ஜாலியன்வாலா பாக் (Jallianwala bhag)
இந்திய சுதந்திர வரலாற்றில் இன்னும் ரத்தக்கறை மறையாமல் இருக்கும் சம்பவம் தான் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள்.
சுதந்திரம் எனும் வேள்வி கொழுந்து விட்டு எரிய காரணமாக இருந்த, இந்தக் கோர சம்பவம் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ஜெனரல் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டன் ராணுவத்தினரால் பீரங்கி, துப்பாக்கி சூட்டு நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.
ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் இடம்பெற்றது.
கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவை சுடப்பட்டன. பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட விசாரணை தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
1919 மார்ச் 1 அன்று சத்தியாக்கிரக நடவடிக்கை துவக்கியது. பிரிட்டன் ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள்.
அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் பேராட்ட உந்துதலை எழுச்சியை ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர்.
சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் தொடர்புகள் பற்றி இக்குழு ஆராய்ந்தது.
இதனடிப்படையில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது.
ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் பெருகின. 1919 மார்ச் 29 ஜாலியான் வாலாபாக் திடலில் பெருங்கூட்டம் திரண்டது.
மார்ச் 30 அன்று பெரும் கடையடைப்பு நடத்த முன்னேற்பாடுகள் நடந்தன. கடையடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.
பொதுமக்கள் சுயவிழிப்பின் பேரில் கலந்து கொண்டனர். இப்போக்கு ஆட்சியாளருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தில்லியிலும் கடையடைப்பு நடந்தது.
அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் சுட்டதில் 8 பேர் மாண்டனர்.
மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்பு கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன.
ரௌலட் சட்டத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பும் கிளர்ச்சியும்பெரும் போராட்டமாகவே வளர்ச்சியடைந்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டம் தான் ஜாலியன்வாலாபாக் படுகொலை.
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு என்ன காரணம்?(Reason for Jallianwala bhag)
பிரபல பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி, ஜெனரல் டயர், 13 ஆம் ஆண்டு ஏப்ரல் 1919 ஆம் தேதி அமிர்தசரஸில் அனைத்து பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இருப்பினும், சீக்கியர்களின் முக்கிய மதப் பண்டிகையான பைசாகியின் மங்களகரமான நிகழ்வைக் கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் ஜல்லிவாலா பாக்கில் கூடினர்.
இந்த கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். ஜெனரல் டயர் சட்டசபையைப் பற்றி கேள்விப்பட்டவுடன் தனது வீரர்களுடன் அங்கு சென்று,வெளியேறும் ஒரே வழியைத் தடுத்து, நிராயுதபாணியான கூட்டத்தை சுடுமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார்.
நூற்றுக்கணக்கான மக்கள் தோட்டாக்களால் உடனடியாக கொல்லப்பட்டனர் மற்றும் பலர் துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட நெரிசலில் நசுக்கப்பட்டு இறந்தனர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
ஏப்ரல் 13, 1919 அன்று தான் குருகோவிந்த் சிங் கால்ஸா (சீக்கிய அறப்படை) இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, அம்ரித்சரில் இந்நாள் சிறப்புடன் கொண்டாடப்பட ஏற்பாடாயிற்று.
அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. இந்நிலையில் ராணுவ ஜெனரல் டையர் 100 வெள்ளையினர் படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு உத்தரவிட்டான்.
திறந்திருந்த ஒரேயொரு வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். சுவர்களின் மீது ஏறிக் குதித்தனர். வேறு சிலர் சூட்டிலிருந்து தப்பிக்க திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர்.
இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆகும்.
ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால் காயப்பட்டவர்கள் அங்கேயே காலை வரையில் இருக்க வேண்டியதாகி விட்டது.
இந்நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், பஞ்சாப் வீரர் உத்தம் சிங், லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் வைத்து டையரை சுட்டுக் கொன்றார்.
இப்போதும் ஜாலியன்வாலா பாக்கில் படுகொலை நடந்த இடத்தில், குண்டுகள் துளைக்கப்பட்ட சுவர்களை பார்க்கலாம்.
ரத்த கறைகளும் தென்படும்.
இந்திய வரலாற்றின் இருண்ட நாட்களில் ஒன்றான பைசாகியின் அமைதியான கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டயர் கொன்றது.
இங்கு நடந்த கொடுமைகளை ஒத்த பல பெரிய மற்றும் சிறிய கட்டமைப்புகள் இன்றும் தோட்டத்தில் உள்ளன.
இந்த கட்டமைப்புகளுக்கு மத்தியில், அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக வீசப்பட்ட தோட்டாக்களின் அடையாளங்களைத் தாங்கிய ஒரு சுவர் மற்றும் இந்த படுகொலையில் இருந்து தங்களைக் காப்பாற்ற பலர் குதித்த கிணறும் உள்ளது.
ஜாலியன் வாலாபாக் பார்க்க சிறந்த நேரம் (Jallianwala bhag)
ஜாலியன் வாலாபாக் ஆண்டு முழுவதும் பார்க்க முடியும் என்றாலும், குளிர்காலம் மற்றும் கோடை காலங்களைத் தவிர்த்து அக்டோபர் மற்றும் நவம்பர் மற்றும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் சிறந்தது.
நீங்கள் எப்போதாவது ஜாலியன் வாலாபாக்(Jallianwala bhag) செல்ல முடிவு செய்தால், மற்றும் தோட்டத்தை ஆராயும் போது உங்களால் முடிந்தவரை அமைதியாக இருந்து அந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துங்கள்.
இன்று ஜாலியன்வாலா பாக் படுகொலையின் 124 ஆவது நினைவு தினம், இதுவும் ஒரு தினம் என்று கடந்துவிடாமல் உயிர்நீத்த மக்களுக்கு நினைவுகள் மூலம் உயிர்கொடுப்போம்!