மிளகு, பாதாம் பருப்பு, கல்கண்டு, போன்றவற்றை சம அளவு அரைத்துச் சாப்பிட்டுவந்தால், உடல் வலுவடையும்.

அன்னாசிப்பூ / Star Anise (Indian Spices)

காய்ச்சல், தொண்டைக் கரகரப்பு, மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால், அன்னாசிப்பூவைக் கொதிக்கும் நீரில் போட்டு, மேலே தட்டு வைத்து மூடி, கொதிக்கவைக்க வேண்டும்.

இந்த நீரை வடிகட்டிப் பருகிவர, உடல் பலமாகும்.
அன்னாசிப்பூ, பசியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மசாலா பொருட்களில் அன்னாசிப்பூ பயன்படுத்துவதால்  சுவையும் கூடுகிறது. நிறைய சாப்பிடவும் முடிகிறது.
அன்னாசிப்பூவுக்கும், அன்னாசிப் பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது, அருணாச்சலப்பிரதேசத்திலிருந்து கிடைக்கிறது.

லவங்கப் பட்டை ,கறுவா ,Cinnamon Buds ,Indian Spices,annaimadi.com,Medicinal benefits of spices,அன்னைமடி,கராம்பின் நன்மைகள்,பல் ஆரோக்கியம்,

செரியாமை நோயைக் குணப்படுத்தும். இனிப்புகள் செரிமானம் ஆகத் தேவையான என்சைம்களைத் தூண்டிவிடுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

உணவை அழகுபடுத்தவும் அன்னாசிப்பூ பயன்படுத்தப்படுகிறது.

குங்குமப்பூ / Saffron

குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்தால், மேனி பொலிவு பெறும்.
குங்குமப்பூவைச் சாப்பிடுவதற்கும், குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
நம் ஊர்களில் விற்கப்படுபவை பெரும்பாலும் தரம் குறைந்தவையே. காஷ்மீரில்தான் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது.

குங்குமப்பூ, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை ஆகியப் பிரச்னைகளைச் சரிசெய்யும். இனிப்புகளில் குங்குமப்பூச் சேர்த்துச் சாப்பிடலாம்.
கர்ப்பிணிகள் குங்குமப்பூவைச் சாப்பிடுவதால், இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் வலுவடையும்.
சூடான பாலில் குங்குமப்பூவைக் கலந்ததும் நல்ல சிவப்பு நிறம் வந்தால், அது போலியான குங்குமப்பூ. பாலில் கலந்ததும், பல மணி நேரத்துக்கு பிறகு, தங்க நிறத்துக்கு மாறுவதே தரமான குங்குமப்பூ.

திப்பிலி / Long Pepper

லவங்கப் பட்டை ,கறுவா ,Cinnamon Buds ,Indian Spices,annaimadi.com,Medicinal benefits of spices,அன்னைமடி,கராம்பின் நன்மைகள்,பல் ஆரோக்கியம்,

இனிப்புச்சுவையும் காரத்தன்மையும் திப்பிலியில் கலந்ததுள்ளது . உடல் சூட்டைத் தேக்கி வைக்க உதவும். திரிகடுகத்தில் திப்பிலி முக்கியமானது.
திப்பிலி, சளியைப் போக்கும்.குரல் வளத்தைப் பெருக்கும். மூக்கடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், திப்பிலிப் பொடி இரண்டு கிராம் எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர குணம் கிடைக்கும்.

லவங்கப் பட்டை ,கறுவா ,Cinnamon Buds ,Indian Spices,annaimadi.com,Medicinal benefits of spices,அன்னைமடி,கராம்பின் நன்மைகள்,பல் ஆரோக்கியம்,

குளிர் காலத்தில், திப்பிலி ரசம், திப்பிலிப் பால், திப்பிலிக் கஞ்சி போன்றவற்றைச் சமைத்துச் சாப்பிடலாம்.
கண்டந்திப்பிலி வேர் மருத்துவக் குணம் நிறைந்தது.
புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல், திப்பிலிக்கு உண்டு. தொடர்ந்து, திப்பிலியைச் சாப்பிட்டுவந்தால் எந்த நோயும் அண்டாது.

