பனை,தென்னை வரிசையில் பலா என்னும் கற்பகதரு (Jackfruit)
பலாப்பழத்தைச் (Jackfruit) சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும் போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். பலாப்பழத்தின் இனிப்பு ச் சுவைக்குக் காரணம், இதில் உள்ள ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் தான்.
தென்னை,பனை வரிசையில் பலாவும் ஒரு கற்பகதருவாக பயன்தருகிறது. பலாவின் இலை, காய், பழம், விதை, பால்,மரம், பிஞ்சு, பிசின், தோல் மற்றும் வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
பழவகைகளிலேயே மிகப்பெரிய பழமான பலா இந்தியா,இலங்கை, மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மரமாகும்.
இதனை சக்கை பலவு, பலாசம், வருக்கை, ஏகாரவல்லி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
பலாப்பழத்தில் இனிப்பும் புளிப்பும் அதன் கொட்டையில் துவர்ப்பு,உவர்ப்பு,கார்ப்பு ஆகிய 5 வகை சுவை உள்ளது.
தினமும் 6 வகையான சுவையுள்ள உணவுகளை உண்ணவேண்டும் என்கிறார்கள். ஒரு பலாசுளையை (Jackfruit) சாப்பிட்டாலே 5 சுவையும் ஒன்றாக கிடைத்து விடும்.
பலாபழத்தின் வகைகள் (Type of Jackfruit)
ஊரே மணக்கும் சுவைகொண்ட பலாப்பழம் (Jackfruit), பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். பலாப்பழத்தில் இரு வகைகள் உண்டு. அவை, “வருக்கை பலாப்பழம், கூழன் பலாப்பழம்”.
வருக்கை பலாப்பழம் : இதில், பலாச்சுளைகள் அடர்த்தியாக இருக்கும். இந்த பழத்தை கைகளினால் பிளக்க முடியாது. கத்தி கொண்டு மட்டுமே வெட்ட வேண்டும்.
கூழன் பலாப்பழம் : இதன் பலாச் சுளைகள் மிக தித்திப்பாக இருக்கும். மணம் அதிக வாசனை திறன் கொண்டது. இந்த பழம் பழுத்துவிட்டால் கைகளினால் பிளக்க முடியும்.
“கறி பலாப்பழம்” – இதுவும் சிறியஅளவில் இருக்கும். இதை சமையல் பண்ணபயன்படுத்துவார்கள்.
இதே பலாப்பழத்தின் வேறு இரு ரகங்களும் உண்டு. அவை, அயினி பலாப்பழம், கறி பலாப்பழம். “அயினி பலாப்பழம்” – அளவில் மிகச் சிறியதாகஇருக்கும். இது சற்றே புளிப்பு சுவையுடையது.
சத்துப்பெட்டகமான பலாப்பழம் (Nutritious jackfruit)
நாம் சாப்பிடும் நூறு கிராம் பலாச்சுளையில், புரதம் 3கிராம், கொழுப்பு 0.2கிராம், மாவுப்பொருள் 19.8கிராம், நார்ப்பொருள் 1.4கிராம், சுண்ணாம்பு சத்து 20மில்லிகிராம், பாஸ்பரஸ் 41மில்லிகிராம், இரும்புச் சத்து 0.7மில்லிகிராம் உண்டு.
அதோடு தயாமின் 0.04மி.கிராம், ரைபோஃபிளோவின் 0.15மி.கிராம், நியாசின் 0.4மி.கிராம் விற்றமின் “சி” 7.1மி. கிராம், மெக்னீசியம் 27 மில்லிகிராம், பொட்டாசியம் 19.1மில்லிகிராம், சோடியம் 41.0மில்லிகிராம், தாமிரம் 0.23மில்லிகிராம், குளோரின் 9.1மில்லிகிராம், கந்தகம் 69.2மில்லிகிராம், கரோட்டின் 306மைக்ரோகிராம் போன்ற உயிர் தாது சத்துக்களும் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இத்தனை சத்துப் பொருட்கள் உள்ள பலாச்சுளையை, “சத்துப்பெட்டகம் ” என்று சிறப்பாகச் சொல்லலாம்.
பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது.
நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் பலா!
பலாவில் அதிக அளவில் விற்றமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக விற்றமின் சி, ரத்ததில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மையுடையவை.
எந்த நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமாகும். இதற்கு ஒரு கப் பலாப்பழம் சாப்பிட்டாலே போதுமானது.
கொரோனா நோய் தொற்று வேகமாக பரவிய நேரத்தில் இதன் இலையில் கசாயம் செய்து பலர் தம்மைக் காத்தனர்.
பலாப்பழம் (Jackfruit)
வாத பித்த கபத்தை நீக்கும் பலா பிஞ்சு!
பலா பிஞ்சுகளை எடுத்து சுத்தப்படுத்தி அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால், அதீத தாகம் தணியும்.
நீர்சுருக்கு, நெஞ்செரிச்சல் குணமாகும். உடலுக்கு வலு கொடுக்கும். வாத பித்த கபத்தை சீராக வைத்திருக்கும். நரம்புத் தளர்வைப் போக்கி உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும்.
அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும் எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
பலாக் கொட்டை
பலாப்பழம் இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால் சிலர் பழத்தை அதிகம் சாப்பிட்டு, வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும்.
பலாக் கொட்டைகளை சுட்டும். அவித்தும் சாப்பிட்டால் காரத்தோடு சாப்பிடுங்கள் அப்போது வாயுத் தொல்லைகளை நீக்க உதவும்.
பலா இலை
பலா இலைகளை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் அருந்திவந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் ஆறும்.
பல்வலி நீங்கும்.அல்லது பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கியும் பயன்படுத்தலாம்.
பலா இலையின் கொழுந்தை அரைத்து சிரங்கின் மீது பூசினால் சிரங்கு விரைவில் ஆறும்.
மரம்
பலாமரம் மிருதங்கம்,வீணை,தபேலாபோன்ற இசைக்கருவிகள் செய்வதற்கு சிறப்பானது. வீட்டின் ஜன்னல், கதவுகள்,பலவிதமான மரச்சாமான்கள், பொம்மைகள் செய்வதற்கு பயன்படும்.
பலாப்பழம் தினமும் சப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of daily consumption of jackfruit)
பலாப்பழம் சுவையில் மட்டுமல்ல… அதில் அடங்கியுள்ள மருத்துவ குணத்திலும் டாப் தான்.
பலாப்பழத்தில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.
பலாப்பழத்தின விதையில் உள்ள விற்றமின் ஏ, கண் பார்வைக்கும் தலைமுடிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. முக்கியமாக முடியின் ஆரோக்கியத்தையும், முடியில் ஏற்படும் வறட்சியையும் தடுக்கும்.
கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எனவே கண்களின் நலம் பேண பலாப்பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.
பலாவில் அதிக அளவில் விற்றமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக விற்றமின் சி, ரத்ததில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மையுடையவை.
