பலாபழத்தில் உணவு செய்முறைகள் (Jack fruit recipe-Sweets)
பழுத்த பலாப்பழத்தினைஅரைத்து கூழாக்கி (Jack fruit recipe) அல்வா,பாயசம்,கேசரி, , பேக்கரி வகைகள், பலாப்பழ புட்டு ,கொழுகட்டை, பழுத்த பலாச்சுளையிலிருந்து தேனில் ஊறிய பலாச்சுளை ஆகியவற்றை தயாரிக்கலாம்.
மேலும் குல்பி, ஐஸ்கிரீம்,ஜூஸ், கலவைப்பழ ஜூஸ், ஜாம், மில்க்ஷேக்,மிட்டாய் வகைகள் ஆகிய சுவையான இனிப்புகள் (Jack fruit recipe)போன்றவையும் வீட்டிலேயே தயாரிக்கலாம். பலாப்பழம் அப்படியே சாப்பிடவே மிக தித்திப்பான அற்புத சுவையானது.
ஆனால் பலாப்பழம் வருடத்தில் இரண்டு பருவத்திலேயே கிடைக்கும். இதனால் அதிகமாக கிடைக்கும் சீசன் நேரத்தில் இப்படியான இனிப்பு உணவுகளைச் செய்து அதிக நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.
நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்பதால் உடற்கழிவுகள் இலகுவாக வெளியேற்றிவிடும். இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
பலாபழ அல்வா (Jack fruit Halwa recipe)
இன்று பலாபழத்தை மதிப்பு கூட்டல் செய்தாச்சு..
பலாச்சுளைகள் – 20
கருப்பட்டி/வெல்லம் – 200 கிராம்
முந்திரிப்பருப்பு – 10
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய் – 100 மி.லி.
செய்முறை:
சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கருப்பட்டியை இடித்து சிறிது தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும்.
உருட்டும் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதைப் போட்டு, நெய்விட்டு மிதமான தீயில் கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துப்போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும். சுவையான பலப்பழ அல்வா தயார்!
இதை ஆறு மாதத்திற்கு வைத்து சாப்பிடலாம்.

பலாபழ கேசரி (Kesari)
தேவையான பொருள்கள்
பலாப்பழ துண்டுகள் – 2கப்
சர்க்க்ரை – 1கப்
ரவை – 1கப்
முந்திரி பருப்பு – 15
நெய் – 4ஸ்பூன்
பால் – 1கப்
ஏலக்காய் – 4
பலாப்பழ துண்டுகள் – 2கப்
சர்க்க்ரை – 1கப்
ரவை – 1கப்
முந்திரி பருப்பு – 15
நெய் – 4ஸ்பூன்
பால் – 1கப்
ஏலக்காய் – 4

சிறிது நெய் விட்டு ரவையையும் முந்திரி பருப்பையும் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.பலா பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் பால் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவைத்து சர்க்கரை கரைந்தவுடன் ரவை,சர்க்கரை சேர்த்து கிளரவும்.ரவை வெந்து கேசரி பதம் வந்தவுடன் பலாபழ துண்டு,முந்திரி,நெய்,ஏலக்காய் சேர்த்து நன்கு கிளரி இறக்கவும்.சுவையான பலாபழ கேசரி ரெடி…
பலாப்பழ மில்க்க்ஷேக் (Jack fruit Milkshake)
தேவையான பொருள்கள்
பலாப்பழ சுளை – 10
சர்க்கரை – 4 ஸ்பூன்/ விரும்பிய அளவு
பேரீட்சை – 3
முந்திரி பருப்பு – 5
வால்நட் – 5
காய்ச்சிய பால் – 1கப்
பலாப்பழ சுளை – 10
சர்க்கரை – 4 ஸ்பூன்/ விரும்பிய அளவு
பேரீட்சை – 3
முந்திரி பருப்பு – 5
வால்நட் – 5
காய்ச்சிய பால் – 1கப்
ஐஸ் கட்டி – 1கப்

பலாபழ பாயாசம் (Jack fruit keer)
தேங்காய் பால் – 2 கப்
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் – 6 (பொடி)
முந்திரி – தேவையான அளவு
பிஸ்தா – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை
பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும். ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலத்தூள், தேங்காய்பால் ஊற்றி ஒரு கொதிநிலை வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான இனிப்பான பலாப்பழம் பாயாசம் தயார்.
பலாக்காய் , பலாப்பழம் ஆகியவற்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உணவு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யலாம்.பலவிதமானபதப்படுத்தப்பட்ட பலா உணவுகள் பைகளில், பாட்டில்களில் அடைத்து அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.நல்ல வருமானம்,வேலைவாய்ப்பு தரும் தொழிலாக அமையும்.