வால் மிளகு / Piper Cubeba

வால் மிளகு குளிர்ச்சித்தன்மை கொண்டது. மேலும், இதைச் சாப்பிடும்போது நாக்கில் ஒரு விறுவிறுப்புத்தன்மையை உணர முடியும்.
இரும்புச்சத்து, நீரில் கரையாத நார்ச்சத்து போன்றவை வால் மிளகில் அதிகம்.
தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தபடுகிறது.

சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் வால்மிளகு ரசம் வைத்துச் சாப்பிடலாம்.
தொண்டைக் கரகரப்பு உள்ளவர்கள், வால் மிளகை நெய் விட்டு வறுத்து அரைத்த பொடியில் , அரை தேக்கரண்டி  எடுத்துத் தேனில் குழைத்து, நன்றாகத் தொண்டையில் படுமாறு வைத்துச் சாப்பிட வேண்டும். இதன் மூலம், தொண்டையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீங்கும்.

லவங்கப் பட்டை ,கறுவா ,Cinnamon Buds ,Indian Spices,annaimadi.com,Medicinal benefits of spices,அன்னைமடி,கராம்பின் நன்மைகள்,பல் ஆரோக்கியம்,செரிமானத்திற்கு தீர்வு,easy digestion

ல்பாசி ( Black stone flower)

கடற்பாசி என்பதும் கல்பாசி என்பதும் ஒன்று அல்ல. கல்பாசி, இந்தியாவில் மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
கல்பாசிப்பூவுக்கு ஆங்கிலத்தில் ‘பிளாக் ஸ்டோன் ஃபிளவர்’ என்று பெயர். கல்பாசி, சிறிது கசப்புச்சுவை கொண்டது.

கல்பாசிப்பூ வலி நிவாரணி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. செரிமான மணடலத்தில் அழற்சி போன்றவை ஏற்படுவதைத் தடுக்கவே கல்பாசிப்பூவை மசாலா பொருட்களில் சேர்க்கிறார்கள்.
கல்பாசிப்பூ, செரிமானத்தை மேம்படுத்தும்.

நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் குணமாக்கும்.
உடல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்கும். ஆன்டிபாக்டீரியல் மருந்தாகச் செயல்படுகிறது. சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கும். வெறுமனே கல்பாசியைச் சாப்பிடக் கூடாது. உணவுப்பொருளோடு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.

அதிமதுரம் / Liquorice

தொண்டை அழற்சியைக் குணப்படுத்தும். கப நோய்களைக் குணப்படுத்தும் கண் நோய்கள் நீங்கும். பார்வை தெளிவடையும். வாய்ப்புண், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் அதிமதுரம் சரி செய்யும். வயிற்றுப்புண்களை ஆற்றும். சருமப் புற்றுநோய்களைத் தடுக்கும்.

சுக்கு (Dried ginger)

இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து சுக்கு எடுக்கப்படுகிறது . இது, காரத்தன்மை கொண்டது.
சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.
பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.

தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து  வறுத்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.
சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உறைதல் பிரச்சனை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
செரிமான சிக்கல் நீங்க , அரை தேக்கரண்டி சுக்குப்பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

ஏலக்காய் (Cardamom)

ஏலக்காயைப் பொதுவாக, இனிப்புகள் செய்யும் போது பயன்படுத்துவார்கள். இனிப்புப் பண்டங்களைச் செரிமானம் அடையச்செய்யும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
ஏலக்காய் நல்ல நறுமணம் மிகுந்தது. நறுமணமூட்டியாக பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஏலாதித் தைலம், ஏலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிட்டுவர, வயிற்று எரிச்சல் குணமாகும்.
கபத்தைக் குறைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு.
ஏலக்காயைத் தினமும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக கலோரி நிறைந்த இனிப்புகள், பிரியாணி போன்றவற்றில் ஏலக்காயைச் சேர்த்து, சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.