சுவாரசியமான உலக மர்மங்கள் (Interesting mysteries)
நாம் வாழும் இந்த பூமியானது ஏராளமான மர்மங்களையும் (Interesting mysteries) ஆச்சரியங்களையும், சுவாரஷ்யங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அவற்றில் பலவற்றிற்கு விஞ்ஞானரீதியான ஆன்மீக ரீதியான காரணங்கள், விளக்கங்கள்இருந்தாலும், அவற்றில் சில மர்மங்கள் இன்னும் காரணம் அறியப்படாமல் அல்லது விடை காணப்படாமல் மனித மூளைக்கு எட்டாமல் இன்னும் புதிராகவே (Interesting mysteries)உள்ளமை ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது.
1.கிளியோபாட்ராவின் கல்லறை (TOMB OF CLEOPATRA)
உலகப் பேரழகிகளில் ஒருவரும் எகிப்தை ஆட்சிசெய்தவருமான கிளியோபாட்ரா மிகவும் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்த அரசியாக பார்க்கப்படுகிறார். விஷப்பாம்புகள் தீண்டப்பட்டு இறந்த அவரின் கல்லறை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
“அடக்கம் செய்யப்பட்ட இடம் இறுதியாக அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபோசிரிஸ் மேக்னா பகுதியில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று எகிப்திய தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹிஹாவாஸ், ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
2. ஓக் தீவின் புதையல் (OAK ISLAND TREASURE)
ஓக் தீவின் மர்மமானது சுமார் 200 வருடங்களாக தொடர்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் NOVA SCOTIA எனும் பிரதேசத்தில் இந்ததீவு அமைந்துள்ளது.
கேப்டன் கிட் எனும் கடற்கொள்ளையன் அவனது படையுடன் சேர்ந்து ஐரோப்பிய கடற்படைகளிடம் கொள்ளையடித்த பொருட்களை இந்த ஓக் தீவில் மிகவும் ஆழமான இடத்தில் புதைத்து வைத்துள்ளதாககூறுகின்றனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டே பலரும் பல மில்லியன்களை செலவு செய்து அங்கு தேடல் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் இன்றுவரை அந்த புதையல் எவரும் கண்டுபிடிக்கவில்லை.
3.செப்பு சுருள் புதையல்கள் (COPPER SCROLL TREASURE)
இஸ்ரேலிற்கு அருகில் உள்ள சாக் கடலிற்கு வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கும்ரான் எனும் பகுதியில் 1952 இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆராய்ச்சியில் குகைகளிலிருந்து செப்பினால் ஆன சுருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதில் புதையலை பற்றிய குறிப்புகள் இருந்தன. முற்காலத்தில் இந்த பிரதேசத்தில் ரோமானியர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் ஏற்பட்டதால் அவர்களிடம் இருந்து தமது விலைமதிப்பான பொருட்களை பாதுகாக்க, அவற்றை புதைத்து வைத்திருந்தமைக்கான 64 குறிப்புக்கள் செப்பு சுருள்களில் அடங்கியுள்ளன.
அது உண்மையாக இருந்தாலும் எப்போது அந்த புதையல் மீட்கப்படும் என்பதுபுதிராகவே (Interesting mysteries) உள்ளது.
4. கற்பலகைகளை காக்கும் தங்கப்பேழை (THE ARK OF COVENANT)
பல நூற்றாண்டுகளாக தேடப்படும் ஒரு பொக்கிஷமாக இது பார்க்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் பழைய நூலான EXODUS எனும் நூலில் குறிப்பிட்டுள்ளபடி, எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு வந்த யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பத்து கட்டளைகள் அடங்கிய கற்பலகைகளை பாதுகாக்கும் ஒன்றே இந்த ARK OF COVENANT.
இது தங்கத்தால் செய்யப்பட்டு யூதர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தபோதிலும் ஒரு கட்டத்தில் பாலஸ்தீனர்கள் கொள்ளையிட்டனர். எனினும், பின்னர் மீட்கப்பட்டது.
சொலமன் மன்னனின் காலம் வரை ஜெருசலேமிலுள்ள ஒரு கோயிலில் இது பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
பின்னர் பாபிலோனிய படையெடுப்பில் மீண்டும் சூறையாடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. பல நூற்றாண்டுகளாக தேடப்பட்டு வந்த ARK OF COVENANT இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் இதனை மையமாக கொண்டு இந்தியானா ஜோன்ஸ் போன்ற திரைப்படங்களும் வெளியாகின.
5. தொங்கும் தோட்டம் (HANGING GARDENS OF BABYLON)
கி.மு 600 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென கூறப்படும் இந்த தொங்கும் தோட்டம், ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.
வரலாற்று குறிப்புகளின்படி இந்த தொங்கும் தோட்டத்தில் சாதாரண செடி, கொடிகள் மட்டுமன்றி, நீண்டு வளரும் வானுயர மரங்களும் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
ஆனால் இவற்றை நம்பும் வகையில் எந்த ஒரு கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தவில்லை.