உடனடித் தூக்கத்திற்கு ராணுவ உக்தி (Military manipulation for instant sleep)
இராணுவத்தில் கொடுக்கும் முதற்கட்ட பயிற்சியிலேயே எந்த சூழ்நிலையிலும் தூங்குவது (Instant sleep) எப்படி என்று தான் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதன்படி தான் எந்த இடத்தில் இருந்தாலும் 2 நிமிடத்திலேயே தூங்கி விடுகின்றனர்.
இராணுவத்தில் காலை நான்கு மணிக்கு தொடங்கி இரவு 11 வரை ஏதாவது ஒரு பணி இருந்து கொண்டே இருக்கும்.
அலுவலக பணி இல்லையேல் கட்டாயம் மாலை உடற்பயிற்சி இருக்கும். இவை அனைத்தும் ஒரு சுழற்சி முறையில் நடைபெறும்.
தரைப்படையில் ஞாயிற்றுக்கிழமை கூட கூட்டு பிரார்த்தனை நடைபெறும். எனவே இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்வதால் எங்கு படுத்தாலும் தூக்கம் வரும்.
நல்ல தூக்கத்திற்கு உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி மிக அவசியம்.
அதற்கு அவர்கள் கையாளும் முறை தெரிந்துக் கொள்வதன் மூலம், நாமும் கையாண்டு, நாள் முழுவதும் நடந்த நிகழ்வினால் ஏற்பட்ட பலவித மன உளைச்சல், உடல் சோர்வினால் சரியான தூக்கம் வராமல் அவதிப்படுவதில் இருந்து மீளலாம்.
நீங்களும் செய்து பாருங்கள்.உடற்பயிற்சி செய்ய நீங்கள் ஈடுபடுத்திய பாகத்தில் ஒருவித (சுகமான ) வலி ஏற்பட்டு நாள் முழுவதும் நீடிக்கும்.
நீங்கள் இரண்டு நிமிடத்திற்கு மேல் அமைதியாக உட்கார்ந்தோ அல்லது படுத்திருக்கவோ நேர்ந்தால் அந்த சுகமான வலி உங்களை உடனடியாக உறக்கத்திற்கு உட்படுத்திவிடும் . அந்த தூக்கமும் சுகமான தூக்கம் தான் .
ராணுவத்தினர் கொத்தனார், சித்தாள் ,பிளம்பர், குழிதோண்டுபவர்கள் , கல்லுடைக்கும் தொழிலாளர், மரம் வெட்டுபவர்கள் கூலிவேலையாட்கள், மாணவர்கள் தினமும் நல்ல தூக்கத்தைபெறுகிறார்கள்.
படுத்தவுடன் தூங்கி (Instant sleep) விட பின்பற்றும் வழிமுறை
1. முதலில் முகத்திலுள்ள எல்லா தசைகளையும், வாய், தாடை, கண்களை சுற்றியுள்ள தசைகள் உட்பட மெதுவாக தளர்வாக்குங்கள்
2. தோள்களை மெதுவாக சரிய விடுங்கள்.அடுத்து முன்னங்கை, பின்னங்கை இவையும் ஒன்றன் பின் ஒன்றாக சரியட்டும்.
3. அடுத்து உங்கள் நெஞ்சக்கூடு தளர்வாகுமாறு மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். இப்போது தொடையிலிருந்து கால் வரை தளர்வாக்குங்கள்
4. இப்போது உங்கள் மனதில் உள்ள நினைவுகளை அகற்ற 10 நொடிகள் செலவழியுங்கள்.
5. அடுத்து இந்தக் காட்சியை மனக் கண்ணில் கொண்டு வாருங்கள். ஒரு அமைதியான ஏரியில் உள்ள லேசான படகில் படுத்து கிடக்கிறீர்கள். மேலே நீலவானம் அல்லது ஒரு கும்மிருட்டான அறையில் தொங்கும் கயிறு ஊஞ்சலில் நீங்கள் சாய்ந்திருக்கிறீர்கள்.
இப்படியே இருங்கள் 2 நிமிடங்களில் தூங்கிவிடுவீர்கள். 96% பேர் இந்த வழியை பின்பற்றி வெற்றி கண்டுள்ளனர். அப்படியே தூக்கம் வரவில்லை என்றாலும் பத்து நாட்கள் தொடர்ந்து செய்ய, நன்றாக தூங்க ஆரம்பித்து விடுவீர்கள்.
பகல் முழுவதும் ஓயாமல் பணி செய்தால் நலல் உறக்கம் இரவு உங்கள் கண்களை தழுவும்.